< யோபு 19 >
2 ௨ “நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
你們攪擾我的心, 用言語壓碎我要到幾時呢?
3 ௩ இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.
你們這十次羞辱我; 你們苦待我也不以為恥。
4 ௪ நான் தவறாக நடந்தது உண்மையானாலும், என் தவறு என்னுடன்தான் இருக்கிறது.
果真我有錯, 這錯乃是在我。
5 ௫ நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால்,
你們果然要向我誇大, 以我的羞辱為證指責我,
6 ௬ தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
就該知道是上帝傾覆我, 用網羅圍繞我。
7 ௭ இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.
我因委曲呼叫,卻不蒙應允; 我呼求,卻不得公斷。
8 ௮ நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
上帝用籬笆攔住我的道路,使我不得經過; 又使我的路徑黑暗。
9 ௯ என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
他剝去我的榮光, 摘去我頭上的冠冕。
10 ௧0 அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
他在四圍攻擊我,我便歸於死亡, 將我的指望如樹拔出來。
11 ௧௧ அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
他的忿怒向我發作, 以我為敵人。
12 ௧௨ அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து, எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள்.
他的軍旅一齊上來, 修築戰路攻擊我, 在我帳棚的四圍安營。
13 ௧௩ என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.
他把我的弟兄隔在遠處, 使我所認識的全然與我生疏。
14 ௧௪ என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள். என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.
我的親戚與我斷絕; 我的密友都忘記我。
15 ௧௫ என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன்.
在我家寄居的, 和我的使女都以我為外人; 我在他們眼中看為外邦人。
16 ௧௬ நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.
我呼喚僕人, 雖用口求他,他還是不回答。
17 ௧௭ என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன்.
我口的氣味,我妻子厭惡; 我的懇求,我同胞也憎嫌。
18 ௧௮ சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
連小孩子也藐視我; 我若起來,他們都嘲笑我。
19 ௧௯ என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.
我的密友都憎惡我; 我平日所愛的人向我翻臉。
20 ௨0 என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
我的皮肉緊貼骨頭; 我只剩牙皮逃脫了。
21 ௨௧ என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
我朋友啊,可憐我!可憐我! 因為上帝的手攻擊我。
22 ௨௨ தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்? என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன?
你們為甚麼彷彿上帝逼迫我, 吃我的肉還以為不足呢?
23 ௨௩ ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு,
惟願我的言語現在寫上, 都記錄在書上;
24 ௨௪ அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.
用鐵筆鐫刻, 用鉛灌在磐石上,直存到永遠。
25 ௨௫ என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
我知道我的救贖主活着, 末了必站立在地上。
26 ௨௬ இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
我這皮肉滅絕之後, 我必在肉體之外得見上帝。
27 ௨௭ அவரை நானே பார்ப்பேன்; வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது.
我自己要見他, 親眼要看他,並不像外人。 我的心腸在我裏面消滅了!
28 ௨௮ காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது, நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.
你們若說:我們逼迫他要何等地重呢? 惹事的根乃在乎他;
29 ௨௯ பட்டயத்திற்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று, கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான்.
你們就當懼怕刀劍; 因為忿怒惹動刀劍的刑罰, 使你們知道有報應。