< யோபு 18 >

1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
A odpowiadając Bildad Suhytczyk rzekł:
2 “நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
Dokądże nie uczynicie końca mowom? pomyślcie pierwej, a potem mówić będziemy.
3 நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?
Czemuż nas poczytają jako bydło? zdajemy się mu przemierzłymi, jako sami widzicie.
4 கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?
Ty, który duszę twoję tracisz w zapalczywości twojej, azaż dla ciebie będzie opuszczona ziemia, a będą przeniesione skały z miejsca swego?
5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
Owszem, światłość niepobożnych zgaśnie, i nie będzie świeciła iskra ognia ich.
6 அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
Światło się zaćmi w przybytku jego, i pochodnia jego nad nim zgaśnie.
7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.
Ściśnione będą kroki siły jego, a porazi go rada jego.
8 அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
Bo zawiodą w sieci nogi jego, i w uwikłaniu chodzić będzie.
9 கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
Uchwyci go sidło za piętę jego, i przemoże go łupieżca.
10 ௧0 அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
Skryty jest w ziemi powróz jego, a samołówka jego na ścieszce.
11 ௧௧ சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.
Zewsząd go straszyć będą strachy, a nacierać będą na nogi jego.
12 ௧௨ அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.
Wymorzy się głodem siła jego, a zginienie pogotowiu jest przy boku jego.
13 ௧௩ அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும்.
Pożre żyły skóry jego, pożre członki jego pierworodny śmierci.
14 ௧௪ அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும்.
Ufanie jego będzie wykorzenione z przybytku jego, a przywiedzie go do króla strachów.
15 ௧௫ அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும்.
Będzie mieszkał strach w przybytku jego, chociaż nie był jego, a siarką będzie potrząśnione mieszkanie jego.
16 ௧௬ கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.
Ze spodku korzeń jego uschnie, a z wierzchu będzie obcięta gałąź jego.
17 ௧௭ அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.
Pamiątka jego zginie z ziemi, a imienia jego nie wspomną po ulicach.
18 ௧௮ அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
Wypędzą go z światłości do ciemności, a z okręgu świata wyrzucą go.
19 ௧௯ அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை.
Nie będzie syn ani wnuk między ludem jego, i nikt nie pozostanie w mieszkaniach jego.
20 ௨0 அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல, கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள்.
Nade dniem jego zdumiewają się potomkowie, a przodków ogarnie strach.
21 ௨௧ அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.
Takoweć są mieszkania niezbożnego, i do tego przychodzi temu, który nie zna Boga.

< யோபு 18 >