< எரேமியா 42 >

1 அப்பொழுது எல்லா இராணுவச்சேர்வைக்காரரும், கரேயாவின் மகனாகிய யோகனானும், ஓசாயாவின் மகனாகிய யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்வரையுள்ள எல்லா மக்களும் சேர்ந்துவந்து,
پس تمامی سرداران لشکر و یوحانان بن قاریح و یزنیا ابن هوشعیا و تمامی خلق از خرد و بزرگ پیش آمدند،۱
2 தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய யெகோவா நாங்கள் நடக்கவேண்டிய வழியையும், செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரிவிப்பதற்காக, நீர் எங்கள் விண்ணப்பத்திற்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்த எல்லா மக்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி ஜெபம்செய்யும்.
و به ارمیا نبی گفتند: «تمنا اینکه التماس ما نزد تو پذیرفته شودو به جهت ما و به جهت تمامی این بقیه نزد یهوه خدای خود مسالت نمایی زیرا که ما قلیلی ازکثیر باقی‌مانده‌ایم چنانکه چشمانت ما را می‌بیند.۲
3 உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான மக்களில் கொஞ்சம் நபர்களே மீதியாயிருக்கிறோம் என்றார்கள்.
تا یهوه خدایت ما را به راهی که باید برویم و به‌کاری که باید بکنیم اعلام نماید.»۳
4 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கி ஜெபம்செய்வேன்; யெகோவா உங்களுக்கு மறுஉத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான்.
پس ارمیای نبی به ایشان گفت: «شنیدم. اینک من برحسب آنچه به من گفته‌اید، نزد یهوه خدای شما مسالت خواهم نمود و هر‌چه خداوند در جواب شما بگوید به شما اطلاع خواهم داد و چیزی از شما باز نخواهم داشت.»۴
5 அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய யெகோவா உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லா வார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருப்பாராக.
ایشان به ارمیا گفتند: «خداوند در میان ماشاهد راست و امین باشد که برحسب تمامی کلامی که یهوه خدایت به واسطه تو نزد ما بفرستدعمل خواهیم نمود.۵
6 அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாக நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
خواه نیکو باشد و خواه بد، کلام یهوه خدای خود را که تو را نزد اومی فرستیم اطاعت خواهیم نمود تا آنکه قول یهوه خدای خود را اطاعت نموده، برای ماسعادتمندی بشود.»۶
7 பத்துநாள் சென்றபின்பு, யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டானது.
و بعد از ده روز واقع شد که کلام خداوند برارمیا نازل شد.۷
8 அப்பொழுது அவன், கரேயாவின் மகனாகிய யோகனானையும், அவனுடன் இருந்த எல்லாப் போர்வீரர்களையும், சிறியோர்முதல் பெரியோர்வரை உண்டான எல்லா மக்களையும் அழைத்து,
پس یوحانان بن قاریح و همه سرداران لشکر که همراهش بودند و تمامی قوم رااز کوچک و بزرگ خطاب کرده،۸
9 அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பம் செய்வதற்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
به ایشان گفت: «یهوه خدای اسرائیل که شما مرا نزد وی فرستادید تا دعای شما را به حضور او برسانم چنین می‌فرماید:۹
10 ௧0 நீங்கள் இந்தத் தேசத்தில் தங்கியிருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனம் வருந்தினேன்.
اگر فی الحقیقه در این زمین بمانید آنگاه شما را بنا نموده، منهدم نخواهم ساخت و غرس کرده، نخواهم کند، زیرا از بلایی که به شما رسانیدم پشیمان شدم.۱۰
11 ௧௧ நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று யெகோவா சொல்லுகிறார், உங்களைக் காப்பாற்றுவதற்காகவும், உங்களை அவன் கைக்கு விடுவிப்பதற்காகவும் நான் உங்களுடன் இருந்து,
از پادشاه بابل که از او بیم دارید ترسان مباشید. بلی خداوندمی گوید از او ترسان مباشید زیرا که من با شماهستم تا شما را نجات‌بخشم و شما را از دست او رهایی دهم.۱۱
12 ௧௨ அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சொந்ததேசத்திற்கு உங்களைத் திரும்பிவரச்செய்கிறதற்கும் உங்களுக்கு இரக்கம் செய்வேன்.
و من بر شما رحمت خواهم فرمود تا او بر شما لطف نماید و شما را به زمین خودتان پس بفرستد.۱۲
13 ௧௩ நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காமல், நாங்கள் இந்தத் தேசத்தில் இருக்கிறதில்லையென்றும்,
اما اگر گویید که در این زمین نخواهیم ماند و اگر سخن یهوه خدای خودرا گوش نگیرید،۱۳
14 ௧௪ நாங்கள் போரைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், உணவு குறைவினால் பட்டினியாக இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தங்கியிருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில்,
و بگویید نی بلکه به زمین مصر خواهیم رفت زیرا که در آنجا جنگ نخواهیم دید و آواز کرنا نخواهیم شنید و برای نان گرسنه نخواهیم شد و در آنجا ساکن خواهیم شد،۱۴
15 ௧௫ யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்திற்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்,
پس حال بنابراین‌ای بقیه یهودا کلام خداوند را بشنوید: یهوه صبایوت خدای اسرائیل چنین می‌گوید: اگر به رفتن به مصر جازم می‌باشید و اگر در آنجا رفته، ساکن شوید،۱۵
16 ௧௬ நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்தில் உங்களைப் பிடிக்கும்; நீங்கள் சந்தேகப்படுகிற பஞ்சம் எகிப்தில் உங்களைத் தொடர்ந்துவரும். அங்கே இறப்பீர்கள்.
آنگاه شمشیری که از آن می‌ترسید البته آنجادر مصر به شما خواهد رسید و قحطی که از آن هراسان هستید آنجا در مصر شما را خواهددریافت و در آنجا خواهید مرد.۱۶
17 ௧௭ எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்திற்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனிதருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பார்கள்; நான் அவர்கள்மேல் வரச்செய்யும் தீங்கினால் அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
و جمیع کسانی که برای رفتن به مصر و سکونت در آنجاجازم شده‌اند، از شمشیر و قحط و وبا خواهندمرد و احدی از ایشان از آن بلایی که من بر ایشان می‌رسانم باقی نخواهد ماند و خلاصی نخواهدیافت.۱۷
18 ௧௮ என் கோபமும் என் கடுங்கோபமும் எருசலேமின் குடிமக்கள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் கடுங்கோபம் நீங்கள் எகிப்திற்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக் காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
زیرا که یهوه صبایوت خدای اسرائیل چنین می‌گوید: چنانکه خشم و غضب من برساکنان اورشلیم ریخته شد، همچنان غضب من به مجرد ورود شما به مصر بر شما ریخته خواهدشد و شما مورد نفرین و دهشت و لعنت و عارخواهید شد و این مکان را دیگر نخواهید دید.»۱۸
19 ௧௯ யூதாவில் மீதியானவர்களே, எகிப்திற்குப் போகாதிருங்கள் என்று யெகோவா உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.
‌ای بقیه یهودا خداوند به شما می‌گوید به مصرمروید، یقین بدانید که من امروز شما را تهدیدنمودم.۱۹
20 ௨0 உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாக உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்செய்து, எங்கள் தேவனாகிய யெகோவா சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்கு அனுப்பினீர்கள்.
زیرا خویشتن را فریب دادید چونکه مرا نزد یهوه خدای خود فرستاده، گفتید که برای ما نزد یهوه خدای ما مسالت نما و ما را موافق هرآنچه یهوه خدای ما بگوید، مخبر ساز و آن را بعمل خواهیم آورد.۲۰
21 ௨௧ நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்தையும் கவனித்துக் கேட்காமற்போனீர்கள்.
پس امروز شما را مخبرساختم اما شما نه به قول یهوه خدای خود و نه بهیچ‌چیزی که به واسطه من نزد شما فرستادگوش گرفتید.۲۱
22 ௨௨ இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற இடத்தில்தானே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் மரணமடைவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.
پس الان یقین بدانید که شما درمکانی که می‌خواهید بروید و در آن ساکن شویداز شمشیر و قحط و وبا خواهید مرد.»۲۲

< எரேமியா 42 >