< எரேமியா 18 >
1 ௧ யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
Lời của Đức Giê-hô-va phán cho Giê-rê-mi như vầy:
2 ௨ நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
Ngươi khá chờ dậy, xuống trong nhà thợ gốm kia, tại đó ta sẽ cho ngươi nghe lời ta.
3 ௩ அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினால் வனைந்துகொண்டிருந்தான்.
Tôi bèn xuống trong nhà thợ gốm, nầy, nó đang nắn đồ trên cái bàn xây.
4 ௪ குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாத்திரம் அவன் கையிலே கெட்டுப்போனது; அப்பொழுது அதைச் சரியாக செய்வதற்கு, தன் பார்வைக்குச் சரியாக தோன்றுகிற விதத்தில் குயவன் அதைத் திரும்ப வேறு பாத்திரமாக வனைந்தான்.
Cái bình đã nắn ra bằng đất sét bị hư trong tay người thợ gốm, thì nó lấy mà nắn cái bình khác, tùy ý mình muốn làm.
5 ௫ அப்பொழுது யெகோவாவுடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்:
Bấy giờ, có lời Đức Giê-hô-va phán cùng tôi rằng:
6 ௬ இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று யெகோவா சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
Đức Giê-hô-va phán: Hỡi nhà Y-sơ-ra-ên, ta đối với các ngươi há chẳng làm được như người thợ gốm hay sao? Hỡi nhà Y-sơ-ra-ên, đất sét ở trong tay thợ gốm thể nào, thì các ngươi cũng ở trong tay ta thể ấy.
7 ௭ பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு தேசத்திற்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்திற்கு விரோதமாகவும் சொன்ன உடனே,
Trong lúc nào ta sẽ nói về một dân một nước kia đặng nhổ đi, hủy đi, diệt đi;
8 ௮ நான் விரோதமாய்ப் பேசின அந்த தேசத்தார் தங்கள் தீமையைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாமல், மனம் மாறுவேன்.
nếu nước mà ta nói đó xây bỏ điều ác mình, thì ta sẽ đổi ý ta đã toan giáng tai họa cho nó.
9 ௯ கட்டுவேன், நாட்டுவேன் என்றும் ஒரு தேசத்தையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.
Cũng có lúc nào ta sẽ nói về một dân một nước kia đặng dựng nó, trồng nó;
10 ௧0 அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களென்றால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாமல், மனம் மாறுவேன்.
nếu nước ấy làm điều ác trước mắt ta và không nghe tiếng ta, thì ta sẽ đổi ý ta đã định xuống phước cho nó.
11 ௧௧ இப்பொழுதும், நீ யூதாவின் மனிதரையும் எருசலேமின் குடிமக்களையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை ஏற்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தைத் திட்டமிடுகிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன்தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் செயல்களையும் ஒழுங்குபடுத்துங்களென்று யெகோவா உரைக்கிறாரென்று சொல்.
Vậy nên bây giờ, hãy nói cùng người Giu-đa và dân cư Giê-ru-sa-lem, bảo họ rằng: Đức Giê-hô-va phán như vầy: Nầy, ta đang gây tai vạ đánh các ngươi, đặt mưu kế hại các ngươi. Ai nầy khá dạy lại khỏi đường ác mình, chữa đường lối mình và công việc mình!
12 ௧௨ ஆனாலும் அவர்கள்: அது முடியாத காரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தின் கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள்.
Nhưng họ nói rằng: Khéo mất công! Chúng ta cứ theo mưu mình; ai nấy sẽ theo sự cứng cỏi của lòng xấu mình.
13 ௧௩ ஆகையால் யெகோவா சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று அந்நிய மக்களுக்குள் விசாரித்துப்பாருங்கள்; மிகவும் அதிர்ச்சியடையும் காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள்.
Vậy nên, Đức Giê-hô-va phán như vầy: Hãy hỏi trong các nước có ai đã hề nghe sự như vậy không? Gái đồng trinh của Y-sơ-ra-ên đã làm việc đáng gớm.
14 ௧௪ லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து இல்லாமல் போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ?
Có ai thấy tuyết của Li-ban lìa bỏ vần đá nơi đồng bằng chăng? Hay là có ai thấy nước sông mát từ xa chảy đến mà cạn tắt đi chăng?
15 ௧௫ என் மக்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; ஒழுங்குபடுத்தப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களை முந்தின பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது.
Thế mà dân ta đã quên ta; đốt hương cho thần tượng giả dối. Vì vậy, nó đã vấp ngã trong đường mình, trong nẻo cũ, đặng đi trong đường chưa dọn đắp.
16 ௧௬ நான் அவர்களுடைய தேசத்தை அழிக்கவும், என்றென்றைக்கும் சத்தமிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்.
Nên đất nó trở nên gở lạ, làm trò cười mãi mãi; kẻ qua người lại đều sững sờ và lắc đầu.
17 ௧௭ கொண்டல்காற்றுப் பறக்கடிப்பதுபோல நான் அவர்களை அவர்கள் எதிரிகளுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளில் என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார்.
Ta sẽ làm cho nó tan lạc trước mặt kẻ thù, như bởi trận gió đông; ta xây lưng lại đằng nó, chẳng xây mặt lại trong ngày nó bị tai nạn.
18 ௧௮ அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்தில் வேதமும், ஞானிகளிடத்தில் ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்தில் வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனிக்காமல், இவனை தீயவார்த்தைகளால் அவமாக்கிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.
Chúng nó bèn nói rằng: Hãy đến, đồng lập mưu nghịch cùng Giê-rê-mi; vì thầy tế lễ chẳng thiếu gì luật pháp, người khôn ngoan chẳng thiếu gì sự khôn ngoan, đấng tiên tri chẳng thiếu gì lời tiên tri. Chúng ta hãy đến, lấy miệng lưỡi mình mà công kích nó, đừng để tai vào lời nó nói chút nào.
19 ௧௯ யெகோவாவே, நீர் என்னைக் கவனித்து, என்னுடன் வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.
Hỡi Đức Giê-hô-va, xin vì tôi ghé tai nghe những lời của kẻ cãi lẫy với tôi!
20 ௨0 நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய கடுங்கோபத்தை அவர்களை விட்டுத்திருப்புவதற்கு நான் அவர்களுக்காக நன்மையைப் பேச உமக்கு முன்பாக நின்றதை நினைத்தருளும்.
Người ta có lẽ nào lấy ác báo thiện sao? vì họ đã đào hầm đặng hại linh hồn tôi. Xin Ngài nhớ rằng tôi từng đứng trước mặt Ngài đặng vì họ cầu phước, làm cho cơn giận Ngài xây khỏi họ.
21 ௨௧ ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்திற்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளையில்லாதவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் கணவன்கள் கொலை செய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் போரில் பட்டயத்தால் மடியக்கடவர்கள்.
Vậy nên, xin Ngài phó con cái họ cho sự đói kém, và chính mình họ cho quyền gươm dao. Nguyền cho vợ họ mất con và trở nên góa bụa, cho chồng bị chết dịch, cho những người trai tráng bị gươm đánh giữa trận mạc.
22 ௨௨ நீர் உடனே அவர்கள்மேல் படையை வரச்செய்யும்போது, கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.
Nguyền cho người ta nghe tiếng kêu ra từ trong nhà, khi Ngài sẽ khiến đạo quân thoạt đến xông vào họ! Vì họ đã đào hầm để sập bắt tôi, đã giấu lưới dưới chân tôi.
23 ௨௩ ஆனாலும் யெகோவாவே, அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள்; உமது கோபத்தின் காலத்தில் இப்படி அவர்களுக்குச் செய்யும்.
Hỡi Đức Giê-hô-va, chính Ngài biết cả mưu chước họ nghịch cùng tôi để giết tôi. Xin đừng tha sự gian ác họ, đừng xóa tội lỗi họ khỏi mắt Ngài; nhưng cho họ vấp ngã trước mặt Ngài; xin Ngài phạt họ trong ngày nổi giận của Ngài!