< எரேமியா 17 >
1 ௧ யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களின் கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
౧యూదా పాపం వజ్రపు కొన ఉన్న ఇనుప కలంతో రాసి ఉంది. అది వారి హృదయాలు అనే పలకల మీద, మీ బలిపీఠాల కొమ్ముల మీద చెక్కి ఉంది.
2 ௨ உயர்ந்த மேடுகளின்மேல் பச்சையான மரங்கள் அருகில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.
౨వారి ప్రజలకు ఎత్తయిన కొండల మీదున్న తమ బలిపీఠాలూ పచ్చని చెట్ల కిందున్న అషేరా దేవతా స్థంభాలూ గుర్తే.
3 ௩ வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் சொத்துக்களையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும், உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன்.
౩సరిహద్దుల్లోని పర్వతాల మీదున్న వారి బలిపీఠాలు వారికి గుర్తే. నీ ఆస్తిని, నీ నిధులన్నిటిని దోపుడు సొమ్ముగా నేనప్పగిస్తాను. మీ పాపం మీ దేశమంతా ఉంది.
4 ௪ அப்படியே நான் உனக்குக் கொடுத்த நிலத்தை நீ தானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் எதிரிகளுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் நெருப்பை மூட்டிவிட்டீர்களே.
౪నేను నీకిచ్చిన స్వాస్థ్యాన్ని నువ్వు పోగొట్టుకుంటావు. మీరు నా కోపాగ్ని రగులబెట్టారు. అది ఎప్పటికీ మండుతూ ఉంటుంది. నీవెరుగని దేశంలో నీ శత్రువులకు నువ్వు బానిసవవుతావు.
5 ௫ மனிதன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, யெகோவாவைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று யெகோவா சொல்லுகிறார்.
౫యెహోవా ఇలా సెలవిస్తున్నాడు “మనుషులను నమ్ముకునేవాడు శాపగ్రస్తుడు. శరీరులను తనకు బలంగా చేసుకుని తన హృదయాన్ని యెహోవా మీదనుంచి తొలగించుకునేవాడు శాపగ్రస్తుడు.
6 ௬ அவன் அந்தரவெளியில் உலர்ந்துபோன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்திரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
౬వాడు ఎడారిలోని పొదలాగా ఉంటాడు. వాడికి ఏ మేలూ కనబడదు. వాడు ఎడారిలో రాళ్ళ మధ్య, చవిటి భూమిలో నిర్జన ప్రాంతంలో నివసిస్తాడు.
7 ௭ யெகோவாமேல் நம்பிக்கைவைத்து, யெகோவாவை தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனிதன் பாக்கியவான்.
౭అయితే యెహోవాను నమ్ముకునేవాడు ధన్యుడు. యెహోవా వాడికి ఆశ్రయంగా ఉంటాడు.
8 ௮ அவன் தண்ணீர் அருகில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், வெயில் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைகுறைவான வருடத்திலும் வருத்தமில்லாமல் தவறாமல் பழங்களைக் கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
౮వాడు నీళ్ళ ఊట దగ్గర చెట్టులాగా ఉంటాడు. దాని వేళ్ళు చుట్టుపక్కలా వ్యాపిస్తాయి. ఎండ వచ్చినా దానికి చలనం ఉండదు. దాని ఆకులు పచ్చగా ఉంటాయి. కరువు కాలాల్లో కంగారు పడదు. కాపు మానదు.
9 ௯ எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
౯హృదయం అన్నిటికంటే మోసకరం. దానికి వ్యాధి ఉంది. దాన్ని ఎవడు అర్థం చేసుకోగలడు?
10 ௧0 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின் பலன்களுக்கும் தகுந்ததைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
౧౦నేను యెహోవాను. హృదయాన్ని పరిశోధిస్తాను. మనసును పరీక్షిస్తాను. ప్రతి ఒక్కరికీ వారి ప్రవర్తన ప్రకారం వారి పనులకు తగ్గట్టుగా నేనిస్తాను.
11 ௧௧ அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அடைகாத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதில் அதைவிட்டு, தன் முடிவில் மூடனாயிருப்பான்.
౧౧కౌజుపిట్ట తాను పెట్టని గుడ్లను పొదుగుతుంది. ఎవడైనా అక్రమంగా ఆస్తి సంపాదించుకోగలడు. అయితే తన ఉచ్ఛదశలో ఆ ఆస్తి వాణ్ణి వదిలేస్తుంది. చివరికి వాడు తెలివితక్కువవాడని తేలుతుంది.”
12 ௧௨ எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது.
౧౨మొదటి నుంచి మా దేవాలయ స్థలం ఘనమైన సింహాసనం లాంటిది.
13 ௧௩ இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே, உம்மைவிட்டு விலகுகிற அனைவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய யெகோவாவைவிட்டு விலகிப்போனதினால், உம்மைவிட்டு விலகிப்போகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
౧౩యెహోవాయే ఇశ్రాయేలుకు ఆశాభావం. నిన్ను విడిచిపెట్టే వాళ్ళంతా సిగ్గుపాలవుతారు. దేశంలో నీనుంచి దూరమైన వాళ్ళతో సంబంధం తెగిపోతుంది. ఎందుకంటే వాళ్ళు యెహోవా అనే జీవజలాల ఊటను వదిలేశారు.
14 ௧௪ யெகோவாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னைக் காப்பாற்றும், அப்பொழுது காப்பாற்றப்படுவேன்; தேவரீரே என் துதி.
౧౪యెహోవా, నన్ను బాగు చెయ్యి. నేను బాగుపడతాను! నన్ను కాపాడు. నేను క్షేమంగా ఉంటాను. నువ్వే నా స్తుతి పాట.
15 ௧௫ இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள்.
౧౫వాళ్ళు “యెహోవా వాక్కు ఎక్కడుంది? దాన్ని రానివ్వు” అంటున్నారు.
16 ௧௬ நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மீறிநடக்கவில்லை; ஆபத்து நாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாக ஒழுங்காக இருந்தது.
౧౬నేను నిన్ను అనుసరిస్తూ కాపరిగా ఉండడం మానలేదు. విపత్తుదినం కోసం నేను ఎదురు చూడలేదు. నా నోట నుంచి వచ్చిన మాటలు నీకు తెలుసు. అవి నీ దగ్గరనుంచే వచ్చాయి.
17 ௧௭ நீர் எனக்குப் பயங்கரமானவராக இருக்காதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.
౧౭నువ్వు నాకు భయకారణంగా ఉండవద్దు. విపత్తు రోజున నువ్వే నా ఆశ్రయం.
18 ௧௮ நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல், அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரச்செய்து, இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.
౧౮నన్ను తరిమేవాళ్ళు సిగ్గుపడాలి, కానీ నన్ను సిగ్గుపడనివ్వొద్దు. నన్ను దిగులు పడనివ్వక వాళ్ళను దిగులు పడనివ్వు. వాళ్ళ మీదికి ఆపద రోజులు రప్పించు. రెట్టింపు నాశనం వాళ్ళ మీదికి రప్పించు.
19 ௧௯ யெகோவா என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் போக்கும் வரத்துமாயிருக்கிற இந்த மக்களின் பிள்ளைகளுடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,
౧౯యెహోవా నాతో ఇలా చెప్పాడు. “నువ్వు వెళ్లి యూదా రాజులు వచ్చిపోయే కోట గుమ్మంలో, ఆ తర్వాత యెరూషలేము ద్వారాలన్నిటిలో నిలబడు.
20 ௨0 அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் நுழைகிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிமக்களுமாகிய நீங்கள் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
౨౦వారితో ఇలా చెప్పు, యూదా రాజులారా! యూదా ప్రజలారా! యెరూషలేము నివాసులారా! ఈ ద్వారాలగుండా ప్రవేశించే మీరంతా యెహోవా మాట వినండి.
21 ௨௧ நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராமலிருக்கவும்.
౨౧యెహోవా చెప్పేదేమిటంటే, మీరు జాగ్రత్తగా ఉండి విశ్రాంతి దినాన బరువులు మోయవద్దు. యెరూషలేము ద్వారాలగుండా వాటిని తీసుకు రావద్దు.
22 ௨௨ ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாமலிருக்கவும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
౨౨విశ్రాంతి దినాన మీ ఇళ్ళలోనుంచి బరువులు మోసుకుపోవద్దు. మరి ఏ పనీ చేయవద్దు. నేను మీ పూర్వీకులకు ఆజ్ఞాపించినట్టు విశ్రాంతి దినాన్ని పవిత్ర దినంగా ఆచరించండి.
23 ௨௩ அவர்களோ கேளாமலும், கீழ்ப்படியாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
౨౩అయితే వాళ్ళు వినలేదు, శ్రద్ధ వహించలేదు. తలబిరుసుగా ఉండి నా మాట వినక, క్రమశిక్షణ పాటించలేదు.”
24 ௨௪ நீங்களோவென்றால், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராமலும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்க என் சொல்லைக் கேட்பீர்களானால்,
౨౪యెహోవా ఇలా చెప్పాడు. “మీరు నామాట జాగ్రత్తగా విని, విశ్రాంతి దినాన మరే పనీ చేయక దాన్ని పవిత్ర దినంగా ఆచరించండి. విశ్రాంతి దినాన ఈ పట్టణపు ద్వారాల గుండా బరువులు తీసుకు రాకండి.
25 ௨௫ அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனிதரும், எருசலேமின் குடிமக்களும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் நுழைவார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
౨౫అప్పుడు దావీదు సింహాసనమెక్కే రాజులూ అధిపతులూ ఈ నగర ద్వారాలగుండా ప్రవేశిస్తారు. రథాల మీదా గుర్రాల మీదా ఎక్కి తిరిగే రాజులూ అధిపతులూ యూదావారూ యెరూషలేము నివాసులూ వస్తారు. ఈ పట్టణం ఎప్పటికీ నిలిచి ఉంటుంది.
26 ௨௬ யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறத்திலுள்ள ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான வேறுதேசத்திலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து மக்கள் சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், சாப்பிட உணவுபலிகளையும், நறுமணப்பொருட்களையும், நன்றிபலிகளையும் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவருவார்கள்.
౨౬ప్రజలు దహనబలులనూ బలులనూ నైవేద్యాలనూ ధూపద్రవ్యాలనూ స్తుతియాగ ద్రవ్యాలనూ నా మందిరానికి తెస్తారు. వాళ్ళు యూదా పట్టణాల్లో నుంచి, యెరూషలేము ప్రాంతాల్లో నుంచి, బెన్యామీను దేశంలో నుంచి, మైదాన ప్రాంతంలో నుంచి, కొండసీమ నుంచి, దక్షిణ ప్రదేశం నుంచి వస్తారు.
27 ௨௭ நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்க ஓய்வுநாளில் சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கவும், என் சொல்லைக் கேளாமற்போனீர்களென்றால், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை எரித்தும், அணைந்துபோகாதிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
౨౭అయితే మీరు విశ్రాంతి దినాన్ని పవిత్రంగా ఆచరించి, ఆ దినాన బరువులు మోస్తూ యెరూషలేము ద్వారాల గుండా ప్రవేశించకూడదని నేను చెప్పిన మాట వినకపోతే నేను దాని ద్వారాల్లో మంట పెడతాను. అది రాజ భవనాలను కాల్చివేస్తుంది. దాన్ని ఆర్పడం ఎవరి తరమూ కాదు.”