< யோபு 24 >
1 ௧ சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
Zašto svemoguæemu nijesu sakrivena vremena? i koji ga znaju, ne vide dana njegovijeh?
2 ௨ சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி, மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள்.
Meðe pomièu bezbožni, otimaju stado i pasu;
3 ௩ தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்.
Magarca sirotama odgone; u zalogu uzimaju vola udovici;
4 ௪ தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள்.
Siromahe odbijaju s puta; ubogi u zemlji kriju se svi.
5 ௫ இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும்.
Gle, kao divlji magarci u pustinji izlaze na posao svoj ustajuæi rano na plijen; pustinja je hrana njima i djeci njihovoj;
6 ௬ துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.
Žanju njivu i beru vinograd koji nije njihov;
7 ௭ குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், உடையில்லாமல் இரவுதங்கி,
Gola nagone da noæuje bez haljine, koji se nemaju èim pokriti na zimi,
8 ௮ மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள்.
Okisli od pljuska u gori, nemajuæi zaklona, privijaju se k stijeni.
9 ௯ அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள்.
Grabe siroèe od dojke i sa siromaha skidaju zalog.
10 ௧0 அவனை உடையில்லாமல் நடக்கவும், பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,
Gologa ostavljaju da ide bez haljine, i one koji nose snopove da gladuju.
11 ௧௧ தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள்.
Koji meðu njihovijem zidovima ulje cijede i grožðe u kacama gaze, podnose žeð.
12 ௧௨ ஊரில் மனிதர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை.
Ljudi u gradu uzdišu, i duše pobijenijeh vièu, a Bog ne ukida toga.
13 ௧௩ அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள்.
Oni se protive svjetlosti, ne znajuæi za putove njezine i ne staju na stazama njezinijem.
14 ௧௪ கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று, இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான்.
Zorom ustajuæi krvnik ubija siromaha i ubogoga; a noæu je kao lupež.
15 ௧௫ விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
I oko kurvarovo pazi na sumrak govoreæi: da me oko ne vidi. I sakriva lice.
16 ௧௬ அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள்.
Prokopavaju po mraku kuæe, koje obdan sebi zabilježe; ne znaju za svjetlost.
17 ௧௭ விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான்.
Jer je zora njima svjema sjen smrtni; ako ih ko pozna, strah ih je sjena smrtnoga.
18 ௧௮ நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை.
Brzi su kao povrh vode, proklet je dio njihov na zemlji; neæe vidjeti puta vinogradskoga.
19 ௧௯ வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol )
Kao što suša i vruæina grabi vode šnježne, tako grob grješnike. (Sheol )
20 ௨0 அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; புழு திருப்தியாக அவனைத் தின்னும்; அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை; அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும்.
Zaboravlja ih utroba materina, slatki su crvima, ne spominju se više; kao drvo skršiæe se nepravednik.
21 ௨௧ பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான்.
Združuje s njim nerotkinju koja ne raða, i udovici ne èini dobra.
22 ௨௨ தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை.
Grabi jake svojom silom; ostane li koji, ne uzda se u život svoj.
23 ௨௩ தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.
Da mu Bog u što æe se pouzdati; ali oèi njegove paze na njihove pute.
24 ௨௪ அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
Uzvise se za malo, pa ih nema; padaju i ginu kao svi drugi, i kao vrh od klasa otsijecaju se.
25 ௨௫ அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.
Nije li tako? ko æe me utjerati u laž i obratiti u ništa rijeèi moje?