< எரேமியா 6 >
1 ௧ பென்யமீன் வம்சத்தாரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஒன்றாய்க்கூடி ஓடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சம் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா அழிவும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
Benjámin fiai, fussatok ki Jeruzsálemből, és fújjatok kürtöt Thekoában, és tűzzetek ki zászlót Beth-Hakkeremben; mert veszedelem fenyeget észak felől és nagy romlás!
2 ௨ செல்வமாய் வளர்ந்த அழகுள்ள மகளாகிய சீயோனை அழிப்பேன்.
A szép és elkényeztetett asszonyhoz tettem hasonlóvá Sion leányát.
3 ௩ மேய்ப்பர் தங்கள் மந்தைகளுடன் அவளிடத்திற்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் இடத்தில் மேய்த்து,
Pásztorok jőnek el hozzá nyájaikkal együtt; felvonják mellette a sátrakat köröskörül; kiki legelteti, a mi keze ügyébe esik.
4 ௪ அவளுக்கு விரோதமாய் போர்செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போய்ச்சேருவதற்கு எழுந்திருங்கள்; ஐயோ, பொழுது சாய்ந்து, மாலைநேர நிழல்கள் நீண்டுபோகிறதே;
Készüljetek hadba ellene; keljetek fel, és menjünk fel délben! Jaj nékünk, mert hanyatlik már a nap, mert hosszabbodnak az esteli árnyékok!
5 ௫ எழுந்திருங்கள், நாம் இரவுநேரத்திலாவது போய்ச்சேர்ந்து, அவளுடைய அரண்மனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள்.
Keljetek fel és menjünk fel éjjel, és rontsuk le az ő palotáit!
6 ௬ சேனைகளுடைய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கோட்டைமதில் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.
Mert ezt mondja a Seregeknek Ura: Vágjatok fákat és hányjatok töltést Jeruzsálem ellen; a büntetés városa ez, csupa nyomorgatás van benne!
7 ௭ ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கச்செய்வதைப்போல, அது தன் தீங்கைச் சுரக்கச்செய்கிறது; அதில் கொடுமையும் தீமையான காரியங்களும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் எப்பொழுதும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.
Mint a kút hidegen tartja meg a vizét, úgy tartja meg az ő gonoszságát: erőszakosság és önkény hallatszik benne, és betegség és vereség van előttem szüntelen.
8 ௮ எருசலேமே, என் ஆத்துமா உன்னை விட்டுப் பிரியாமலிருக்கவும், நான் உன்னைப் பாழும் குடியில்லாத தேசமும் ஆக்காமலிருக்கவும் புத்தியைக்கேள்.
Térj eszedre, oh Jeruzsálem, hogy el ne szakadjon tőled a lelkem; hogy pusztává ne tegyelek téged, lakhatatlan földdé!
9 ௯ திராட்சைக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலின் மீதியாயிருந்த பழத்தைத் திராட்சைச்செடியின் பழத்தைப்போல் நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டு போவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Ezt mondja a Seregek Ura: Teljesen megszedik Izráel maradékát, mint a szőlőt. Fordítsd kezedet reájok, mint a szőlőszedő a kosarakra!
10 ௧0 அவர்கள் கேட்கும்படி நான் யாருடன் பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய காது விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; யெகோவாவுடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
Kinek szóljak és kiket kérjek, hogy hallják? Ímé, az ő fülök körülmetéletlen és nem figyelhetnek! Ímé, az Úr szava útálatossággá lett előttök; nem gyönyörködnek abban:
11 ௧௧ ஆகையால் நான் யெகோவாவுடைய கடுங்கோபத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலெங்கும் அதை ஊற்றிவிடுவேன்; ஆண்களும், பெண்களும், முதியவர்களும், மிக வயதானவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.
Azért telve vagyok az Úr haragjával, elfáradtam azt visszatartani! Öntsd ki a gyermekekre az utczán, és az ifjak gyülekezetére is egyszersmind; sőt még a férj a feleséggel, az öreg az aggastyánnal szintén fogattassanak el;
12 ௧௨ அவர்களுடைய வீடுகளும், சொந்தநிலங்களும், அவர்களுடைய மனைவிகளுடன் ஏகமாக அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிமக்களுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
És házaik idegenekre szálljanak, mezőik és feleségeik is egyszersmind; mert kinyújtom kezemet e föld lakosaira, azt mondja az Úr.
13 ௧௩ அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்வரை, ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யர்.
Mert kicsinyeiktől fogva nagyjaikig mindnyájan telhetetlenségnek adták magokat; a prófétától fogva a papig mindnyájan csalárdságot űznek.
14 ௧௪ சமாதானமில்லாமலிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் மக்களின் காயங்களை மேலோட்டமாகக் குணமாக்குகிறார்கள்.
És hazugsággal gyógyítgatják az én népem leányának romlását, mondván: Békesség, békesség, és nincs békesség!
15 ௧௫ அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? ஆனாலும் வெட்கப்படமாட்டார்கள், வெட்கப்படவும் அவர்களுக்குத் தெரியாது; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Szégyenkezniök kellene, hogy útálatosságot cselekedtek, de szégyenkezni nem szégyenkeznek, még pirulni sem tudnak; ezért elesnek majd az elesendőkkel; az ő megfenyíttetésök idején elhullanak, azt mondja az Úr.
16 ௧௬ வழிகளில் நின்று, முன்னோர்களின் பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதில் செல்லுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதில் நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
Így szólt az Úr: Álljatok az utakra, és nézzetek szét, és kérdezősködjetek a régi ösvények felől, melyik a jó út, és azon járjatok, hogy nyugodalmat találjatok a ti lelketeknek! És azt mondták: Nem megyünk!
17 ௧௭ நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்திற்கு செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
Őrállókat is rendeltem föléjök, mondván: Figyeljetek a kürtnek szavára! És azt mondták: Nem figyelünk!
18 ௧௮ ஆகையால் தேசங்களே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
Azért halljátok meg, ti nemzetek, és tudd meg, te gyülekezet azt, a mi következik reájok.
19 ௧௯ பூமியே, கேள்; இந்த மக்கள் என் வார்த்தைகளைக் கேட்காமலிருந்து, என் நியாயப்பிரமாணத்தைக் கேட்காமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரச்செய்வேன்.
Halld meg, oh föld! Ímé, én veszedelmet hozok erre a népre: az ő gondolatainak gyümölcsét; mert nem figyeltek az én beszédeimre, és az én törvényemet megvetették.
20 ௨0 சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு எதற்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.
Minek nékem ez a tömjén, a mi Sébából kerül, és a messze földről való jóillatú fahéj? A ti égőáldozataitok nincsenek kedvemre, sem a ti véres áldozataitok nem tetszenek nékem.
21 ௨௧ ஆகையால் இதோ, நான் இந்த மக்களுக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் தகப்பன்களும், பிள்ளைகளும், நண்பர்களும், அண்டைவீட்டுக்காரனும், ஏகமாக இடறுண்டு அழிவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Azért ezt mondja az Úr: Ímé, én akadályokat szerzek e népnek, és megbotlanak bennök az atyák és fiak együttesen, a szomszéd és az ő barátja elvesznek.
22 ௨௨ இதோ, வடதேசத்திலிருந்து ஒரு மக்கள்கூட்டம் வந்து, பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து ஒரு பெரிய தேசம் எழும்பும்.
Így szól az Úr: Ímé, nép jön el az északi földről, és nagy nemzet serken fel a földnek végéről!
23 ௨௩ அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் கொடியவர்கள், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் கடலின் இரைச்சலைப்போல் இருக்கும்; மகளாகிய சீயோனே, அவர்கள் உனக்கு விரோதமாக போர்செய்யக் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Kézívet és kopját ragad, kegyetlen az és nem könyörül; szavok zúg, mint a tenger, és lovakon nyargalnak, fejenként viadalra készen te ellened, oh Sion leánya!
24 ௨௪ அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; துன்பமும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் நம்மைப் பிடித்தது.
Halljuk a hírét: kezeink elesnek; szorongás vesz erőt rajtunk, reszketés, mint a vajudó asszonyon.
25 ௨௫ வயல்வெளியில் புறப்படாதிருங்கள்; வழியிலும் நடக்காதிருங்கள்; சுற்றிலும் எதிரியின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
Ki ne menjetek a mezőre, és az úton se járjatok; mert ellenség fegyvere, rémület fenyeget köröskörül.
26 ௨௬ என் மக்களாகிய மகளே, நீ சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, சாம்பலில் புரண்டு, ஒரே மகனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; அழிக்கிறவன் திடீரென்று நம்மேல் வருவான்.
Népem leánya! Ölts gyászt, és heverj a porban, sírj, mint az egyszülöttet siratják, zokogj keservesen; mert reánk tör a pusztító hamar!
27 ௨௭ நீ என் மக்களின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே கோட்டைச்சுவராகவும், பாதுகாப்பாகவும் வைத்தேன்.
Próbálóvá tettelek téged az én népem között; őrállóvá, hogy megismerd és megpróbáld az ő útjokat.
28 ௨௮ அவர்களெல்லோரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லோரும் கெட்டவர்கள்.
Mindnyájan igen vakmerők, rágalmazva járnak, réz és vas; mindnyájan elvetemültek ők.
29 ௨௯ தோல்பை வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் வீணாகப்போனது; பொல்லாப்புகள் நீங்கிப்போகவில்லை.
Megégett a fúvó a tűztől, elfogyott az ón, hiába olvaszt az olvasztó, mert gonoszok, meg nem tisztíthatók.
30 ௩0 அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; யெகோவா அவர்களைத் தள்ளிவிட்டார்.
Megvetett ezüstnek hívjátok őket, mert az Úr megvetette őket!