< எரேமியா 7 >
1 ௧ யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
Слово, еже бысть ко Иеремии от Господа, глаголющее:
2 ௨ நீ யெகோவாவுடைய ஆலயத்தின் வாசலில் நின்று, அங்கே அறிவித்துச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், யெகோவாவைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே நுழைகிற யூத மக்களாகிய நீங்களெல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
стани во вратех дому Господня и проповеждь тамо слово то и глаголи: слышите слово Господне, вся Иудеа, ходящии сквозе врата сия, да поклонитеся Господу:
3 ௩ இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த இடத்தில் குடியிருக்கச்செய்வேன்.
сия глаголет Господь Сил, Бог Израилев: исправити пути вашя и начинания ваша, и вселю вы на месте сем.
4 ௪ யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்.
Не надейтеся на себе во словесех лживых, понеже весьма не упользуют вас, глаголюще: храм Господень, храм Господень, храм Господень есть.
5 ௫ நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் செயல்களையும் நன்றாக ஒழுங்குபடுத்தி, நீங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து,
Яко аще исправляюще исправите пути ваша и умышления ваша, и творяще сотворите суд посреде мужа и посреде искренняго его,
6 ௬ அந்நியதேசத்தாரையும், அனாதையானவனையும், விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில்,
и пришелцу и сиру и вдовице не сотворите насилия, и крове неповинныя не излиете на месте сем, и вслед богов чуждих не пойдете на зло вам,
7 ௭ அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த இடத்தில் உங்களைச் சதாகாலமும் குடியிருக்கவும்செய்வேன்.
вселю вас на месте сем, в земли, юже дах отцем вашым от века даже и до века.
8 ௮ இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.
Аще же вы надеетеся на словеса лживая, отюнудуже не будет вам пользы,
9 ௯ நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்செய்து, பொய்சாட்சி சொல்லி, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி,
и крадете и убиваете, и блудствуете и кленетеся лживо, и жрете Ваалу и ходите вслед богов чуждих, ихже не весте, яко во зло вам суть,
10 ௧0 அதன்பின்பு வந்து, என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயத்தில் எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?
и приидосте и стасте предо Мною в дому сем, в немже призвано есть имя Мое, и рекли есте: удалихомся, еже не творити вся мерзости сия:
11 ௧௧ என் பெயர் சூட்டப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையானதோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
еда вертеп разбойником есть дом Мой, в немже призвася имя Мое тамо во очию вашею? И се, Аз видех, глаголет Господь.
12 ௧௨ நான் முதலில் என் பெயர் விளங்கச்செய்ய சீலோவிலுள்ள என் இடத்திற்கு நீங்கள் போய், இஸ்ரவேல் மக்களுடைய பொல்லாப்புக்காக நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.
Сего ради идите к месту Моему, еже в Силоме, идеже вселих имя Мое от начала, и видите, что сотворих ему лукавств ради людий Моих Израиля.
13 ௧௩ நீங்கள் இந்தச் செயல்களையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லி வந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்திரவுகொடாமலும் போனதினால்,
И ныне, понеже сотвористе вся дела сия, рече Господь, и глаголах к вам рано востающь и глаголющь, и не услышасте Мене, и звах вас, и не отвещасте:
14 ௧௪ என் பெயர் சூட்டப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்திற்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த இடத்திற்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.
убо и Аз сотворю дому сему, в немже призвано есть имя Мое, на негоже вы уповасте, и месту, еже дах вам и отцем вашым, якоже сотворих Силому.
15 ௧௫ நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
И отвергу вас от лица Моего, якоже отвергох всю братию вашу, все семя Ефремово.
16 ௧௬ நீ இந்த மக்களுக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் நீ சொல்வதைக் கேட்பதில்லை.
Ты же не молися о людех сих и не проси еже помилованым быти им, и не моли, ниже приступай ко Мне о них, яко не услышу тя.
17 ௧௭ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா?
Еда не видиши, что сии творят во градех Иудиных и на путех Иерусалимских?
18 ௧௮ எனக்கு மனவேதனையுண்டாக அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை ஊற்றுகிறார்கள்; அவர்கள் வானராணிக்குப் பணியாரங்களைச் சுடுவதற்காகப் பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், பெண்கள் மாப்பிசைகிறார்கள்.
Сынове их собирают дрова, и отцы их зажигают огнь, и жены их месят муку, да сотворят опресноки воинству небесному, и возлияша возлияния богом чуждим, да прогневают Мя.
19 ௧௯ அவர்கள் எனக்கா மனவேதனையுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்திற்குள்ளாக அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனவேதனையுண்டாக்குகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Мене ли тии прогневляют? Глаголет Господь: еда не себе самих? Да постыдятся лица их.
20 ௨0 ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த இடத்தின்மேலும், மனிதர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் பழங்கள்மேலும் ஊற்றப்படும்; அது அணையாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Сего ради тако глаголет Господь: се, гнев и ярость Моя лиется на место сие и на люди, и на скоты и на всяко древо страны их и на плоды земныя, и возжжется и не угаснет.
21 ௨௧ இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறதென்னவென்றால்: உங்கள் தகனபலிகளை மற்ற பலிகளுடன், இறைச்சியைச் சாப்பிடுங்கள்.
Сия глаголет Господь Сил, Бог Израилев: всесожжения ваша соберите со жертвами вашими и изядите мяса:
22 ௨௨ நான் உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளில், தகனபலியைக்குறித்தும், மற்ற பலிகளைக்குறித்தும் நான் அவர்களுடன் பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும்,
яко не глаголах ко отцем вашым и не заповедах им в день, в оньже изведох их от земли Египетския, о всесожжениих и жертвах,
23 ௨௩ என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழிகளிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாவதற்காக நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.
но (токмо) слово сие заповедах им, рекий: услышите глас Мой, и буду вам в Бога, и вы будете Мне в люди, и ходите во всех путех Моих, в нихже повелех вам, да благо будет вам.
24 ௨௪ அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்நோக்கியல்ல பின்நோக்கியே போனார்கள்.
И не услышаша Мене, и не внят ухо их: но поидоша в похотех и стропотстве сердца своего лукаваго, и сотворишася на задняя, а не на предняя,
25 ௨௫ உங்கள் முற்பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்வரை நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன்.
от дне, в оньже изыдоша отцы их от земли Египетския, и даже до дне сего: и послах к вам вся рабы Моя пророки, в день и рано востая и посылая:
26 ௨௬ ஆனாலும் அவர்கள் என் சொல்லைக்கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் முற்பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்.
и не услышаша Мя, ни приклониша ухо свое, но ожесточиша выю свою паче отец своих.
27 ௨௭ நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உன் சொல்லைக் கேட்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்திரவு கொடுக்கமாட்டார்கள்.
И речеши к ним вся словеса сия, и не услышат тя, и воззовеши их, и не отвещают тебе.
28 ௨௮ ஆகையால் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற மக்கள் இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து இல்லாமல் போனதென்றும் அவர்களுக்குச் சொல்.
И речеши к ним: сей язык, иже не послуша гласа Господа Бога своего, ни восприят наказания: погибе вера и отята есть от уст их.
29 ௨௯ நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்ந்த இடங்களில் புலம்பிக்கொண்டிரு; யெகோவா தமது கோபத்திற்கு ஏதுவான சந்ததியை வெறுத்துத் தள்ளிவிட்டார்.
Остризи главу твою и отметни, и восприими во устне рыдание, яко отверже Господь и отрину род творяй сия.
30 ௩0 யூதா மக்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் பெயர் சூட்டப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதில் வைத்தார்கள்.
Понеже сотвориша сынове Иудины лукавое во очию Моею, рече Господь: поставиша мерзости своя в дому, в немже призвано есть имя Мое, да осквернят его,
31 ௩௧ தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் நெருப்பால் எரிப்பதற்காக, அவர்கள் இன்னோம் மகனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.
и создаша требище Тафефу, еже есть во юдоли сына Енномля, да сожигают сыны своя и дщери своя огнем, егоже не повелех им, ниже помыслих в сердцы Моем:
32 ௩௨ ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் மகனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், அழிவின் பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்தில் இடம் கிடைக்காமற்போகும்வரை பிணங்களை அடக்கம் செய்வார்கள்.
сего ради се, дние грядут, глаголет Господь, и не рекут ктому: требище Тафефово и юдоль сына Енномля, но юдоль закланых: и погребутся во Тафефе, занеже несть места.
33 ௩௩ இந்த மக்களின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும்; அவைகளை விரட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.
И будут трупие людий сих во снедь птицам небесным и зверем земным, и не будет отгоняющаго.
34 ௩௪ நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் சிரிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும் ஓயச்செய்வேன்; தேசம் அழியும்.
И упраздню от градов Иудиных и от путий Иерусалимлих глас радующихся и глас веселящихся, глас жениха и глас невесты, во опустении бо будет вся земля.