< எரேமியா 16 >
1 ௧ யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
И бысть слово Господне ко мне, рекущее: и ты да не поймеши жены,
2 ௨ நீ பெண்ணைத் திருமணம் செய்யவேண்டாம்; இவ்விடத்தில் உனக்கு மகன்களும் மகள்களும் இருக்கவேண்டாம் என்றார்.
и не родится тебе сын, ниже дщерь на месте сем.
3 ௩ இவ்விடத்தில் பிறக்கிற மகன்களையும் மகள்களையும், இந்தத் தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற தகப்பன்களையும் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
Яко сия глаголет Господь от сынех и дщерех, иже родятся на месте сем, и о матерех их, яже родиша их, и о отцех их родивших я в земли сей:
4 ௪ மகா கொடிய வியாதிகளால் இறப்பார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்செய்வாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து போவார்கள்; அவர்களுடைய உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
смертию лютою изомрут, не оплачутся и не погребутся: во образ на лицы земли будут и мечем падут и гладом скончаются, и будут трупие их во снедь птицам небесным и зверем земным.
5 ௫ ஆகையால், நீ துக்கவீட்டில் நுழையாமலும், புலம்புவதற்க்குப்போகாமலும் அவர்களுக்கு பரிதாபப்படாமலும் இருப்பாயாக என்று யெகோவா சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த மக்களைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Сия глаголет Господь: да не внидеши в дом их пирный, ни да ходиши плакати, ниже да рыдаеши их, понеже отях мир Мой от людий сих, рече Господь, милость и щедроты.
6 ௬ இந்த தேசத்தில் பெரியோரும் சிறியோரும் இறப்பார்கள்; அவர்களை அடக்கம்செய்வாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்களுக்காக கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.
И умрут велицыи и малии в земли сей: не погребутся, ни оплачутся, ниже терзание о них будет, ниже обриются ради их,
7 ௭ இறந்தவர்களுக்காக ஏற்படுகிற துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு ஆகாரம் பரிமாறப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவோ, ஒருவனுடைய தாய்க்காவோ துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
и не преломят хлеба во стенании их ко утешению над мертвым, и не дадут им пития чаши ко утешению над отцем и материю их.
8 ௮ நீ அவர்களுடன் அமர்ந்து சாப்பிட விருந்துவீட்டிலும் நுழையாதே.
И в дом пирный да не внидеши седети с ними, еже ясти и пити.
9 ௯ ஏனெனில், இதோ, இவ்விடத்தில் நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும் ஓயச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Понеже сия глаголет Господь Сил, Бог Израилев: се, Аз отиму от места сего во очию вашею и во днех ваших глас радости и глас веселия, глас жениха и глас невесты.
10 ௧0 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த மக்களுக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: யெகோவா எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கை ஏன் சொல்லவேண்டும் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன என்றும் கேட்பார்களானால்,
И будет, егда возвестиши людем сим вся словеса сия, и рекут к тебе: вскую глаголал есть Господь на нас вся злая сия? Кая неправда наша? И кий грех наш, имже согрешихом Господу Богу нашему?
11 ௧௧ நீ அவர்களை நோக்கி: உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்கி, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.
И речеши к ним: понеже оставиша Мя отцы ваши, глаголет Господь, и идоша вслед богов чуждих, и послужиша им и поклонишася им, Мене же оставиша и закона Моего не сохраниша:
12 ௧௨ நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் பார்க்கிலும் அதிகக் கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக்கேளாமல், உங்கள் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடக்கிறீர்கள்.
и вы горше деласте, неже отцы ваши, и се, вы ходите кийждо вслед похотей сердца вашего лукаваго, еже не слушати Мене:
13 ௧௩ ஆகவே, உங்களை இந்தத் தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தெய்வங்களை வணங்குவீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.
и изрину вас от земли сея в землю, еяже не весте вы и отцы ваши, и послужите тамо богом чуждим день и нощь, иже не дадут вам милости.
14 ௧௪ ஆகவே, இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம் செய்யாமல்,
Сего ради, се, дние грядут, глаголет Господь, и не рекут ктому: жив Господь, иже изведе сынов Израилевых от земли Египетския:
15 ௧௫ இஸ்ரவேல் மக்களை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரவழைத்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்செய்வார்கள்; நான் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
но: живет Господь, иже изведе сынов Израилевых от земли северныя и от всех стран, аможе извержени быша: и возвращу их в землю их, юже дах отцем их.
16 ௧௬ இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.
Се, Аз послю рыбари многи, рече Господь, и уловят их: и посем послю многи ловцы, и уловят их на всяцей горе и на всяцем холме и от пещер каменных.
17 ௧௭ என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.
Яко очи Мои на всех путех их, не сокровени суть от лица Моего, и не утаена суть беззакония их от очию Моею.
18 ௧௮ முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்திற்கும், அவர்களுடைய பாவத்திற்கும் இரட்டிப்பாக நீதி செய்வேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் பங்கைச் சீயென்று அருவருக்குமளவுக்கு தங்கள் காரியங்களின் அசுத்தமான விக்கிரகங்களினால் நிரப்பினார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
И воздам первее сугубая беззакония и грехи их, имиже оскверниша землю Мою в мертвечинах мерзостей своих и в беззакониих своих, имиже наполниша достояние Мое.
19 ௧௯ என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய யெகோவாவே, அந்நியமக்கள் பூமியின் கடைசிமுனைகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் முற்பிதாக்கள் பிரயோஜனமில்லாத வீணான விக்கிரங்களைக் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
Господи, Ты крепость моя и помощь моя и прибежище мое во днех злых: к Тебе языцы приидут от последних земли и рекут: воистинну лживых стяжаша отцы наши идолов, и несть в них пользы.
20 ௨0 மனிதன் தனக்குத் தெய்வங்களை உண்டாக்கலாமோ? அவைகள் தெய்வங்கள் அல்லவே.
Еда сотворит себе человек боги, и тии не суть бози?
21 ௨௧ ஆதலால் இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியவைப்பேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரிவிப்பேன்; என் பெயர் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
Сего ради, се, Аз покажу им во время сие руку Мою и знаему сотворю им силу Мою, и познают, яко имя Мне Господь.