< எரேமியா 28 >
1 ௧ யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நான்காம் வருடம் ஐந்தாம் மாதத்தில், அசூரின் மகனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி யெகோவாவுடைய ஆலயத்தில் ஆசாரியர்களும் எல்லா மக்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:
その年、すなわちユダの王ゼデキヤの治世の初め、その第四年の五月、ギベオン出身の預言者であって、アズルの子であるハナニヤは、主の宮で祭司とすべての民の前でわたしに語って言った、
2 ௨ இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.
「万軍の主、イスラエルの神はこう仰せられる、わたしはバビロンの王のくびきを砕いた。
3 ௩ பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டுபோன யெகோவாவுடைய ஆலயத்தின் பணிப்பொருட்களையெல்லாம் நான் இரண்டு வருடகாலத்தில் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவரச்செய்வேன்.
二年の内に、バビロンの王ネブカデネザルが、この所から取ってバビロンに携えて行った主の宮の器を、皆この所に帰らせる。
4 ௪ யோயாக்கீமின் மகனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்திற்குத் திரும்பிவரச்செய்வேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.
わたしはまたユダの王エホヤキムの子エコニヤと、バビロンに行ったユダのすべての捕われ人をこの所に帰らせる。それは、わたしがバビロンの王のくびきを、砕くからであると主は言われる」。
5 ௫ அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், யெகோவாவுடைய ஆலயத்தில் நின்றிருந்த மக்களெல்லோரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:
そこで預言者エレミヤは主の宮のうちに立っている祭司とすべての民の前で、預言者ハナニヤに言った。
6 ௬ ஆமென், யெகோவா அப்படியே செய்வாராக; யெகோவாவுடைய ஆலயத்தின் பணிப்பொருட்களையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரச்செய்வாரென்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் யெகோவா நிறைவேற்றுவாராக.
すなわち預言者エレミヤは言った、「アァメン。どうか主がこのようにしてくださるように。どうかあなたの預言した言葉が成就して、バビロンに携えて行った主の宮の器とすべての捕われ人を、主がバビロンから再びこの所に帰らせてくださるように。
7 ௭ ஆனாலும், உன் காதுகளும் எல்லா மக்களின் காதுகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.
ただし、今わたしがあなたとすべての民の聞いている所で語るこの言葉を聞きなさい。
8 ௮ பூர்வகாலமுதல் எனக்குமுன்னும் உனக்குமுன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும், போரையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
わたしと、あなたの先に出た預言者は、むかしから、多くの地と大きな国について、戦いと、ききんと、疫病の事を預言した。
9 ௯ சமாதானம் வரும் என்று தீர்க்கதிரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் யெகோவா மெய்யாக அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.
平和を預言する預言者は、その預言者の言葉が成就するとき、真実に主がその預言者をつかわされたのであることが知られるのだ」。
10 ௧0 அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.
そこで預言者ハナニヤは預言者エレミヤの首から、くびきを取って、それを砕いた。
11 ௧௧ பின்பு அனனியா எல்லா மக்களுக்கு முன்பாகவும்: இந்தப் பிரகாரமாக இரண்டு வருடகாலத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தை எல்லா மக்களின் கழுத்துகளிலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான்.
そしてハナニヤは、すべての民の前で語り、「主はこう仰せられる、『わたしは二年のうちに、このように、万国民の首からバビロンの王ネブカデネザルのくびきを離して砕く』」と言った。預言者エレミヤは去って行った。
12 ௧௨ அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்ட பிற்பாடு, யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
預言者ハナニヤが預言者エレミヤの首から、くびきを離して砕いた後、しばらくして主の言葉がエレミヤに臨んだ、
13 ௧௩ நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தை உண்டாக்கு என்று யெகோவா சொன்னார்.
「行って、ハナニヤに告げなさい、『主はこう仰せられる、あなたは木のくびきを砕いたが、わたしはそれに替えて鉄のくびきを作ろう。
14 ௧௪ பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைப் பணியும்படிக்கு இரும்பு நுகத்தை இந்த எல்லா தேசத்து மக்களுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.
万軍の主、イスラエルの神はこう仰せられる、わたしは鉄のくびきをこの万国民の首に置いて、バビロンの王ネブカデネザルに仕えさせる。彼らはこれに仕える。わたしは野の獣をも彼に与えた』」。
15 ௧௫ பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; யெகோவா உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த மக்களைப் பொய்யை நம்பச் செய்தாய்.
預言者エレミヤはまた預言者ハナニヤに言った、「ハナニヤよ、聞きなさい。主があなたをつかわされたのではない。あなたはこの民に偽りを信じさせた。
16 ௧௬ ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இல்லாமல் அகற்றிவிடுவேன்; இந்த வருடத்தில் நீ இறந்துபோவாய் என்று யெகோவா சொல்லுகிறார்; யெகோவாவுக்கு விரோதமாய்க் கலகம் ஏற்படப் பேசினாயே என்றான்.
それゆえ主は仰せられる、『わたしはあなたを地のおもてから除く。あなたは主に対する反逆を語ったので、今年のうちに死ぬのだ』と」。
17 ௧௭ அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருடத்தில்தானே ஏழாம் மாதத்தில் இறந்துபோனான்.
預言者ハナニヤはその年の七月に死んだ。