< எரேமியா 47 >

1 பார்வோன் காசாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:
אֲשֶׁר הָיָה דְבַר־יְהֹוָה אֶל־יִרְמְיָהוּ הַנָּבִיא אֶל־פְּלִשְׁתִּים בְּטֶרֶם יַכֶּה פַרְעֹה אֶת־עַזָּֽה׃
2 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து தண்ணீர் பொங்கி பிரவாகித்து தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின்மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனிதர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லோரும் அலறுவார்கள்.
כֹּה ׀ אָמַר יְהֹוָה הִנֵּה־מַיִם עֹלִים מִצָּפוֹן וְהָיוּ לְנַחַל שׁוֹטֵף וְיִשְׁטְפוּ אֶרֶץ וּמְלוֹאָהּ עִיר וְיֹשְׁבֵי בָהּ וְזָעֲקוּ הָאָדָם וְהֵילִל כֹּל יוֹשֵׁב הָאָֽרֶץ׃
3 அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை சோர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பார்க்காதிருப்பார்கள்.
מִקּוֹל שַֽׁעֲטַת פַּרְסוֹת אַבִּירָיו מֵרַעַשׁ לְרִכְבּוֹ הֲמוֹן גַּלְגִּלָּיו לֹא־הִפְנוּ אָבוֹת אֶל־בָּנִים מֵרִפְיוֹן יָדָֽיִם׃
4 பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும், மீதியான சகாயரையெல்லாம் அழிக்கவும் வருகிற நாளில் இப்படியாகும்; கப்தோர் என்னும் மத்திய தரைக் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் யெகோவா பாழாக்குவார்.
עַל־הַיּוֹם הַבָּא לִשְׁדוֹד אֶת־כׇּל־פְּלִשְׁתִּים לְהַכְרִית לְצֹר וּלְצִידוֹן כֹּל שָׂרִיד עֹזֵר כִּֽי־שֹׁדֵד יְהֹוָה אֶת־פְּלִשְׁתִּים שְׁאֵרִית אִי כַפְתּֽוֹר׃
5 காசா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடைய பள்ளத்தாக்கில் மீதியாகிய அஸ்கலோன் அழியும்; நீ எதுவரைக்கும் உன்னைக் கீறிக்கொள்ளுவாய்.
בָּאָה קׇרְחָה אֶל־עַזָּה נִדְמְתָה אַשְׁקְלוֹן שְׁאֵרִית עִמְקָם עַד־מָתַי תִּתְגּוֹדָֽדִי׃
6 ஆ யெகோவாவின் பட்டயமே, எதுவரை அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.
הוֹי חֶרֶב לַיהֹוָה עַד־אָנָה לֹא תִשְׁקֹטִי הֵאָֽסְפִי אֶל־תַּעְרֵךְ הֵרָגְעִי וָדֹֽמִּי׃
7 அது எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடற்கரைத் தேசத்திற்கு விரோதமாகவும் யெகோவா அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே.
אֵיךְ תִּשְׁקֹטִי וַיהֹוָה צִוָּה־לָהּ אֶֽל־אַשְׁקְלוֹן וְאֶל־חוֹף הַיָּם שָׁם יְעָדָֽהּ׃

< எரேமியா 47 >