< யோபு 11 >
1 ௧ அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் மறுமொழியாக:
拿瑪人瑣法回答說:
2 ௨ “ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ? வாயடிக்கிறவன் நீதிமானாக விளங்குவானோ?
這許多的言語豈不該回答嗎? 多嘴多舌的人豈可稱為義嗎?
3 ௩ உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ? நீர் கேலிசெய்யும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
你誇大的話豈能使人不作聲嗎? 你戲笑的時候豈沒有人叫你害羞嗎?
4 ௪ என் சொல் சுத்தம் என்றும், நான் தேவனாகிய உம்முடைய பார்வைக்கு சுத்தமானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.
你說:我的道理純全; 我在你眼前潔淨。
5 ௫ ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாகத் தம்முடைய உதடுகளைத் திறந்து,
惟願上帝說話; 願他開口攻擊你,
6 ௬ உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரண்டுமடங்காக இருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.
並將智慧的奧祕指示你; 他有諸般的智識。 所以當知道上帝追討你 比你罪孽該得的還少。
7 ௭ தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ?
你考察就能測透上帝嗎? 你豈能盡情測透全能者嗎?
8 ௮ அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol )
他的智慧高於天,你還能做甚麼? 深於陰間,你還能知道甚麼? (Sheol )
9 ௯ அதின் அளவு பூமியைவிட நீளமும், சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது.
其量比地長, 比海寬。
10 ௧0 அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடை செய்கிறவன் யார்?
他若經過,將人拘禁, 招人受審,誰能阻擋他呢?
11 ௧௧ மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனிக்காமல் இருப்பாரோ?
他本知道虛妄的人; 人的罪孽,他雖不留意,還是無所不見。
12 ௧௨ புத்தியில்லாத மனிதன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், அறிவுள்ளவனாக இருக்கிறான்.
空虛的人卻毫無知識; 人生在世好像野驢的駒子。
13 ௧௩ நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
你若將心安正, 又向主舉手;
14 ௧௪ உம்முடைய கையிலே அநீதி இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும்.
你手裏若有罪孽, 就當遠遠地除掉, 也不容非義住在你帳棚之中。
15 ௧௫ அப்பொழுது உம்முடைய முகத்தை வெட்கமில்லாமல் தலைநிமிர்ந்து, பயப்படாமல் பலன்கொண்டிருப்பீர்.
那時,你必仰起臉來毫無斑點; 你也必堅固,無所懼怕。
16 ௧௬ அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
你必忘記你的苦楚, 就是想起也如流過去的水一樣。
17 ௧௭ அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.
你在世的日子要比正午更明, 雖有黑暗仍像早晨。
18 ௧௮ நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாகப் படுத்துக்கொள்வீர்.
你因有指望就必穩固, 也必四圍巡查,坦然安息。
19 ௧௯ பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள்.
你躺臥,無人驚嚇, 且有許多人向你求恩。
20 ௨0 துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று, அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.
但惡人的眼目必要失明。 他們無路可逃; 他們的指望就是氣絕。