< யாக்கோபு 1 >

1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது.
这封信来自上帝和主耶稣基督的仆人雅各,写给散落在各国的十二支派。在此向你们问候!
2 என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது,
我的朋友们,当你们遭遇各种困难时,请选择保持欢喜;
3 உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
因为你们知道,这些都是挑战你对上帝的信心,这个过程会产生忍耐。
4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும்.
希望你们的忍耐尽可能强大,让你们可以彻底成熟,没有任何匮乏。
5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
你们如有人需要智慧,就询问上帝,他慷慨厚赐众人,从无保留。
6 ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான்.
但要凭着对他的信念祈求他,不要有疑惑。疑惑之人,正如被风吹拂翻腾的碎浪。
7 அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக.
那样的人别想从主那里获得什么——
8 ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.
因为这样三心两意之人,在所有道路上都会摇摆不定。
9 ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்.
出身贫穷的信徒,应当以赐予他们的高位为荣;
10 ௧0 ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான்.
富足之人也不应该以谦卑之位为辱;因为他们会向田野中的花,必会枯萎。
11 ௧௧ சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான்.
太阳出来,热风一吹,草就会枯干,花必凋谢,它的美也会消散;富足之人也会以同样方式失去所获得的一切。
12 ௧௨ சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
能忍受磨炼之人是有福的;因为在证明其值得信赖后,他们必会获得生命的王冠,这是主向爱他之人做出的承诺。
13 ௧௩ சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை.
一个人在被试探时不可说“上帝在试探我”;因为上帝无法被恶试探,他也不会试探任何人。
14 ௧௪ அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
这试探来自我们自己的邪恶欲望,它让我们迷失,给我们设下陷阱。
15 ௧௫ பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும்.
这样的欲望会生出罪;罪成长后就成为死亡。
16 ௧௬ என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம்.
我亲爱的朋友们,不要被欺骗。
17 ௧௭ நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.
所有的美好、所有完美的礼物,都是来自上面,并从创造太阳、月亮和星星的父那里下,与他们不同的是,他不会改变,他不会动摇或产生阴影。
18 ௧௮ அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.
他选择通过真理之道给我们新生命,通过这种方式,在他所创造的万物中,我们对他才会如此特别。
19 ௧௯ ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்;
我亲爱的朋友们,请记住,人人都应该快速聆听,但要慢慢地说,慢一点动怒;
20 ௨0 மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
因为人的愤怒无法体现上帝的良善特征。
21 ௨௧ ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
所以要摆脱一切污秽和邪恶,谦卑地接受植入你们心中的道,因为这道能拯救你们。
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.
你们的行为应该遵守道的指示,不要只是听,不要自己欺骗自己;
23 ௨௩ ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்;
如果你只去听道而不践行,就像盯着镜子中自己的脸。
24 ௨௪ அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான்.
你看到了自己,但走开后,马上就忘记自己的样子。
25 ௨௫ ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவன் கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல், அதைச் செய்கிறவனாக இருப்பதினால் அவன் பாக்கியவானாக இருப்பான்.
但如果你仔细研究那让人自由的完美律法,遵守它,不像有些人那样只是听听,然后就忘记了,而是要在行动中遵守它,这样你就会因自己的行为而受到祝福。
26 ௨௬ உங்களில் ஒருவன் தன் நாக்கை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தியுள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
如果你认为自己很虔诚,却不约束自己的语言,就是自己欺骗自己,你的虔诚毫无用处。
27 ௨௭ திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற பாடுகளிலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவதே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக குற்றமில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது.
在我们的天父上帝眼中,纯洁而真诚的虔诚,就像去造访患难中的孤儿寡妇,要保护自己不被世俗所污染。

< யாக்கோபு 1 >