< யோபு 29 >

1 பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
És továbbá előadta Jób a példázatát és mondta:
2 “கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
Vajha úgy volnék, mint a múltnak hónapjaiban, mint a napokban, mikor Isten megőrzött engem;
3 அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
mikor ragyogott fejem fölött a mécsese s világosságánál sötétben jártam!
4 தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
Mint a hogy voltam férfikorom napjaiban, midőn Isten meghittsége volt sátorom felett;
5 அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
midőn még velem volt a Mindenható, körülöttem gyermekeim;
6 என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
midőn lépteim tejfölben fürödtek; s a szikla ontott mellettem olajpatakokat.
7 நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் இருக்கையைப் போடும்போது,
Midőn a kapuhoz mentem a városba, a piaczon választottam ülőhelyemet:
8 வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்து நிற்பார்கள்.
megláttak ifjak s elbújtak, aggastyánok fölkeltek, megállottak;
9 பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
vezérek visszatartották beszédjöket és kezüket tették szájukra;
10 ௧0 பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
előkelőknek hangja elbújt és nyelvök inyökhöz tapadt.
11 ௧௧ என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
Mert fül, mely hallott, boldognak mondott engem és szem, mely látott, tanúskodott mellettem.
12 ௧௨ முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் காப்பாற்றினேன்.
Mert megmentettem a szegényt, ki esedezett, és az árvát, kinek nem volt segítője.
13 ௧௩ அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.
Bujdosónak áldása reám szállt és özvegynek szívét ujjongtattam.
14 ௧௪ நீதியை அணிந்துகொண்டேன்; அது என் ஆடையாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
Igazságot öltöttem fel s az felöltött engem, mint köpeny és süveg volt jogosságom.
15 ௧௫ நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன்.
Szeme voltam a vaknak és lába én a sántának;
16 ௧௬ நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
apjuk én a szűkölködőknek, és annak, kit nem ismertem, pörét átkutattam.
17 ௧௭ நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
Összetörtem a jogtalannak zápfogait, és fogai közül vetettem ki a ragadmányt.
18 ௧௮ என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.
Mondtam: fészkemmel együtt fogok kimúlni s mint a főnix sokasítom napjaimat;
19 ௧௯ என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது.
gyökerem nyitva van a víznek, és harmat időz gallyamon;
20 ௨0 என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
dicsőségem szinte új nálam s íjam a kezemben megifjodik.
21 ௨௧ எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
Rám hallgattak és várakoztak és csendben figyeltek tanácsomra.
22 ௨௨ என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது.
Szavam után nem szóltak többet, rájuk cseppegett beszédem;
23 ௨௩ மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
s mint esőre várakoztak: reám, és szájukat tátották tavaszi esőre.
24 ௨௪ நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
Mosolyogtam rájuk, nem hitték; de arczom világosságát nem sötétítették el.
25 ௨௫ அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, நான் தலைவனாய் அமர்ந்து, படைக்குள் ராஜாவைப்போலவும், துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.
Választottam útjokat s fejtől ültem s ott időztem, mint király a csapatban mint a ki gyászolókat vigasztal.

< யோபு 29 >