< எரேமியா 30 >
1 ௧ யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
Słowo, które doszło do Jeremiasza od PANA, mówiące:
2 ௨ இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னுடன் சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுதிக்கொள்.
Tak mówi PAN, Bóg Izraela: Napisz sobie w księdze wszystkie słowa, które powiedziałem do ciebie.
3 ௩ இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் மக்களுடைய சிறையிருப்பிலிருந்து விடுவித்து, நான் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வேன்; அதை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ளுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Oto bowiem nadchodzą dni, mówi PAN, gdy odwrócę niewolę swego ludu Izraela i Judy, mówi PAN, i sprowadzę ich do ziemi, którą dałem ich ojcom, i posiądą ją.
4 ௪ இவைகள் யெகோவா இஸ்ரவேலையும் யூதாவையும் குறித்துச் சொன்னவார்த்தைகளே.
A to są słowa, które PAN mówił o Izraelu i o Judzie:
5 ௫ யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
Tak mówi PAN: Słyszeliśmy głos strachu i lęku, a nie pokoju.
6 ௬ ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற பெண்ணைப்போல் ஆண்கள் அனைவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?
Pytajcie teraz i zobaczcie: Czy mężczyzna może rodzić? Czemu więc widzę, że każdy mężczyzna trzyma ręce na biodrach – jak u rodzącej – i że ich twarze stały się blade?
7 ௭ ஐயோ, அந்த நாள் பெரியது; அதற்கு இணையான நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி காப்பாற்றப்படுவான்.
Biada! Bo wielki jest ten dzień, że nie będzie mu równego. To jest czas utrapienia Jakuba, ale będzie z niego wybawiony.
8 ௮ அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இல்லாமல் உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை படுத்துவதில்லை.
W tym dniu bowiem, mówi PAN zastępów, złamię jego jarzmo znad twojej szyi i rozerwę twoje więzy, i cudzoziemcy już nie będą go ujarzmiać;
9 ௯ தங்கள் தேவனாகிய யெகோவாவையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.
Ale będą służyć PANU, swemu Bogu, i Dawidowi, swemu królowi, którego im wzbudzę.
10 ௧0 ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று யெகோவா சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இல்லாமல் காப்பாற்றுவேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சமாதானமாக இருப்பான்; அவனைத் தத்தளிக்கச்செய்கிறவனில்லை.
Dlatego nie bój się, mój sługo, Jakubie, mówi PAN, nie lękaj się, Izraelu! Oto bowiem wybawię cię z daleka, twoje potomstwo z ziemi jego niewoli. Powróci Jakub, aby zaznać odpoczynku i spokoju i nikt nie będzie [go] straszył.
11 ௧௧ உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா தேசங்களையும் நான் அழிப்பேன்; உன்னையோ நான் அழிக்காமலும், முற்றிலும் தண்டிக்காமல், மட்டாகத் தண்டிப்பேன்.
Ja bowiem jestem z tobą, mówi PAN, aby cię wybawić. A chociaż położę kres wszystkim narodom, wśród których cię rozproszyłem, tobie jednak nie położę kresu, ale ukarzę cię sprawiedliwie, nie zostawię cię całkiem bez kary.
12 ௧௨ யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாகவும் இருக்கிறது.
Tak mówi PAN: Twoje zranienie jest nieuleczalne, bardzo bolesna twoja rana.
13 ௧௩ உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சுகப்படுத்தும் மருந்துகளுமில்லை.
Nie ma nikogo, kto by bronił twojej sprawy, abyś była uleczona. Nie masz lekarstwa na gojenie [ran].
14 ௧௪ உன் நேசர் அனைவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினாலும் உன் பாவங்கள் பெருகினதினாலும், எதிரி வெட்டுவதுபோலவும், கொடியவன் தண்டிக்கிறதுபோலவும் நான் உன்னைத் தண்டித்தேன்.
Wszyscy twoi kochankowie zapomnieli o tobie, nie szukają cię, gdyż zraniłem cię ciosem wroga i okrutnym karaniem z powodu mnóstwa twoich nieprawości i twoich niezliczonych grzechów.
15 ௧௫ உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? மிகுதியான உன் அக்கிரமத்தினாலும் பெருகிப்போன உன் பாவங்களினாலும் இப்படி உனக்குச் செய்தேன்.
Czemu wołasz z powodu swej rany i ciężkiej boleści? Za ogrom twoich nieprawości i twoje niezliczone grzechy uczyniłem ci to.
16 ௧௬ ஆதலால் உன்னை அழிக்கிறவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; உன் எதிரிகளெல்லோரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.
Wszyscy jednak, co cię pożerają, zostaną pożarci; wszyscy, którzy cię uciskają, pójdą w niewolę; ci, którzy cię ograbiają, zostaną ograbieni; a wszystkich, którzy cię łupią, wydam na łup.
17 ௧௭ அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பெயரிட்டதினால், நான் உனக்கு ஆரோக்கியம்வரச்செய்து, உன் காயங்களை ஆற்றுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Przywrócę ci bowiem zdrowie i uleczę cię z twoich ran, mówi PAN, gdyż nazwali cię Odrzuconą, [mówiąc]: To jest Syjon, o który nikt się nie troszczy.
18 ௧௮ யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் குடியிருக்கும் இடங்களுக்கு இரக்கம்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரண்மனை முன்போல நிலைப்படும்.
Tak mówi PAN: Oto odwrócę niewolę namiotów Jakuba i zlituję się nad jego mieszkaniem, i miasto [zostanie] odbudowane na swoim wzgórzu, a pałac wystawiony według swego porządku.
19 ௧௯ அவைகளிலிருந்து நன்றியும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கச்செய்வேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை.
I rozlegnie się stamtąd dziękczynienie i głos weselących się. Rozmnożę ich i nie będzie ich ubywało, uwielbię ich i nie będą poniżeni.
20 ௨0 அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின அனைவரையும் தண்டிப்பேன்.
Jego synowie będą tak jak dawniej i jego zgromadzenie będzie utwierdzone przede mną, ale ukarzę wszystkich, którzy ich trapią.
21 ௨௧ அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரை அருகில் வரச்செய்வேன், அவர் அருகில் வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தை இணைக்கிற இவர் யார்? என்று யெகோவா சொல்லுகிறார்.
I z niego powstanie jego władca, panujący nad nim spośród niego wyjdzie; każę mu się zbliżyć, a przystąpi do mnie. Kim bowiem jest ten, co odważyłby się w sercu zbliżyć do mnie? – mówi PAN.
22 ௨௨ நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.
I będziecie moim ludem, a ja będę waszym Bogiem.
23 ௨௩ இதோ, கோராவாரிக் காற்றாகிய யெகோவாவுடைய பெருங்காற்று கடுமையாக எழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.
Oto wicher PANA zrywa się w zapalczywości, trwający wicher spadnie nad głowy bezbożnych.
24 ௨௪ யெகோவா நம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கடுங்கோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்.
Zapalczywość gniewu PANA nie odwróci się, aż on to uczyni i wykona zamysły swego serca. W dniach ostatecznych to zrozumiecie.