< யோபு 26 >
2 ௨ “பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?
無能的人蒙你何等的幫助! 膀臂無力的人蒙你何等的拯救!
3 ௩ நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்?
無智慧的人蒙你何等的指教! 你向他多顯大知識!
4 ௪ யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?
你向誰發出言語來? 誰的靈從你而出?
5 ௫ தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.
在大水和水族以下的陰魂戰兢。
6 ௬ அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol )
在上帝面前,陰間顯露; 滅亡也不得遮掩。 (Sheol )
7 ௭ அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
上帝將北極鋪在空中, 將大地懸在虛空;
8 ௮ அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.
將水包在密雲中, 雲卻不破裂;
9 ௯ அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.
遮蔽他的寶座, 將雲鋪在其上;
10 ௧0 அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும்.
在水面的周圍劃出界限, 直到光明黑暗的交界。
11 ௧௧ அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
天的柱子因他的斥責震動驚奇。
12 ௧௨ அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
他以能力攪動大海; 他藉知識打傷拉哈伯,
13 ௧௩ தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது.
藉他的靈使天有妝飾; 他的手刺殺快蛇。
14 ௧௪ இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.
看哪,這不過是上帝工作的些微; 我們所聽於他的是何等細微的聲音! 他大能的雷聲誰能明透呢?