< எரேமியா 39 >

1 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதை முற்றுகைபோட்டார்கள்.
И бысть в девятое лето Седекии царя Иудина, в месяц десятый, прииде Навуходоносор царь Вавилонский и вся сила его на Иерусалим, и воеваху нань.
2 சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருடம் நான்காம் மாதம், ஒன்பதாம் தேதியில் நகரத்து மதில் உடைக்கப்பட்டது.
И в первоенадесять лето Седекии, в месяц четвертый, в девятый день месяца, разседеся град.
3 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், நெர்கல் சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உள்ளே நுழைந்து, நடுவாசலில் இருந்தார்கள்.
И внидоша вси князи царя Вавилонска и седоша во вратех средних, Ниргелсарасар, Самагад, Навусахар, Навусарис, Нагаргас, Насерравамаг, и прочии воеводы царя Вавилонскаго.
4 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவும் எல்லாப் போர் வீர்களும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இரவு நேரத்தில் ராஜாவின் தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.
И бысть егда узре я Седекиа царь Иудин и вси мужие ратнии, и избегоша, и изыдоша в нощи от града по пути вертограда царева и сквозе врата, яже беша между стеною и предстением: и изыдоша в путь пустыни.
5 ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவை நெருங்கி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான்.
И гнаша вслед их воинство Халдейско, и постигоша Седекию и поли пустыни Иерихонския, и емше приведоша к Навуходоносору царю Вавилонску во Ревлаф, иже в земли Емаф, и глагола к нему с судом.
6 பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவில், சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டவைத்தான்; யூதாவின் பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி,
И изби царь Вавилонский сыны Седекиины во Ревлафе пред очима его, и вся вельможы Иудины поби царь Вавилонский.
7 சிதேக்கியாவின் கண்களைக்கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டான்.
И очи Седекии изят, и окова его путы, и отведе его в Вавилон.
8 கல்தேயர், ராஜாவின் அரண்மனையையும் மக்களின் வீடுகளையும் நெருப்பால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.
Дом же царев и домы всех людий пожгоша Халдее огнем и стену Иерусалимску превратиша:
9 நகரத்தில் தங்கியிருந்த மக்களையும், தன்னிடத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற மக்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.
и останок людий, и оставших во граде, и убегшыя, иже утекоша ко царю Вавилонску, и останок людий, и оставших пресели Навузардан воевода в Вавилон:
10 ௧0 காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்தில் வைத்து, அவர்களுக்கு அந்நாளில் திராட்சைத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.
а от людий убогих, ничтоже имущих, остави Навузардан воевода воинств в земли Иудине, и даде им винограды и нивы в той день.
11 ௧௧ ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:
И заповеда Навуходоносор царь Вавилонский о Иеремии пророце Навузарданови воеводе воинств и рече:
12 ௧௨ நீ அவனை வரவழைத்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாகப் பார்த்து, அவன் உன்னுடன் சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்து என்று கட்டளைகொடுத்தான்.
возми его и положи нань очи твои и ничтоже ему сотвори зла: но якоже восхощет, тако сотвори ему.
13 ௧௩ அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,
Посла убо Навузардан воевода воинства и Навузезван, и Рапсарис и Ниргел, и Сарасар и Фавман, и вси воеводы царя Вавилонска:
14 ௧௪ எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்திலிருந்து வரவழைத்து, அவனை வெளியே வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவதற்கு அவனைச் சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் மக்களுக்குள்ளே தங்கியிருந்தான்.
и послаша, и пояша Иеремию от двора темничнаго, и даша его Годолии сыну Ахикамову, сына Сафаня, и изведоша его, и седе среде людий.
15 ௧௫ இதுவுமல்லாமல், எரேமியா இன்னும் காவல்நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது, அவனுக்குக் யெகோவாவால் உண்டான வசனம்:
И ко Иеремии бысть слово Господне ко дворе темничнем глаголя:
16 ௧௬ நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரச்செய்வேன்; அவைகள் அந்நாளில் உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
иди и рцы ко Авдемелеху Мурину, глаголя: тако рече Господь Бог Израилев: се, Аз приношу словеса Моя на град сей во злая? А не во благая: и будут пред лицем твоим в той день:
17 ௧௭ ஆனால் அந்நாளில் உன்னைத் தப்புவிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனிதரின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை.
и избавлю тя в той день, и не дам тебе в руце человек, ихже ты боишися от лица их:
18 ௧௮ உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்திற்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பி இருக்கிறதினால் உன் உயிர் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
яко избавляя спасу тя, и мечем не падеши: и будет душа твоя на обретение, яко уповал еси на Мя, рече Господь.

< எரேமியா 39 >