< யோபு 29 >
1 ௧ பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
Et Job continuant à parler en discours relevés, dit:
2 ௨ “கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
O! qui me rendra les mois de jadis, et les jours, où Dieu me gardait,
3 ௩ அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
où, sa lampe brillant au-dessus de ma tête, à sa clarté je perçais les ténèbres;
4 ௪ தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
où j'étais au temps de mon automne; quand Dieu avec sa cour veillait sur ma tente;
5 ௫ அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
quand le Tout-puissant était encore avec moi, qu'autour de moi j'avais mes enfants;
6 ௬ என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
quand mes pieds baignaient dans le lait, et que le rocher me versait des ruisseaux d'huile;
7 ௭ நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் இருக்கையைப் போடும்போது,
quand je me rendais à la Porte dans la ville, et que je mettais mon siège dans la Place?
8 ௮ வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்து நிற்பார்கள்.
A mon aspect les jeunes se tiraient en arrière, et les vieux se levaient, et demeuraient debout;
9 ௯ பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
les princes s'arrêtaient en parlant, et mettaient leur main sur leur bouche;
10 ௧0 பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
la voix des nobles restait muette, et leur langue, collée à leur palais.
11 ௧௧ என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
Car, sur ma renommée, on me disait heureux, et à ma vue, on me donnait des éloges.
12 ௧௨ முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் காப்பாற்றினேன்.
C'est que je sauvais le pauvre gémissant, et l'orphelin qui était sans aide;
13 ௧௩ அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.
l'homme qui périssait, avait à me bénir, et je mettais la joie dans le cœur de la veuve;
14 ௧௪ நீதியை அணிந்துகொண்டேன்; அது என் ஆடையாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
je prenais la justice pour mon vêtement, et elle me prenait pour son vêtement; mon équité m'était comme un manteau et un turban;
15 ௧௫ நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன்.
je servais d'œil à l'aveugle, et de pieds au boiteux;
16 ௧௬ நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
j'étais un père pour le pauvre, et je connaissais de la cause de l'inconnu,
17 ௧௭ நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
et je brisais la mâchoire du méchant, et d'entre ses dents lui arrachais sa proie.
18 ௧௮ என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.
Aussi je me disais: Je mourrai avec mon aire, et comme le Phénix, je prolongerai mes jours;
19 ௧௯ என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது.
ma racine sera exposée aux eaux, et la rosée passera la nuit sur mes branches;
20 ௨0 என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
ma gloire me restera toujours jeune, et mon arc en ma main prendra force nouvelle.
21 ௨௧ எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
Ils m'écoutaient avec attente, et à mon avis ils se taisaient;
22 ௨௨ என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது.
après moi ils ne prenaient plus la parole, et sur eux mon discours s'épanchait.
23 ௨௩ மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
Ils m'attendaient, comme on attend la rosée, et leur bouche s'ouvrait, comme pour recevoir une pluie du printemps.
24 ௨௪ நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
Je leur souriais, quand ils perdaient courage; et ils ne pouvaient m'ôter la sérénité de mon front.
25 ௨௫ அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, நான் தலைவனாய் அமர்ந்து, படைக்குள் ராஜாவைப்போலவும், துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.
Si je prenais mon chemin vers eux, j'y avais la place d'un chef, et j'étais assis comme un roi, au milieu de la foule, comme un consolateur, parmi les affligés.