< யாக்கோபு 5 >
1 ௧ செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
Тепер слухайте ви, багатії: плачте і ридайте через нещастя, які насуваються на вас.
2 ௨ உங்களுடைய செல்வம் அழிந்து, உங்களுடைய ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப்போனது.
Ваше багатство зотліло, а ваш одяг поїла міль.
3 ௩ உங்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாக சாட்சியாக இருந்து, அக்கினியைப்போல உங்களுடைய சரீரத்தை உண்ணும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
Ваше золото й срібло поіржавіло, і ця іржа буде свідком проти вас та з’їсть ваші тіла, як вогонь. Ви назбирали [багатства] в останні дні.
4 ௪ இதோ, உங்களுடைய வயல்களை அறுவடைசெய்த வேலைக்காரர்களுடைய கூலியை நீங்கள் அநியாயமாகப் பிடித்து வைத்ததினால் அது கூக்குரலிடுகிறது; அறுவடைசெய்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளைச் சென்றடைந்தது.
Ось кричить затримана вами платня робітників, які жали на ваших полях, і бідкання женців досягли до вух Господа Воїнств.
5 ௫ பூமியிலே நீங்கள் சொகுசாக வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும்நாளில் நடக்கிறதுபோல உங்களுடைய இருதயங்களைப் போஷித்தீர்கள்.
Ви жили в розкоші на землі й шикували, ви наситили ваші серця в день забою.
6 ௬ நீதிமானை நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களிடம் எதிர்த்து நிற்கவில்லை.
Ви засудили та вбили праведника, який вам не противився.
7 ௭ இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான்.
Отже, брати, будьте терплячі до приходу Господа. Ось фермер терпляче чекає цінного плоду землі аж до раннього та пізнього [дощу].
8 ௮ நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது.
Будьте й ви терплячі, зміцнюйте ваші серця, бо прихід Господа вже наближається.
9 ௯ சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாக குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
Брати, не нарікайте одне на одного, щоб не бути засудженими. Ось Суддя стоїть перед дверима.
10 ௧0 என் சகோதரர்களே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும், நீடிய பொறுமைக்கும் உதாரணமாக வைத்துக்கொள்ளுங்கள்.
Брати, майте за приклад страждання та довготерпіння пророків, які промовляли від імені Господа.
11 ௧௧ இதோ, பொறுமையாக இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே.
Ось ми вважаємо блаженними тих, хто вистояв. Ви чули про стійкість Йова й [побачили, ] якою була Господня мета, адже Бог милосердний та щедрий.
12 ௧௨ குறிப்பாக, என் சகோதரர்களே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறு எதன்மீதும் சத்தியம் செய்யாமலிருங்கள்; நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்.
Та передусім, брати мої, не кляніться ні небом, ні землею, ні якоюсь іншою клятвою. Нехай ваше «так» означає «так», а «ні» [означає] «ні», щоб ви не підпали під суд.
13 ௧௩ உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்யவேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடவேண்டும்.
Хтось із вас страждає? Нехай молиться! Хтось радіє? Нехай співає псалми!
14 ௧௪ உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் செய்யவேண்டும்.
Хтось із вас хворіє? Нехай покличе старійшин церкви і нехай вони помоляться за нього, помазавши його олією в ім’я Господа!
15 ௧௫ அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
Молитва віри врятує хворого, і Господь підійме його; а якщо він вчинив гріхи, то простить йому.
16 ௧௬ நீங்கள் குணமடையும்படிக்கு, உங்களுடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கிறது.
Отже, визнавайте гріхи один одному й моліться один за одного, щоб ви були зцілені. Ревна молитва праведника сильна у своїй дії.
17 ௧௭ எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாகயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாக ஜெபம்செய்தான், அப்பொழுது மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை.
Ілля був звичайною людиною, як і ми. Та коли він помолився, щоб не дощило, то не було дощу в тому краю три роки й шість місяців.
18 ௧௮ மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது.
Тоді він помолився знову – і небо дало дощ, а земля принесла свій плід.
19 ௧௯ சகோதரர்களே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திரும்ப வழிநடத்தினால்,
Брати мої, якщо хтось із вас відхиляється від істини, а інший наверне його,
20 ௨0 தவறான வழியிலிருந்து பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து இரட்சித்து, அநேக பாவங்களை மூடுவானென்று அறிந்துகொள்ளட்டும்.
знайте, що той, хто навернув грішника з його оманливої дороги, урятує його душу від смерті й покриє безліч гріхів.