< யோபு 22 >
1 ௧ அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக:
І заговорив теманянин Еліфа́з та й сказав:
2 ௨ “ஒரு மனிதன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ?
„Чи для Бога люди́на кори́сна? Бо мудрий кори́сний самому собі!
3 ௩ நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
Хіба Всемогу́тній бажає, щоб ти ніби праведним був? І що за ко́ристь Йому, як дороги свої ти вважаєш невинними сам?
4 ௪ அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ?
Чи Він буде карати, тебе боячи́сь, і чи пі́де з тобою на суд?
5 ௫ உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ?
Хіба твоє зло не велике? Таж твоїм беззако́нням немає кінця!
6 ௬ காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர்.
Таж з братів своїх брав ти заста́ву даремно, а з наго́го одежу стягав!
7 ௭ மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.
Не поїв ти водою знемо́женого, і від голодного стримував хліб.
8 ௮ பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; கனவான் அதில் குடியேறினான்.
А си́льна люди́на — то їй оцей край, і поче́сний у ньому сидітиме.
9 ௯ விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது.
Ти напо́рожньо вдів відсилав, і сирі́тські раме́на гноби́лись, —
10 ௧0 ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது.
тому па́стки тебе оточи́ли, і жахає тебе наглий страх,
11 ௧௧ நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, பெருவெள்ளம் உம்மை மூடுகிறது.
твоє світло стемні́ло, нічого не бачиш, і велика вода закриває тебе.
12 ௧௨ தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
Чи ж Бог не високий, як небо? Та на зо́рі уго́ру поглянь, які стали високі вони!
13 ௧௩ நீர்: தேவன் எப்படி அறிவார், இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
А ти кажеш: „Що ві́дає Бог? Чи судитиме Він через млу?
14 ௧௪ அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
Хмари — завіса Йому, й Він не бачить, і ходить по кру́зі небесному“.
15 ௧௫ அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
Чи ти будеш триматись дороги відвічної, що нею ступа́ли безбожні,
16 ௧௬ காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
що невча́сно були вони згу́блені, що річка розлита, підвалина їх,
17 ௧௭ தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
що до Бога казали вони: „Відступися від нас!“та: „Що́ зробить для нас Всемогутній?“
18 ௧௮ ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
А Він доми їхні напо́внив добром! Але віддалилась від мене порада безбожних!
19 ௧௯ எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
Справедливі це бачать та ті́шаться, і насміхається з нього невинний:
20 ௨0 குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
„Справді ви́гублений наш противник, а останок їх ви́жер огонь!“
21 ௨௧ நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
Заприязни́ся із Ним, та й май спо́кій, — цим при́йде на тебе добро́.
22 ௨௨ அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
Зако́на візьми з Його уст, а слова Його в серце своє поклади.
23 ௨௩ நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர்.
Якщо ве́рнешся до Всемогутнього, — будеш збудо́ваний, і віддали́ш беззаконня з наметів своїх.
24 ௨௪ அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
І викинь до по́роху золото, і мов камінь з потоку офі́рське те золото, —
25 ௨௫ அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.
і буде тобі Всемогу́тній за золото та за срі́бло блискуче тобі!
26 ௨௬ அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
Бо тоді Всемогутнього ти покохаєш і до Бога піді́ймеш обличчя своє, —
27 ௨௭ நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
будеш благати Його — й Він почує тебе, і ти обітниці свої надолу́жиш.
28 ௨௮ நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
А що́ постано́виш, то ви́повниться те тобі, й на дорогах твоїх буде ся́яти світло.
29 ௨௯ மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.
Бо знижує Він спину пи́шного, хто ж смиренний, тому помагає.
30 ௩0 குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.
Рятує Він і небезви́нного, і той чистото́ю твоїх рук урято́ваний буде“.