< எரேமியா 9 >
1 ௧ ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் மக்களாகிய மகள் கொலைசெய்யப்பட கொடுத்தவர்களுக்காக நான் இரவும்பகலும் அழுவேன்.
Ao, sɛ me ti yɛ asuti, na mʼaniwa yɛ nusu abura a! Mɛtew nusu awia ne anadwo ama me nkurɔfo a wɔakunkum wɔn no.
2 ௨ ஆ, வனாந்திரத்தில் வழிப்போக்கரின் தங்குமிடம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் மக்களைவிட்டு, அவர்களிடத்தில் இருக்காமல் போய்விடுவேன்; அவர்களெல்லோரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.
Ao, sɛ mewɔ akwantufo asoɛe wɔ nweatam no so a anka megyaw me nkurɔfo hɔ na mafi wɔn nkyɛn; efisɛ wɔn nyinaa yɛ nguaman, nnipakuw a wonni nokware.
3 ௩ அவர்கள் பொய்யைப் பயன்படுத்தத்தக்க தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்தில் பலப்படுவது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு முன்னேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
“Wosiesie wɔn tɛkrɛma te sɛ agyan de di atoro; Ɛnyɛ nokware so na wɔnam di yiye wɔ asase yi so. Wɔyɛ bɔne toatoa so; na wonnye me nto mu,” Awurade na ose.
4 ௪ நீங்கள் அவனவன் தன்தன் நண்பனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்த சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்த சகோதரனும் மோசம்செய்கிறான், எந்த சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
“Monhwɛ yiye wɔ mo nnamfonom ho; munnye obiara nni wɔ mo abusua mu. Efisɛ wɔn mu biara yɛ ɔdaadaafo, na adamfo biara yɛ ɔsɛefo.
5 ௫ அவர்கள் உண்மையைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை திட்டுகிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமம் செய்ய உழைக்கிறார்கள்.
Adamfo daadaa adamfo, na wɔn mu biara nka nokware. Wɔn tɛkrɛma akokwaw atorodi mu, wɔde bɔneyɛ haw wɔn ho.
6 ௬ வழக்கமாக பொய் பேசுகிறவர்கள் நடுவில் குடியிருக்கிறாய்; பொய்யின்காரணமாக அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Wote nnaadaa mfimfini; na wɔn nnaadaa mu wɔmpɛ sɛ wogye me to mu,” sɛnea Awurade se ni.
7 ௭ ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; என் மக்களாகிய மகளை வேறெந்தமுறையாக நடத்துவேன்?
Ɛno nti, sɛɛ na Asafo Awurade se, “Hwɛ, mɛnan wɔn asɔ wɔn ahwɛ, na dɛn bio na metumi ayɛ esiane me nkurɔfo yi bɔne nti?
8 ௮ அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது பொய் பேசுகிறது; அவனவன் தன்தன் அருகிலுள்ளவனிடம் தன்தன் வாயினால் சமாதானமாகப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்தில் அவனைக் கொல்ல சதி செய்கிறான்.
Wɔn tɛkrɛma yɛ agyan a ano wɔ bɔre; ɛka nnaadaasɛm. Obiara kasa asomdwoe mu kyerɛ ne yɔnko, nanso ne koma mu de, osum no afiri.
9 ௯ இதற்காக அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட மக்களுக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார்.
Ɛnsɛ sɛ metwe wɔn aso wɔ eyi ho?” Sɛɛ na Awurade se. “Ɛnsɛ sɛ mʼankasa metɔ ɔman a ɛte sɛɛ so were ana?
10 ௧0 மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்திரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாமலிருக்க அவைகள் அழிக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; வானத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போனது.
Mesu na metwa adwo ama mmepɔw no, mɛbɔ abubuw a ɛfa nweatam adidibea ho. Ayɛ fo na obi mfa hɔ bio, na wɔnte anantwi su wɔ hɔ. Wim nnomaa no atutu kɔ na mmoa no nso aguan kɔ.
11 ௧௧ நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாமல் அழித்துப்போடுவேன்.
“Mɛyɛ Yerusalem mmubui siw, sakraman atu; na mɛma Yuda nkurow ada mpan sɛnea obiara ntumi ntena hɔ.”
12 ௧௨ இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று யெகோவாவுடைய வாய் தன்னுடன் சொல்லுகிறதைக் கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?
Onipa bɛn na onim nyansa ara sɛ ɔbɛte eyi ase? Hena na Awurade akyerɛkyerɛ no a obetumi akyerɛ ase? Adɛn nti na wɔasɛe asase no ama ada mpan sɛ nweatam a obiara ntumi mfa so?
13 ௧௩ நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும்,
Awurade kae se, “Esiane sɛ wɔapo me mmara a mehyɛ maa wɔn no nti, wɔanyɛ osetie amma me na wɔanni me mmara so.
14 ௧௪ தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் முற்பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று யெகோவா சொல்லுகிறார்.
Mmom, wɔadi wɔn koma asoɔden akyi, wɔadi Baalnom akyi sɛnea wɔn agyanom kyerɛɛ wɔn no.”
15 ௧௫ ஆதலால், இதோ, நான் இந்த மக்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுத்து,
Ɛno nti, nea Asafo Awurade, Israel Nyankopɔn no se ni: “Hwɛ, mɛma saa nnipa yi adi aduan a ɛyɛ nwen na wɔanom nsu a wɔde awuduru afra.
16 ௧௬ அவர்களும், அவர்கள் முற்பிதாக்களும் அறியாத மக்களுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை அழிக்கும்வரை அதை அவர்களுக்குப் பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Mɛbɔ wɔn ahwete amanaman a wɔn anaa wɔn agyanom nnim so no so, na mede afoa bɛtaa wɔn kosi sɛ mɛsɛe wɔn.”
17 ௧௭ நீங்கள் யோசனைசெய்து, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதில் பழகின பெண்களைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Sɛnea Awurade tumfo se ni: “Dwene ho! Frɛ mmea agyaadwotwafo no, frɛ wɔn a wɔakwadaw mu pa ara.
18 ௧௮ அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்களில் கண்ணீர் வடியவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடுமளவும், ஒப்பாரி சொல்வார்களாக.
Ma wɔmmra ntɛm mmesu ngu yɛn so kosi sɛ yɛn ani so bɛtaa nusu na nusu aguare yɛn.
19 ௧௯ எவ்வளவாக அழிக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் இருப்பிடங்களை அவர்கள் இடித்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து ஏற்படுகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.
Wɔte agyaadwotwa nnyigyei fi Sion se, ‘Wɔasɛe yɛn! Yɛn anim agu ase yiye! Ɛsɛ sɛ yetu fi yɛn asase so efisɛ yɛn afi abubu.’”
20 ௨0 ஆதலால் பெண்களே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் காது அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் மகள்களுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
Afei, mo mmea, muntie Awurade asɛm; monyɛ aso mma nsɛm a efi nʼanom. Monkyerɛ mo mmabea sɛnea wotwa dwo; monkyerɛ mo ho mo ho abubuwbɔ.
21 ௨௧ வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற வாலிபரையும் அழிக்கும் மரணம், நம்முடைய ஜன்னல்களிலேறி, நம்முடைய அரண்மனைகளில் நுழைந்தது.
Owu aforo afa yɛn mfɛnsere mu ahyɛn yɛn aban mu; apam mmofra afi mmɔnten so ne mmerante afi ɔman aguabɔbea.
22 ௨௨ மனிதரின் சடலங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னால் ஒருவனும் எடுக்காதிருக்கிற அரிக்கட்டைப்போலவும் கிடக்கும் என்று யெகோவா சொன்னாரென்று சொல்.
Ka se, “Sɛɛ Na Awurade se, “‘Nnipa afunu bɛdeda hɔ te sɛ sumina a egugu petee mu, te sɛ aburow a nnɔbaetwafo atwa agu nʼakyi a obiara mmoaboaa ano.’”
23 ௨௩ ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
Eyi ne nea Awurade se: “Mma onyansafo mfa ne nyansa nhyehyɛ ne ho anaa ɔhoɔdenfo mfa nʼahoɔden nhyehyɛ ne ho anaa ɔdefo mfa nʼahonya nhyehyɛ ne ho.
24 ௨௪ மேன்மைபாராட்டுகிறவன் பூமியில் கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற யெகோவா நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டுவானாக என்று யெகோவா சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Mmom ma nea ɔhyehyɛ ne ho nhyehyɛ ne ho sɛ ɔwɔ nhumu, na onim sɛ, me ne Awurade a ɔyɛ adɔe, na obu atɛntrenee na ɔyɛ adetrenee wɔ asase so, efisɛ eyinom na ɛsɔ mʼani,” sɛnea Awurade se ni.
25 ௨௫ இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களுடன் விருத்தசேதனமுள்ள அனைவரையும்,
“Nna no reba,” Awurade na ose, “A mɛtwe wɔn a wɔatwa twetia wɔ honam fam nko ara no nyinaa aso:
26 ௨௬ எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் மக்களையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்திரக்குடிகளான அனைவரையும் தண்டிப்பேன்; அந்நியமக்கள் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்தில் மாற்றமி ல்லாதவர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Misraimfo, Yudafo, Edomfo, Amonfo, Moabfo ne wɔn a wɔtete nweatam a ɛwɔ akyirikyiri nsase so nyinaa. Na nokware, saa aman yi nyinaa yɛ momonotofo na mpo Israelfi nyinaa yɛ koma mu momonotofo.”