< யோபு 23 >
2 ௨ “இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைவிட என் வாதை கடினமானது.
«Endå gjeld klaga mi for tråss, tungt legg eg handi på min sukk.
3 ௩ நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் இருக்கைக்கு முன்பாக வந்து சேர்ந்து,
Berre eg kunde finna honom og koma til hans bustad fram!
4 ௪ என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
Då la eg fram for han mi sak og fyllte munnen min med prov.
5 ௫ அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
Då høyrde eg kva svar han gav, og merka det han sa til meg.
6 ௬ அவர் தம்முடைய மகா வல்லமையினால் என்னுடன் வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.
Vilde med magt han mot meg standa? Nei, lyda på meg vilde han.
7 ௭ அங்கே சன்மார்க்கன் அவருடன் வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் விலக்கிக் காப்பாற்றிக்கொள்வேன்.
Ein skuldfri stod då for han fram; for alltid slapp eg domar min.
8 ௮ இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை.
Gjeng eg i aust, han er’kje der; mot vest, eg vert han ikkje var;
9 ௯ இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார்.
i nord han verkar, ei eg ser han, han snur mot sud, eg ser han ikkje.
10 ௧0 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
For all den veg eg fer han kjenner; prøvde han meg, eg var som gull.
11 ௧௧ என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன்.
Min fot hev fylgt i faret hans; hans veg eg gjeng ubrigdeleg,
12 ௧௨ அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன்.
veik ei frå det hans lippa baud, meir enn mi lov eg lydde hans.
13 ௧௩ அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார்.
Men ein er han, kven hindrar honom? Det han hev hug til, gjer han og.
14 ௧௪ எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
Han um min lagnad avgjerd tek, og hev med meg so mangt i emning.
15 ௧௫ ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
Eg difor ræddast for hans åsyn, når eg det minnest, skjelv eg for han.
16 ௧௬ தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார்.
Ja, Gud hev brote ned mitt mod, og Allvald hev gjort meg fælen,
17 ௧௭ இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.
ei er det myrkret som meg tyner, og ei mi eigi myrke åsyn.