< எரேமியா 40 >
1 ௧ பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்கு எருசலேமிலும் யூதாவிலும் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்கு யெகோவாவால் உண்டான வசனம்:
Слово бывшее ко Иеремии от Господа, повнегда отпусти его Навузардан архимагир из Рамы, егда взя его связанаго путы от среды, от Иерусалима и от Иуды преселения, ведомых в Вавилон.
2 ௨ காவற்சேனாதிபதி எரேமியாவை வரவழைத்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய யெகோவா இந்த இடத்திற்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.
И взя его архимагир и рече ему: Господь Бог твой соглаголал есть злая сия на место сие:
3 ௩ தாம் சொன்னபடியே யெகோவா நடப்பித்துமிருக்கிறார்; நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்து, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமற்போனீர்கள்; ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது.
и приведе, и сотвори Господь, якоже рече, зане согрешисте Ему и не послушасте гласа Его, и бысть вам глагол сей.
4 ௪ இப்போதும், இதோ, உன் கைகளில் இடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாகத் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாகத் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்திற்குப்போக உனக்கு நன்மையும் ஒழுங்குமாகத் தோன்றுகிறதோ அவ்விடத்திற்குப் போ என்றான்.
И се, ныне разреших тя от уз, яже на руку твоею: аще ти есть добро ити со мною в Вавилон, поиди, и положу очи мои на тя: аще же ни, остани зде: се, вся земля пред лицем твоим есть: что изволиши, и аможе восхощеши ити, тамо иди:
5 ௫ அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்திற்குத் திரும்பிப்போய், அவனுடன் மக்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்திற்குப் போக உனக்கு சரியென்று தோன்றுகிறதோ, அவ்விடத்திற்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.
и возвратися ко Годолии, сыну Ахикамову, сыну Сафаню, егоже постави царь Вавилонский в земли Иудине, и живи с ним среде людий, во всех благих пред очима твоима, еже ходити, и ходи. И даде ему архимагир пищу и дары и отпусти его.
6 ௬ அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான மக்களுக்குள் அவனுடன் தங்கியிருந்தான்.
И прииде Иеремиа ко Годолии сыну Ахмикамову в Массифаф и седе среде людий своих оставшихся на земли.
7 ௭ பாபிலோன் ராஜா அகீக்காமின் மகனாகிய கெதலியாவை தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகாத குடிமக்களில் ஏழைகளான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் அவனுடைய கண்காணிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற போர் வீரர்கள் அனைவரும் அவர்களுடைய மனிதரும் கேட்டபோது,
И егда услышаша вси воеводы силы яже на селе, тии и силы их, яко поставил есть царь Вавилонский Годолию сына Ахикамова (властелина) над землею, и яко предаде ему мужы и жены и дети, и от убогих земли, иже не преведени быша в Вавилон:
8 ௮ அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், கரேயாவின் மகன்களாகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் மகனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் மகன்களும், மாகாத்தியனான ஒருவனுடைய மகனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.
приидоша ко Годолии в Массифаф Исмаил сын Нафаниин и Иоанан, и Ионафан сын Кариев и Сареа сын Фанаемефов, и сынове Офи, иже беша из Нетофафы, и Иезониа сын Махафы, тии и мужие их.
9 ௯ அப்பொழுது சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனிதரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரை பணிய பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவை பணியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.
И клятся им Годолиа и мужем их, глаголя: не убойтеся от лица отрок Халдейских: вселитеся на земли и служите царю Вавилонску, и лучше вам будет:
10 ௧0 நானோவெனில், இதோ, நம்மிடத்தில் வருகிற கல்தேயரிடத்தில் பணியும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சைரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று வாக்குக்கொடுத்துச் சொன்னான்.
и се, аз сежу в Массифафе, стати противу лицу Халдейску, иже аще приидут на вас: вы же соберите вино и овощь, и соберите масло, и влийте в сосуды своя, и вселитеся во грады, яже удержасте.
11 ௧௧ மோவாபிலும் அம்மோன் மக்களிடத்திலும் ஏதோமிலும் எல்லா தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினான் என்றும், கேட்டபோது,
И вси Иудее, иже в земли Моавли и в сынех Аммоних, и иже во Идумеи и иже во всей земли, услышаша, яко дал есть царь Вавилонский останок во Иуде и яко поставил есть над ними Годолию сына Ахикамова, сына Сафанова.
12 ௧௨ எல்லா யூதரும் தாங்கள் துரத்தப்பட்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சைரசத்தையும் பழங்களையும் அதிகமாகச் சேர்த்து வைத்தார்கள்.
И приидоша вси Иудее от всех мест, в няже бяху убегли, и приидоша ко Годолии в землю Иудину в Массифаф, и собраша вино и овощь и масло много зело.
13 ௧௩ அப்பொழுது கரேயாவின் மகனாகிய யோகனானும் வெளியில் இருந்த எல்லா போர் வீரர்களும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,
Иоанан же сын Кариев и вси воеводы силы, иже на селех, приидоша ко Годолии в Массифаф
14 ௧௪ உம்மைக் கொன்றுபோடுவதற்கு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்; ஆனாலும் அகீக்காமின் மகனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை.
и рекоша ему: веси ли, яко Велиса царь сынов Аммоних посла к тебе Исмаила сына Нафаниева поразити душу твою? И не верова им Годолиа сын Ахикамль.
15 ௧௫ பின்னும் கரேயாவின் மகனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாகப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட அனுமதிக்கவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீதியானவர்கள் அழியவும் அவன் உம்மை ஏன் கொன்றுபோடவேண்டும் என்றான்.
Иоанан же сын Кариев рече ко Годолии отай в Массифафе, глаголя: да иду убо и побию Исмаила, сына Нафаниина: и никтоже да увесть, да не како поразит душу твою, и разсыплется весь Иуда собраный к тебе, и погибнет останок Иудин.
16 ௧௬ ஆனாலும் அகீக்காமின் மகனாகிய கெதலியா கரேயாவின் மகனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.
И рече Годолиа ко Иоанану сыну Кариеву: не сотвори дела сего, яко лжу ты глаголеши на Исмаила.