< எரேமியா 2 >

1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Опет ми дође реч Господња говорећи:
2 நீ போய், எருசலேமில் உள்ளவர்கள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்திரத்தில் நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Иди и вичи Јерусалиму да чује и говори: Овако вели Господ: Опомињем те се по милости у младости твојој и по љубави о веридби твојој, кад иђаше за мном по пустињи, и по земљи где се не сеје.
3 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குப் பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த அனைவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று யெகோவா சொல்லுகிறார்.
Израиљ беше светиња Господу и првина од родова Његових; који је јеђаху сви беху криви, зло долажаше на њих, вели Господ.
4 யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Чујте реч Господњу, доме Јаковљев и све породице дома Израиљевог.
5 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரச்செய்தவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடந்து செல்லாமலும் ஒரு மனிதனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்திரத்தில் எங்களை நடத்தினவருமாகிய யெகோவா எங்கேயென்று உங்கள் முற்பிதாக்கள் கேளாமல்,
Овако вели Господ: Какву неправду нађоше оци ваши у мене, те одступише од мене, и присташе за ништавилом, и посташе ништави?
6 என்னைவிட்டுப் பிரிந்து, வீணான விக்கிரங்களைப் பின்பற்றி, வீணராகப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
И не рекоше: Где је Господ који нас је извео из земље мисирске, који нас је водио по пустињи, по земљи пустој и пуној пропасти, по земљи сувој и где је сен смртни, по земљи преко које нико није ходио и у којој нико није живео?
7 செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடுவதற்கு நான் உங்களை அவ்விடத்திற்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் நுழைந்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்திரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
И кад вас доведох у земљу родну да једете род њен и добра њена, дошавши оскврнисте земљу моју и од наследства мог начинисте гад.
8 யெகோவா எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்செய்தார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனம் சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.
Свештеници не рекоше: Где је Господ? И који се баве законом не познаше ме, и пастири одусташе ме, и пророци пророковаше Валом и идоше за стварима залудним.
9 ஆதலால் இன்னும் நான் உங்களுடன் வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுடனும் வழக்காடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
За то ћу се још прети с вама, вели Господ, и са синовима синова ваших прећу се.
10 ௧0 நீங்கள் கித்தீமின் தீவுகள்வரை சென்று பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
Јер прођите острва китимска и видите и пошљите у Кидар, и разгледајте добро, и видите, је ли било такво шта:
11 ௧௧ எந்த மக்களாவது தெய்வங்களல்லாத தங்கள் தெய்வங்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் மக்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
Је ли који народ променио богове, ако и нису богови? А мој народ промени славу своју на ствар залудну.
12 ௧௨ வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Чудите се томе, небеса, и згрозите се и упропастите се! Вели Господ.
13 ௧௩ என் மக்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
Јер два зла учини мој народ: оставише мене, извор живе воде, и ископаше себи студенце, студенце испроваљиване, који не могу да држе воде.
14 ௧௪ இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்?
Је ли Израиљ роб? Је ли роб у кући рођен? Зашто поста грабеж?
15 ௧௫ பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.
Рикаше на њ лавићи и дизаше глас свој, и обратише земљу његову у пустош; градови су му попаљени, те нема никога да живи у њима.
16 ௧௬ நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் மக்களும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
И синови нофски и тафнески опасоше ти теме.
17 ௧௭ உன் தேவனாகிய யெகோவா உன்னை வழியில் நடத்திக்கொண்டு போகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ இதை உனக்கு சம்பவிக்கச்செய்தாய்?
Ниси ли то сам себи учинио оставивши Господа Бога свог кад те вођаше путем?
18 ௧௮ இப்போதும் நைல் நதியின்தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்திற்குப் போகிறதினால் உனக்குப் பலன் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பலன் என்ன?
А сада шта ће ти пут мисирски да пијеш воде сиорске? Шта ли ће ти пут асирски да пијеш воде из реке?
19 ௧௯ உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய யெகோவாவை விடுகிறதும், என்னைப்பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Твоја ће те злоћа покарати и твоје ће те одметање прекорити. Познај дакле и види да је зло и горко што си оставио Господа Бога свог и што нема страха мог у теби, вели Господ Господ над војскама.
20 ௨0 பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான எல்லா மேட்டின்மேலும், பச்சையான எல்லா மரத்தின்கீழும் நீ வேசியாகத் திரிகிறாய்.
Јер давно изломих јарам твој и раскидох свезе твоје, и ти рече: Нећу бити слуга; а на сваки високи хум и под свако зелено дрво идеш да се курваш.
21 ௨௧ நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சைச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சைச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?
Ја те посадих, лозу изабрану, све семе истинито; па како ми се промени и изметну се одвода од туђе лозе?
22 ௨௨ நீ உன்னை உவர்மண்ணினால் கழுவி, அதிக சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Да се измијеш салитром и узмеш много сапуна, опет ће се познавати безакоње твоје преда мном, вели Господ Господ.
23 ௨௩ நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ பொய்ச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கில் நீ நடக்கிற வழிமுறைகளைப் பார்; நீ செய்த பாவத்தை உணர்ந்துகொள்; ஆண் ஒட்டகத்தை தேடி அடைய தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண் ஒட்டகம் நீ.
Како можеш рећи: Нисам се оскврнио, нисам ишао за Валима? Погледај пут свој по долу; познај шта си учинила, брза камило, која остављаш знаке на својим путевима.
24 ௨௪ வனாந்திரத்தில் பழகினதும், தன் இச்சையின் மதவெறியில் காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.
Као дивља магарица, која је навикла на пустињу и по жељи душе своје вуче у се ветар, кад навали, ко ће је вратити? Који је траже неће се уморити, наћи ће је у месецу њеном.
25 ௨௫ உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய்.
Чувај ногу своју, да није боса, и грло своје, да не жедни. Али ти велиш: Од тога нема ништа; не, јер љубим туђе, и за њима ћу ићи.
26 ௨௬ திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; மரகட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப் பெற்றெடுத்தாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.
Као што се лупеж посрами кад се ухвати, тако ће се посрамити дом Израиљев, они, цареви њихови, кнезови њихови, и свештеници њихови и пророци њихови,
27 ௨௭ அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை காப்பாற்றும் என்கிறார்கள்.
Који говоре дрвету: Ти си отац мој; и камену: Ти си ме родио; јер ми окренуше леђа, а не лице; а кад су у невољи говоре: Устани и избави нас.
28 ௨௮ நீ உனக்கு உண்டாக்கின தெய்வங்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் காப்பாற்ற முடியுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் எண்ணிக்கையும், உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் சரி.
А где су богови твоји које си начинио себи? Нека устану, ако те могу избавити кад си у невољи, јер имаш, Јуда, богова колико градова.
29 ௨௯ என்னுடன் நீங்கள் வழக்காடவேண்டும்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம் செய்தீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Зашто хоћете да се правдате са мном? Ви сте се сви одметнули од мене, вели Господ.
30 ௩0 நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது.
Узалуд бих синове ваше, не примише науке; мач ваш прождре пророке ваше као лав који дави.
31 ௩௧ சந்ததியாரே, நீங்கள் யெகோவாவுடைய வார்த்தையைச் சிந்தித்துப்பாருங்கள்: நான் இஸ்ரவேலுக்கு வனாந்திரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின் ஏன் என் மக்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
О роде! Видите реч Господњу; бејах ли пустиња Израиљу или мрачна земља? Зашто говори мој народ: Господари смо, нећемо више доћи к теби?
32 ௩௨ ஒரு பெண் தன் நகைகளையும், ஒரு மணப்பெண் தன் திருமண ஆடைகளையும் மறப்பாளோ? என் மக்களோ அநேக வருடங்களாக என்னை மறந்துவிட்டார்கள்.
Заборавља ли девојка свој накит и невеста урес свој? А народ мој заборави ме толико дана да им нема броја.
33 ௩௩ நேசத்தைத் தேடுவதற்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத பெண்களுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
Зашто говориш да је добар твој пут тражећи шта љубиш? Па си и неваљале жене научио својим путевима.
34 ௩௪ உன் ஆடைஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளிப்படியாக இருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
И још на скутовима твојим налази се крв сиромаха правих; не налазим копајући, него је на свима њима.
35 ௩௫ ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டு நீங்கிவிட்டது என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினால் நான் உன்னுடன் வழக்காடுவேன்.
А ти говориш: Нисам крив, гнев се Његов одвратио од мене. Ево ја ћу се прети с тобом што говориш: Нисам згрешио.
36 ௩௬ நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கப்பட்டதுபோல எகிப்தினாலும் வெட்கப்படுவாய்.
Зашто трчкаш тако мењајући свој пут? Посрамићеш се од Мисирца како си се посрамио од Асирца.
37 ௩௭ நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனென்றால், உன் நம்பிக்கைகளைக் யெகோவா வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.
Отићи ћеш и одатле с рукама над главом својом, јер Господ одбацује узданице твоје, и нећеш бити срећан у њима.

< எரேமியா 2 >