< எரேமியா 20 >
1 ௧ எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய மகனும், யெகோவாவுடைய ஆலயத்து தலைமை விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,
依默爾的兒子帕市胡爾司祭,上主殿宇的總監督,聽見了耶肋米亞預言這些事,
2 ௨ எரேமியா தீர்க்கதரிசியை பஸ்கூர் அடித்து, அவனைக் யெகோவாவுடைய ஆலயத்தில் பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையில் போட்டான்.
帕市胡爾便打了耶肋米亞先知,給他加上腳鐐,把他囚在上主殿內本雅明上門的監牢裏。
3 ௩ மறுநாளில் பஸ்கூர் எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: யெகோவா உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர் மீசாபீப் என்று அழைக்கிறார்.
次日,帕市胡爾給耶肋米亞去了腳鐐;耶肋米亞便對他說:「上主不再稱你為「帕市胡爾」,卻稱你為「驚慌四起」。
4 ௪ மேலும் யெகோவா: இதோ, நான் உன்னையும், உன் எல்லா நண்பர்களையும் பயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் எதிரிகளின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய்ச் சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான்.
因為上主這樣說:看,我必使你和你的一切友人遭受慌;他們必倒在敵人的刀下,而且你要親眼看見這事;我將全猶大人交在巴比倫王的手中,他要將他們擄到巴比倫去,用刀擊殺。
5 ௫ இந்த நகரத்தின் எல்லாப் பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும், அதின் அருமையான எல்லாப் பொருட்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் எதிரிகள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவைகளைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.
這城的一切財物,一切積蓄,一切珍寶,以及猶大列王的一切寶藏,我都要交在他們敵人的手中,讓他們搶劫掠奪,運到巴比倫去。
6 ௬ பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் வாசமாயிருக்கிற அனைவரும் சிறைப்பட்டுப்போவீர்கள்; நீயும் உன் கள்ளத் தீர்க்கதரிசனத்திற்கு காதுகொடுத்த உன் நண்பர்கள் அனைவரும் பாபிலோனுக்குப் போய், அங்கே இறந்து, அங்கே அடக்கம் செய்யப்படுவீர்களென்று சொல்லுகிறார் என்றான்.
至於你,帕市胡爾! 以及凡住在你家中的人,都要被擄去充軍;你和你向他們講假預言的一切友人,都要到巴比倫去,死在那裏,埋在那裏。」
7 ௭ யெகோவாவே, என்னை இணங்கச் செய்தீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லோரும் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்.
上主,你引誘了我,我讓我自己受了你的引誘;你確實比我強,你戰勝了。我終日成為笑柄,人都嘲笑我。
8 ௮ நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் அழிவு என்றும் சத்தமிட்டுச் சொல்கிறேன்; நான் சொன்ன யெகோவாவுடைய வார்த்தை அனுதினமும் எனக்கு நிந்தையும், பரியாசமுமானது.
因為我每次發言,必得叫喊,必得高呼:「暴虐! 破壞! 」實在,上主的話,為我日日成為受侮辱和譏笑的因由。
9 ௯ ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம் செய்யாமலும் இனிக் யெகோவாவுடைய பெயரில் பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து சோர்ந்துபோனேன்; எனக்குப் பொறுக்கமுடியாமல் போனது.
假使我說:我不再想念他,不再以他的名發言;在我心中就像有火在焚燒,蘊藏在我的骨髓內;我竭力抑制,亦不可能。
10 ௧0 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயம் சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னுடன் சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்வரை காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் கோபத்தைத் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.
實在,我聽到了多少人私相耳語:「驚慌四起! 你們揭發,我們就必對他提出控訴。」甚至我一切的友好都在偵察我的破綻:「也許他會入彀,那我們必能制勝他,對他施行報復。」
11 ௧௧ யெகோவாவோ பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னுடன் இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காததினால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கமுடியாத நிலையான வெட்கம் அவர்களுக்கு உண்டாகும்.
但是與我同在的上主,好像是一位孔武有力的戰士,為此迫害我的人只有失敗,決不能制勝;由於謀事不成,必蒙受極大的恥辱,永不可磨滅的羞辱。
12 ௧௨ ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள் மனதையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் யெகோவாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் செலுத்திவிட்டேன்.
噫萬軍的上主! 你考驗義人,洞察人的肝膽肺腑;我既給你訴說了我的案情,你使我見到你對他們的報復。
13 ௧௩ யெகோவாவைப் பாடுங்கள், யெகோவாவை துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றுகிறார்.
你們應歌頌上主,讚揚上主,因為他從惡人的手中,救出了窮苦人的性命。
14 ௧௪ நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.
願我誕生的那一天,是可咒罵的;願我母親生我的那一天,不蒙受祝福!
15 ௧௫ உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்றும் என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனிதன் சபிக்கப்படுவானாக.
願那給我父親報信說:「給你生了一個男孩,」叫他異常高興的人,是可詛咒的!
16 ௧௬ அந்த மனிதன், யெகோவா மனம் மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலையில் அலறுதலையும் மத்தியான வேளையில் கூக்குரலையும் கேட்கக்கடவன்.
願這人像上主不顧惜消滅的城市:早晨聽到哀號,正午聽到警報;
17 ௧௭ என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத கர்ப்பமாக இருப்பதற்காக கர்ப்பத்தில் நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?
因為他沒有叫我死在母胎,使我的母親成為我的墳墓,叫她永遠不分娩生我!
18 ௧௮ நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாகக்கழிய நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
為什麼我要從母胎裏出來,眼見辛酸痛苦,在羞辱中消磨我的歲月﹖