< யோபு 27 >
1 ௧ யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
Job replied again [to his three friends],
2 ௨ “என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை,
“Almighty God has refused to treat me justly/fairly. He has caused me to feel bitter/resentful. But [just as surely] as he lives,
3 ௩ என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று,
as long as God’s Spirit enables me to breathe,
4 ௪ என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
I will not lie; I [SYN] will not say anything to deceive anyone.
5 ௫ நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன்.
I will never admit that what you [three] have said is true; until the day that I die, I will insist that I have not done things that are wrong.
6 ௬ என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது.
I will say that I am innocent, and never (say anything different/change what I say); my conscience will never reproach me as long as I live.
7 ௭ என் பகைவன் ஆகாதவனைப்போலவும், எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக.
“I want my enemies to be [punished] like all wicked [people are punished]; I want [God to punish] those who oppose me like [he punishes all] unrighteous [people].
8 ௮ அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன?
When [it is time for] God [to] get rid of godless/wicked people and [to] cause them to die, there is absolutely nothing good [RHQ] that they can confidently expect [to happen to them].
9 ௯ ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ?
When they experience troubles, (will God hear them call [out to him for help]?/God certainly will not hear them call out [to him for help].) [RHQ]
10 ௧0 அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
(Will they be happy about what Almighty [God] does?/They certainly will not be happy about what Almighty [God] does.) [RHQ] (Will they [begin to] pray to him frequently?/They certainly will not [begin to] pray to him frequently.) [RHQ] [Certainly not!]
11 ௧௧ தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
“I will teach you [three] something about the power [MTY] of Almighty God [MTY]; I will reveal what he is thinking.
12 ௧௨ இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
But you [three] have seen for yourselves [what God has done]; so (why are you saying such nonsense?/you should not be saying such nonsense.) [RHQ]
13 ௧௩ பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில்,
“[I will tell you] what Almighty God does to wicked people, the things that he does to people who oppress others.
14 ௧௪ அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
[Even] if they have many children, [many of] those children will die in wars [MTY], and their [other] children will [die because they do] not have enough food to eat.
15 ௧௫ அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவர்களுடைய விதவைகளும் புலம்புவதில்லை.
Their children who are still alive will die from diseases, and their widows will not [even] mourn for them.
16 ௧௬ அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும்,
Sometimes [wicked people] accumulate a huge amount [SIM] of silver and pile up clothes like [SIM] those clothes were a pile of clay,
17 ௧௭ அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
but [those wicked people will die, and then] righteous people will wear those clothes, and honest/innocent people will get their silver and divide it [among themselves].
18 ௧௮ அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும்.
The houses that they build are [as frail/fragile] as [SIM] spider webs, or they are like flimsy huts that watchmen live in [while they guard people’s fields].
19 ௧௯ அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
Wicked people are rich when they lie down [at night], but when they wake up [in the morning, they find out that] their money has disappeared.
20 ௨0 வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.
“Things that terrify them [PRS] strike them like a flood [SIM]; during the night a whirlwind carries them away.
21 ௨௧ கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
[It is as though] the wind from the east picks them up and carries them away from their homes, and they disappear.
22 ௨௨ அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான் ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;
That wind strikes them without pitying them while they are running away, trying to escape from its force/power [MTY].
23 ௨௩ மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.
That wind [is like someone] clapping his hands [MET] at them [to ridicule them], howling at them wherever they run to.”