< யோபு 28 >
1 ௧ வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் இடமுமுண்டு.
Да, сребро има жице, и злато има место где се топи.
2 ௨ இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.
Гвожђе се вади из праха, и из камена се топи бронза.
3 ௩ மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடைசிவரை ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான்.
Мраку поставља међу, и све истражује човек до краја, и камење у тами и у сену смртном.
4 ௪ கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனிதரால் வற்றிப்போகவைத்துச் செல்லுகிறான்.
Река навре с места свог да јој нико не може приступити; али се одбије и одлази трудом човечјим.
5 ௫ பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, நெருப்பால் மாறினது போலிருக்கும்.
Из земље излази хлеб, и под њом је друго, као огањ.
6 ௬ அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
У камену је њеном место сафиру, а онде је прах златни.
7 ௭ ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது; கழுகின் கண்ணும் அதைக் கண்டதில்லை;
Те стазе не зна птица, нити је виде око крагујево;
8 ௮ கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
Не угази је младо зверје, нити њом прође лав.
9 ௯ அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேருடன் புரட்டுகிறான்.
На кремен диже руку своју; превраћа горе из дна.
10 ௧0 கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவனுடைய கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
Из стене изводи потоке, и свашта драгоцено види Му око.
11 ௧௧ ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
Уставља реке да не теку, и шта је сакривено износи на видело.
12 ௧௨ ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?
Али мудрост где се налази? И где је место разуму?
13 ௧௩ அதின் விலை மனிதனுக்குத் தெரியாது; அது மக்கள் வாழ்கிற தேசத்திலே கிடைக்கிறதில்லை.
Не зна јој човек цене, нити се находи у земљи живих.
14 ௧௪ ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
Бездана вели: Није у мени; и море вели: Није код мене.
15 ௧௫ அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் முடியாது.
Не може се дати чисто злато за њу, нити се сребро измерити у промену за њу.
16 ௧௬ ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
Не може се ценити златом офирским, ни драгим онихом ни сафиром.
17 ௧௭ பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது.
Не може се наједначити с њом ни злато ни кристал, нити се може променити за закладе златне.
18 ௧௮ பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது.
Од корала и бисера нема спомена, јер је вредност мудрости већа него драгом камењу.
19 ௧௯ எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
Не може се с њом изједначити топаз етиопски, нити се може ценити чистим златом.
20 ௨0 இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?
Откуда, дакле, долази мудрост? И где је место разуму?
21 ௨௧ அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாயத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
Сакривена је од очију сваког живог, и од птица небеских заклоњена.
22 ௨௨ நாசமும், மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
Погибао и смрт говоре: Ушима својим чусмо славу њену.
23 ௨௩ தேவனோ அதின் வழியை அறிவார், அது இருக்கும் இடம் அவருக்கே தெரியும்.
Бог зна пут њен, и познаје место њено.
24 ௨௪ அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
Јер гледа до крајева земаљских и види све што је под свим небом.
25 ௨௫ அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து, தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு,
Кад даваше ветру тежину, и мераше воду мером,
26 ௨௬ மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
Кад постављаше закон дажду и пут муњи громовној.
27 ௨௭ அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
Још је онда виде и огласи је, уреди је и претражи је.
28 ௨௮ மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்” என்று சொன்னான்.
А човеку рече: Гле, страх је Божји мудрост, и уклањати се ода зла јесте разум.