< எரேமியா 4 >
1 ௧ இஸ்ரவேல், நீ திரும்புகிறதற்கு மனமிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையிலிருந்து அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
Dersom du vender om, Israel, sier Herren, skal du få komme tilbake til mig, og dersom du tar dine vederstyggeligheter bort fra mitt åsyn, skal du ikke vanke hjemløs om,
2 ௨ நீ உண்மையுடனும், நியாயத்தோடும், நீதியுடனும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; அந்நியமக்களும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
og sverger du: Så sant Herren lever! i sannhet, med rett og rettferdighet, da skal hedningefolk velsigne sig i ham og rose sig av ham.
3 ௩ யூதா மக்களுடனும், எருசலேம் மக்களுடனும் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.
For så sier Herren til Judas menn og til Jerusalem: Bryt eder nytt land og så ikke blandt torner!
4 ௪ யூதா மனிதர்களே, எருசலேமின் குடிமக்களே, உங்கள் செயல்களுடைய பொல்லாப்பினால் என் கடுங்கோபம் நெருப்பைப்போல எழும்பி, அணைப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் யெகோவாவாக்கென்று உங்களை. முற்றிலுமாய் அர்ப்பணியுங்கள்.
Omskjær eder for Herren og ta bort eders hjertes forhud, I Judas menn og Jerusalems innbyggere, forat ikke min harme skal fare ut som ild og brenne, uten at nogen slukker, for eders onde gjerningers skyld!
5 ௫ தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கச்செய்யுங்கள்; நாம் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்துசேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்.
Forkynn det i Juda og kunngjør det i Jerusalem og si: Støt i basun i landet! Rop ut med full røst og si: Samle eder og la oss gå inn i de faste byer!
6 ௬ சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா அழிவையும் வரச்செய்கிறேன்.
Løft op banner bortimot Sion, flytt bort, stans ikke! Jeg lar ulykke komme fra nord og stor ødeleggelse.
7 ௭ உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
En løve er steget op fra sitt kratt, og folkenes ødelegger har brutt op, har draget ut fra sitt hjem for å gjøre ditt land til en ørken; dine byer skal ødelegges, så ingen bor der.
8 ௮ இதினிமித்தம் சணல் ஆடையை அணிந்துகொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; யெகோவாவுடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.
Derfor omgjord eder med sekk, klag og skrik! For Herrens brennende vrede har ikke vendt sig fra oss.
9 ௯ அந்நாளில் ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் சோர்ந்துபோகும்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Og på den dag, sier Herren, skal kongens forstand og høvdingenes forstand svikte, og prestene skal forferdes og profetene bli fylt av redsel.
10 ௧0 அப்பொழுது நான்: ஆ! யெகோவாவாகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், உண்மையாகவே இந்த மக்களுக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரச்செய்தீர்; பட்டயம் ஜீவன்வரை எட்டுகிறதே என்றேன்.
Da sa jeg: Akk, Herre, Herre! Sannelig, ille har du sveket dette folk og Jerusalem, da du sa: Fred skal bli eder til del. Og nu er sverdet trengt inn i sjelen.
11 ௧௧ வனாந்திரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் மக்களாகிய மகளுக்கு நேராக வீசும் என்று அக்காலத்தில் இந்த மக்களுடனும் எருசலேமுடனும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
På den tid skal det sies til dette folk og til Jerusalem: En brennende vind fra de bare hauger i ørkenen blåser mot mitt folks datter, ikke til å kaste eller rense korn med.
12 ௧௨ இதைப்பார்க்கிலும் பலமான காற்று என் காரியமாய் வரும்; இப்பொழுது நானும் அவர்களுடன் நியாயம் பேசுவேன்.
Nei, en sterkere vind skal jeg la komme; nu vil også jeg avsi dom over dem.
13 ௧௩ இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போல் இருக்கிறது; அவனுடைய குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ, நாம் பாழாக்கப்படுகிறோமே.
Se, som skyer drar han op, og som stormvind er hans vogner, hans hester er lettere enn ørner; ve oss, vi er ødelagt.
14 ௧௪ எருசலேமே, நீ காப்பாற்றப்படுவதற்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பு நீங்கக் கழுவு; எதுவரை அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்தில் தங்கும்.
Tvett ondskapen av ditt hjerte, Jerusalem, så du kan bli frelst! Hvor lenge skal dine syndige tanker bo i ditt indre?
15 ௧௫ தாண் பட்டணத்திலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்செய்கிறது.
For en røst kommer med tidende fra Dan og varsler ondt fra Efra'ims fjell.
16 ௧௬ தேசங்களுக்கு அதை நீங்கள் பிரபலப்படுத்துங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
Forkynn det for folkene, kunngjør det for Jerusalem: Voktere kommer fra det fjerne land, og de lar sin røst høre mot Judas byer.
17 ௧௭ அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகம் செய்தது என்று யெகோவா சொல்லுகிறார்.
Som markvoktere leirer de sig mot det rundt omkring; for mot mig har det vært gjenstridig, sier Herren.
18 ௧௮ உன் நடக்கையும் உன் செயல்களுமே இவைகளை உனக்கு சம்பவிக்கச்செய்தன; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயம்வரை எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.
Din ferd og dine gjerninger har voldt dig dette; dette er frukten av din ondskap, at det er bittert, at det når like til ditt hjerte.
19 ௧௯ என் குடல்கள், என் குடல்களே வலிக்கிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமைதலாக இருக்கமுடியாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், போரின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
Mine innvoller, mine innvoller! Jeg pines! Å mitt hjertes vegger! Mitt hjerte bruser i mig, jeg kan ikke tie! For basunlyd, krigsskrik har du hørt, min sjel!
20 ௨0 நாசத்திற்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; திடீரென்று என் கூடாரங்களும், ஒரு நிமிடத்தில் என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.
Ødeleggelse på ødeleggelse roper de om; for hele landet er ødelagt; brått er mine telt ødelagt, i et øieblikk mine telttepper.
21 ௨௧ நான் எதுவரைக்கும் யுத்தத்தின் கொடியைக் கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.
Hvor lenge skal jeg se banneret, skal jeg høre basunlyd?
22 ௨௨ என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
For uklokt er mitt folk, mig kjenner de ikke; de er uvettige barn, og uforstandige er de; de er vise til å gjøre det onde, men å gjøre det gode skjønner de ikke.
23 ௨௩ பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கற்றதும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
Jeg så jorden, og se, den var øde og tom; jeg så til himmelen, og dens lys var borte.
24 ௨௪ மலைகளைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
Jeg så fjellene, og se, de bevet, og alle haugene skalv.
25 ௨௫ பின்னும் நான் பார்க்கும்போது, மனிதனில்லை; ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
Jeg så, og se, det var intet menneske mere, og alle himmelens fugler var fløiet bort.
26 ௨௬ மேலும் நான் பார்க்கும்போது, யெகோவாவாலும், அவருடைய கடுங்கோபத்தாலும் பயிர்நிலம் வனாந்திரமானது; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோனது.
Jeg så, og se, den fruktbare mark var en ørken, og alle dens byer var brutt ned av Herren, av hans brennende vrede.
27 ௨௭ தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
For så sier Herren: En ørken skal hele landet bli; men jeg vil ikke gjøre aldeles ende på det.
28 ௨௮ இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதைத் தீர்மானம்செய்தேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
Derfor skal jorden sørge, og himmelen der oppe sortne, fordi jeg har talt det og villet det så, og jeg angrer det ikke og tar det ikke tilbake.
29 ௨௯ குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினால் எல்லா ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனிதனும் அவைகளில் குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.
For larmen av ryttere og bueskyttere er alle byer på flukt; de går inn i skogene og stiger op på fjellene; alle byene er forlatt, det er ingen som bor i dem.
30 ௩0 பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் அணிந்தாலும், பொன் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; ஆசைநாயகர்கள் உன்னை அசட்டைசெய்து, உன் உயிரை வாங்கத் தேடுவார்கள்.
Og du, når du blir ødelagt, hvad vil du da gjøre? Om du klær dig i purpur, om du pryder dig med gullstas, om du gjør dine øine store med sminke, så er det fåfengt at du gjør dig yndig; dine elskere forsmår dig, de vil ta ditt liv.
31 ௩௧ கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்முறை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், மகளாகிய சீயோனின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ, கொலைபாதகர்களால் என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.
For jeg hører et rop som av en kvinne i barnsnød, et angstskrik som av en kvinne når hun føder sitt første barn; det er Sions datter som roper; hun stønner, hun strekker ut sine hender og sier: Ve mig! Maktløs synker min sjel i morderes vold.