< எரேமியா 13 >
1 ௧ யெகோவா என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் இடுப்பில் கட்டிக்கொள்; அதில் தண்ணீர் படவிடாதே என்றார்.
ख़ुदावन्द ने मुझे यूँ फ़रमाया कि “तू जाकर अपने लिए एक कतानी कमरबन्द ख़रीद ले और अपनी कमर पर बाँध, लेकिन उसे पानी में मत भिगो।”
2 ௨ நான் யெகோவாவுடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் இடுப்பில் கட்டிக்கொண்டேன்.
तब मैंने ख़ुदावन्द के कलाम के मुवाफ़िक़ एक कमरबन्द ख़रीद लिया और अपनी कमर पर बाँधा।
3 ௩ இரண்டாம்முறை யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
और ख़ुदावन्द का कलाम दोबारा मुझ पर नाज़िल हुआ और उसने फ़रमाया,
4 ௪ நீ வாங்கினதும் உன் இடுப்பில் இருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிவரை போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பில் ஒளித்துவை என்றார்.
कि “इस कमरबन्द को जो तूने ख़रीदा और जो तेरी कमर पर है, लेकर उठ और फ़रात को जा और वहाँ चट्टान के एक शिगाफ़ में उसे छिपा दे।”
5 ௫ நான் போய், யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்தில் ஒளித்து வைத்தேன்.
चुनाँचे मैं गया और उसे फ़रात के किनारे छिपा दिया, जैसा ख़ुदावन्द ने मुझे फ़रमाया था।
6 ௬ அநேக நாட்கள் சென்றபின்பு யெகோவா என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.
और बहुत दिनों के बाद यूँ हुआ कि ख़ुदावन्द ने मुझे फ़रमाया, कि उठ, फ़रात की तरफ़ जा और उस कमरबन्द को जिसे तूने मेरे हुक्म से वहाँ छिपा रख्खा है, निकाल ले।
7 ௭ அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்தில் தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமல் போனது.
तब मैं फ़रात को गया और खोदा और कमरबन्द को उस जगह से जहाँ मैंने उसे गाड़ दिया था, निकाला और देख, वह कमरबन्द ऐसा ख़राब हो गया था कि किसी काम का न रहा।
8 ௮ அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
तब ख़ुदावन्द का कलाम मुझ पर नाज़िल हुआ:
9 ௯ இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகச்செய்வேன்.
कि “ख़ुदावन्द यूँ फ़रमाता है कि इसी तरह मैं यहूदाह के ग़ुरूर और येरूशलेम के बड़े ग़ुरूर को तोड़ दूँगा।
10 ௧0 என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தெய்வங்களை வணங்கி அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத மக்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப் போலாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
यह शरीर लोग जो मेरा कलाम सुनने से इन्कार करते हैं और अपने ही दिल की सख़्ती के पैरौ होते, और ग़ैर मा'बूदों के तालिब होकर उनकी इबादत करते और उनको पूजते हैं, वह इस कमरबन्द की तरह होंगे जो किसी काम का नहीं।
11 ௧௧ கச்சையானது மனிதனுடைய இடுப்பில் இணைக்கப்பட்டு இருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரையும் யூதாவின் குடும்பத்தார் அனைவரையும், எனக்கு மக்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் இணைத்துக்கொண்டேன்; ஆனாலும் அவர்கள் கேட்காமற்போனார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
क्यूँकि जैसा कमरबन्द इंसान की कमर से लिपटा रहता है वैसा ही, ख़ुदावन्द फ़रमाता है, मैंने इस्राईल के तमाम घराने और यहूदाह के तमाम घराने को लिया कि मुझसे लिपटे रहें; ताकि वह मेरे लोग हों और उनकी वजह से मेरा नाम हो, और मेरी सिताइश की जाए और मेरा जलाल हो; लेकिन उन्होंने न सुना।
12 ௧௨ எல்லா பாத்திரங்களும் திராட்சைரசத்தினால் நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறார் என்ற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: எல்லா பாத்திரங்களும் திராட்சைரசத்தினால் நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.
तब तू उनसे ये बात भी कह दे कि ख़ुदावन्द, इस्राईल का ख़ुदा, यूँ फ़रमाता है कि 'हर एक मटके में मय भरी जाएगी। और वह तुझ से कहेंगे, 'क्या हम नहीं जानते कि हर एक मटके में मय भरी जाएगी?”
13 ௧௩ அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்லோரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிமக்கள் எல்லோரையும் நான் வெறியினால் நிரப்பி,
तब तू उनसे कहना, 'ख़ुदावन्द यूँ फ़रमाता है कि देखो, मैं इस मुल्क के सब बाशिन्दों को, हाँ, उन बादशाहों को जो दाऊद के तख़्त पर बैठते हैं, और काहिनों और नबियों और येरूशलेम के सब बाशिन्दों को मस्ती से भर दूँगा।
14 ௧௪ தகப்பன்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.
और मैं उनको एक दूसरे पर, यहाँ तक कि बाप को बेटों पर दे मारूँगा, ख़ुदावन्द फ़रमाता है, मैं न शफ़कत करूँगा, न रि'आयत और न रहम करूँगा कि उनको हलाक न करूँ।
15 ௧௫ நீங்கள் காதுகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாக இராதேயுங்கள்; யெகோவா விளம்பினார்.
सुनो और कान लगाओ, ग़ुरूर न करो, क्यूँकि ख़ुदावन्द ने फ़रमाया है।
16 ௧௬ அவர் அந்தகாரத்தை வரச்செய்வதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் தடுமாறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்திற்குக் காத்திருக்கும்போது, அவர் அதை இருளும் காரிருளுமாக மாறச்செய்வதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
ख़ुदावन्द अपने ख़ुदा की तम्जीद करो, इससे पहले के वह तारीकी लाए और तुम्हारे पाँव गहरे अन्धेरे में ठोकर खाएँ; और जब तुम रोशनी का इन्तिज़ार करो, तो वह उसे मौत के साये से बदल डाले और उसे सख़्त तारीकी बना दे।
17 ௧௭ நீங்கள் இதைக் கேளாமற்போனால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, யெகோவாவுடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
लेकिन अगर तुम न सुनोगे, तो मेरी जान तुम्हारे ग़ुरूर की वजह से ख़िल्वतख़ानों में ग़म खाया करेगी; हाँ, मेरी आँखें फूट फूटकर रोएँगी और आँसू बहाएँगी, क्यूँकि ख़ुदावन्द का गल्ला ग़ुलामी में चला गया।
18 ௧௮ நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: கீழேவந்து உட்காருங்கள்; உங்கள் தலையின் அலங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள்.
बादशाह और उसकी वालिदा से कह, ''आजिज़ी करो और नीचे बैठो, क्यूँकि तुम्हारी बुज़ुर्गी का ताज तुम्हारे सिर पर से उतार लिया गया है।
19 ௧௯ தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடியில்லாமல்போகும்; அது எளிதாகச் சிறைப்பட்டுப்போகும்.
दख्खिन के शहर बन्द हो गए और कोई नहीं खोलता, सब बनी यहूदाह ग़ुलाम हो गए; सबको ग़ुलाम करके ले गए।
20 ௨0 உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?
'अपनी आँखें उठा और उनको जो उत्तर से आते हैं, देख। वह गल्ला जो तुझे दिया गया था, तेरा ख़ुशनुमा गल्ला कहाँ है?
21 ௨௧ அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும், தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்கப்படுத்தினாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?
जब वह तुझ पर उनको मुक़र्रर करेगा जिनको तूने अपनी हिमायत की ता'लीम दी है, तो तू क्या कहेगी? क्या तू उस 'औरत की तरह जिसे पैदाइश का दर्द हो, दर्द में मुब्तिला न होगी?
22 ௨௨ இவைகள் எனக்கு சம்பவித்தது ஏனென்று நீ உன் இருதயத்தில் சொல்வாய் என்றால், உன் மிகுதியான அக்கிரமத்தினால் உன் ஆடையின் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
और अगर तू अपने दिल में कहे कि यह हादसे मुझ पर क्यूँ गुज़रे? तेरी बदकिरदारी की शिद्दत से तेरा दामन उठाया गया और तेरी एड़ियाँ जबरन बरहना की गईं।
23 ௨௩ எத்தியோப்பியன் தன் தோலையும் சிறுத்தை தன் புள்ளிகளையும் மாற்றமுடிமோ? மாற்றமுடியுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மை செய்யமுடியும்.
हब्शी अपने चमड़े को या चीता अपने दाग़ों को बदल सके, तो तुम भी जो बदी के 'आदी हो नेकी कर सकोगे।
24 ௨௪ ஆதலால் வனாந்திரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன்.
इसलिए मैं उनको उस भूसे की तरह जो वीराने की हवा से उड़ता फिरता है, तितर — बितर करूँगा।
25 ௨௫ நீ என்னை மறந்து, பொய்யை நம்பினதினால், இது உன்னுடைய தீர்மானமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
ख़ुदावन्द फ़रमाता है कि मेरी तरफ़ से यही तेरा हिस्सा, तेरा नपा हुआ हिस्सा है; क्यूँकि तूने मुझे फ़रामोश करके बेकारी पर भरोसा किया है।
26 ௨௬ உன் மானம் காணப்பட நான் உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை எடுத்துப்போடுவேன்.
फिर मैं भी तेरा दामन तेरे सामने से उठा दूँगा, ताकि तू बेपर्दा हो।
27 ௨௭ உன் விபசாரங்களையும், உன் கனைப்புகளையும், வெளியில் மேடுகளின்மேல் நீ செய்த வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ, நீ சுத்தமாக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலம் வரைக்கும் நடக்கும் என்கிறார்.
मैंने तेरी बदकारी, तेरा हिनहिनाना, तेरी हरामकारी और तेरे नफ़रतअंगेज़ काम जो तूने पहाड़ों पर और मैदानों में किए, देखे हैं। ऐ येरूशलेम, तुझ पर अफ़सोस! तू अपने आपको कब तक पाक — ओ — साफ़ न करेगी?