< எரேமியா 43 >

1 எரேமியா எல்லா மக்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய எல்லா வார்த்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு,
וַיְהִי כְּכַלּוֹת יִרְמְיָהוּ לְדַבֵּר אֶל־כׇּל־הָעָם אֶת־כׇּל־דִּבְרֵי יְהֹוָה אֱלֹהֵיהֶם אֲשֶׁר שְׁלָחוֹ יְהֹוָה אֱלֹהֵיהֶם אֲלֵיהֶם אֵת כׇּל־הַדְּבָרִים הָאֵֽלֶּה׃
2 ஓசாயாவின் மகனாகிய அசரியாவும், கரேயாவின் மகனாகிய யோகனானும், அகங்காரிகளான எல்லா மனிதரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்தில் தங்குவதற்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல, எங்கள் தேவனாகிய யெகோவா உன்னை எங்களிடத்திற்கு அனுப்பவில்லை.
וַיֹּאמֶר עֲזַרְיָה בֶן־הוֹשַֽׁעְיָה וְיוֹחָנָן בֶּן־קָרֵחַ וְכׇל־הָאֲנָשִׁים הַזֵּדִים אֹמְרִים אֶֽל־יִרְמְיָהוּ שֶׁקֶר אַתָּה מְדַבֵּר לֹא שְׁלָחֲךָ יְהֹוָה אֱלֹהֵינוּ לֵאמֹר לֹא־תָבֹאוּ מִצְרַיִם לָגוּר שָֽׁם׃
3 கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் மகனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள்.
כִּי בָּרוּךְ בֶּן־נֵרִיָּה מַסִּית אֹתְךָ בָּנוּ לְמַעַן תֵּת אֹתָנוּ בְיַֽד־הַכַּשְׂדִּים לְהָמִית אֹתָנוּ וּלְהַגְלוֹת אֹתָנוּ בָּבֶֽל׃
4 அப்படியே யூதாவின் தேசத்தில் தங்கியிருக்கவேண்டும் என்னும் யெகோவாவுடைய சத்தத்திற்குக் கரேயாவின் மகனாகிய யோகனானும், எல்லாப் போர்வீரர்களும், எல்லா மக்களும் கேட்காமற்போனார்கள்.
וְלֹא־שָׁמַע יוֹחָנָן בֶּן־קָרֵחַ וְכׇל־שָׂרֵי הַחֲיָלִים וְכׇל־הָעָם בְּקוֹל יְהֹוָה לָשֶׁבֶת בְּאֶרֶץ יְהוּדָֽה׃
5 யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்தப்பட்டிருந்த எல்லாத் தேசங்களிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லோரையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், ராஜாவின் மகள்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன எல்லா ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகனாகிய பாருக்கையும்,
וַיִּקַּח יוֹחָנָן בֶּן־קָרֵחַ וְכׇל־שָׂרֵי הַחֲיָלִים אֵת כׇּל־שְׁאֵרִית יְהוּדָה אֲשֶׁר־שָׁבוּ מִכׇּל־הַגּוֹיִם אֲשֶׁר נִדְּחוּ־שָׁם לָגוּר בְּאֶרֶץ יְהוּדָֽה׃
6 கரேயாவின் மகனாகிய யோகனானும் எல்லா போர்வீரர்களும் கூட்டிக்கொண்டு,
אֶֽת־הַגְּבָרִים וְאֶת־הַנָּשִׁים וְאֶת־הַטַּף וְאֶת־בְּנוֹת הַמֶּלֶךְ וְאֵת כׇּל־הַנֶּפֶשׁ אֲשֶׁר הִנִּיחַ נְבוּזַרְאֲדָן רַב־טַבָּחִים אֶת־גְּדַלְיָהוּ בֶּן־אֲחִיקָם בֶּן־שָׁפָן וְאֵת יִרְמְיָהוּ הַנָּבִיא וְאֶת־בָּרוּךְ בֶּן־נֵרִיָּֽהוּ׃
7 யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காததினால், எகிப்து தேசத்திற்குப் போகத் தீர்மானித்து, அதிலுள்ள தகபானேஸ்வரை போய்ச்சேர்ந்தார்கள்.
וַיָּבֹאוּ אֶרֶץ מִצְרַיִם כִּי לֹא שָׁמְעוּ בְּקוֹל יְהֹוָה וַיָּבֹאוּ עַד־תַּחְפַּנְחֵֽס׃
8 தகபானேசில் யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
וַיְהִי דְבַר־יְהֹוָה אֶֽל־יִרְמְיָהוּ בְּתַחְפַּנְחֵס לֵאמֹֽר׃
9 நீ உன் கையில் பெரிய கற்களை எடுத்துக்கொண்டு, யூதா மக்களுக்கு முன்பாக அவைகளைத் தகபானேசில் இருக்கிற பார்வோனுடைய அரண்மனையின் ஒலிமுகவாசலில் இருக்கிற சூளையின் களிமண்ணில் புதைத்துவைத்து,
קַח בְּיָדְךָ אֲבָנִים גְּדֹלוֹת וּטְמַנְתָּם בַּמֶּלֶט בַּמַּלְבֵּן אֲשֶׁר בְּפֶתַח בֵּית־פַּרְעֹה בְּתַחְפַּנְחֵס לְעֵינֵי אֲנָשִׁים יְהוּדִֽים׃
10 ௧0 அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல் அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜகூடாரத்தை அவைகளின்மேல் விரிப்பான்.
וְאָמַרְתָּ אֲלֵיהֶם כֹּה־אָמַר יְהֹוָה צְבָאוֹת אֱלֹהֵי יִשְׂרָאֵל הִנְנִי שֹׁלֵחַ וְלָקַחְתִּי אֶת־נְבוּכַדְרֶאצַּר מֶֽלֶךְ־בָּבֶל עַבְדִּי וְשַׂמְתִּי כִסְאוֹ מִמַּעַל לָאֲבָנִים הָאֵלֶּה אֲשֶׁר טָמָנְתִּי וְנָטָה אֶת־[שַׁפְרִירוֹ] (שפרורו) עֲלֵיהֶֽם׃
11 ௧௧ அவன் வந்து, எகிப்து தேசத்தை அழிப்பான்; மரணத்திற்கு தீர்மானிக்கப்பட்டவன் மரணத்திற்கும், சிறையிருப்புக்கு தீர்மானிக்கப்பட்டவன் சிறையிருப்புக்கும், பட்டயத்திற்கு தீர்மானிக்கப்பட்டவன் பட்டயத்திற்கும் உள்ளாவான்.
(ובאה) [וּבָא] וְהִכָּה אֶת־אֶרֶץ מִצְרָיִם אֲשֶׁר לַמָּוֶת לַמָּוֶת וַאֲשֶׁר לַשְּׁבִי לַשֶּׁבִי וַאֲשֶׁר לַחֶרֶב לֶחָֽרֶב׃
12 ௧௨ எகிப்தின் தெய்வங்களுடைய கோவில்களில் நெருப்பைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப்போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக் கொள்ளுவதுபோல எகிப்து தேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாகப் புறப்பட்டுப்போவான்.
וְהִצַּתִּי אֵשׁ בְּבָתֵּי אֱלֹהֵי מִצְרַיִם וּשְׂרָפָם וְשָׁבָם וְעָטָה אֶת־אֶרֶץ מִצְרַיִם כַּֽאֲשֶׁר־יַעְטֶה הָרֹעֶה אֶת־בִּגְדוֹ וְיָצָא מִשָּׁם בְּשָׁלֽוֹם׃
13 ௧௩ அவன் எகிப்து தேசத்தில் இருக்கிற பெத்ஷிமேஸின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தெய்வங்களுடைய கோவில்களை நெருப்பால் எரித்துப்போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
וְשִׁבַּר אֶֽת־מַצְּבוֹת בֵּית שֶׁמֶשׁ אֲשֶׁר בְּאֶרֶץ מִצְרָיִם וְאֶת־בָּתֵּי אֱלֹהֵֽי־מִצְרַיִם יִשְׂרֹף בָּאֵֽשׁ׃

< எரேமியா 43 >