< யாக்கோபு 4 >
1 ௧ உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்களுடைய அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா?
ⲁ̅ϩⲉⲛ ⲛⲉⲃⲟⲗ ⲧⲱⲛ ⲛⲉ ⲙⲡⲟⲗⲏⲙⲟⲥ ⲙⲛ ⲙⲙⲓϣⲉ ⲉⲧⲉⲛϩⲧ ⲧⲏⲩⲧⲛ ⲙⲏ ⲛϩⲉⲛⲛⲉⲃⲟⲗ ⲁⲛ ⲛⲉ ϩⲛ ⲛⲉⲧⲉⲛϩⲩⲇⲟⲛⲏ ⲛⲁⲓ ⲉⲧⲥⲧⲣⲁⲧⲉⲩⲉ ϩⲛ ⲛⲉⲧⲉⲛⲙⲉⲗⲟⲥ
2 ௨ நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாக இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், யுத்தமும் செய்தும், நீங்கள் விண்ணப்பம்செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குக் கிடைப்பதில்லை.
ⲃ̅ⲧⲉⲛⲉⲡⲓⲑⲩⲙⲉⲓ ⲁⲩⲱ ⲙⲛⲧⲏⲧⲛ ⲧⲉⲧⲛϩⲱⲧⲃ ⲧⲉⲧⲛⲕ ⲱϩ ⲙⲛ ϭⲟⲙ ⲙⲙⲱⲧⲛ ⲙⲙⲁⲧⲉ ⲧⲉⲧⲛⲙⲓϣⲉ ⲁⲩⲱ ⲧⲉⲧⲛⲣ ⲡⲟⲗⲏⲙⲟⲥ ⲙⲛⲧⲛ ⲙⲙⲁⲩ ϫⲉ ⲛⲧⲉⲧⲛⲛⲁⲓⲧⲉⲓ ⲁⲛ
3 ௩ நீங்கள் விண்ணப்பம்செய்தும், உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தவறான நோக்கத்தோடு விண்ணப்பம்செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
ⲅ̅ⲧⲉⲧⲛⲛⲁⲓⲧⲉⲓ ⲁⲩⲱ ⲛⲧⲉⲧⲛϫⲓ ⲁⲛ ϫⲉ ⲧⲉⲧⲛⲛⲁⲓⲧⲉⲓ ⲕⲁⲕⲱⲥ ϫⲉⲕⲁⲥ ⲉⲧⲉⲧⲛⲛⲁϫⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲉⲧⲉⲛϩⲩⲇⲟⲛⲏ ⲛⲛⲟⲉⲓⲕ
4 ௪ விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
ⲇ̅ⲛⲧⲉⲧⲛⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ϫⲉ ⲧⲙⲛⲧϣⲃⲏⲣ ⲙⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲟⲩⲙⲛⲧϫⲁϫⲉ ⲧⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲧⲛⲁⲟⲩⲱϣ ϭⲉ ⲉⲣ ϣⲃⲏⲣ ⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ ϥⲛⲁϣⲱⲡⲉ ⲛϫⲁϫⲉ ⲉⲡⲛⲟⲩⲧⲉ
5 ௫ நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
ⲉ̅ⲏ ⲉⲧⲉⲧⲛⲙⲉⲉⲩⲉ ϫⲉ ⲉⲡϫⲓⲛϫⲏ ⲉⲣⲉⲧⲉⲅⲣⲁⲫⲏ ϣⲁϫⲉ ϩⲩⲛ ⲟⲩⲫⲑⲟⲛⲟⲥ ⲉⲥⲟⲩⲉϣ ⲡⲉⲡⲛⲁ ⲛⲧⲁϥⲟⲩⲱϩ ⲉϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲛ
6 ௬ அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
ⲋ̅ⲥϯ ⲇⲉ ⲛⲟⲩⲛⲟϭ ⲛϩⲙⲟⲧ ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲉⲥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ϥϯ ⲟⲩⲃⲉ ⲛⲛⲉϫⲁⲥⲓ ϩⲏⲧ ϥϯ ⲇⲉ ⲛⲛⲟⲩϩⲙⲟⲧ ⲛⲛⲉⲧⲑⲃⲃⲏⲉⲓⲏⲩ
7 ௭ ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
ⲍ̅ⲑⲃⲃⲓⲉ ⲧⲏⲩⲧⲛ ϭⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲧⲉⲧⲛⲁϩⲉ ⲣⲁⲧ ⲧⲏⲩⲧⲛ ⲟⲩⲃⲉ ⲡⲇⲓⲁⲃⲟⲗⲟⲥ ⲁⲩⲱ ϥⲛⲁⲡⲱⲧ ⲥⲁⲃⲟⲗ ⲙⲙⲱⲧⲛ
8 ௮ தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள்.
ⲏ̅ϩⲱⲛ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲧⲁⲣⲉϥϩⲱⲛ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲱⲧⲛ ⲧⲃⲃⲟ ⲛⲛⲉⲧⲉⲛϭⲓϫ ⲛⲣⲉϥⲣ ⲛⲟⲃⲉ ⲛⲧⲉⲧⲱⲛⲧⲃⲃⲟ ⲙⲡⲉⲧⲛϩⲏⲧ ⲛϩⲏⲧ ⲥⲛⲁⲩ
9 ௯ நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும்.
ⲑ̅ⲧⲁⲗⲉⲡⲟⲣⲉⲓ ⲁⲩⲱ ⲛⲧⲉⲧⲛⲣ ϩⲏⲓϥⲉ ⲛⲧⲉⲧⲛⲣⲓⲙⲉ ⲡⲉⲧⲉⲛⲥⲱⲃⲉ ⲙⲁⲣⲉϥⲕⲟⲧϥ ⲉⲩϩⲏⲃⲉ ⲁⲩⲱ ⲡⲉⲧⲉⲛⲣⲁϣⲉ ⲉⲩⲱⲕⲙ
10 ௧0 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
ⲓ̅ⲑⲃⲃⲓⲉ ⲧⲏⲩⲧⲛ ⲙⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙⲡϫⲟⲉⲓⲥ ⲛⲧⲁⲣⲉϥϫⲁⲥ ⲧⲏⲩⲧⲛ
11 ௧௧ சகோதரர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாக இல்லாமல், அதற்கு நியாயாதிபதியாக இருப்பாய்.
ⲓ̅ⲁ̅ⲛⲁⲥⲛⲏⲩ ⲙⲡⲣⲕⲁⲧⲁⲗⲁⲗⲉⲓ ⲛⲛⲉⲧⲉⲛⲉⲣⲏⲩ ⲡⲉⲧⲕⲁⲧⲁⲗⲁⲗⲉⲓ ⲙⲡⲉϥⲥⲟⲛ ⲉⲓ ϥⲕⲣⲓⲛⲉ ⲙⲡⲉϥⲥⲟⲛ ⲉϥⲕⲁⲧⲁⲗⲁⲗⲉⲓ ⲙⲡⲛⲟⲙⲟⲥ ⲁⲩⲱ ⲉϥⲕⲣⲓⲛⲉ ⲙⲡⲛⲟⲙⲟⲥ ⲉϣϫⲉ ⲕⲕⲣⲓⲛⲉ ⲙⲡⲛⲟⲙⲟⲥ ⲁⲩⲱ ⲉⲓⲉ ⲛⲕ ⲟⲩⲣⲉϥⲉⲓⲣⲉ ⲁⲛ ⲙⲡⲛⲟⲙⲟⲥ ⲁⲗⲗⲁ ⲛⲧⲕ ⲟⲩⲕⲣⲓⲧⲏⲥ
12 ௧௨ நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவரும் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
ⲓ̅ⲃ̅ⲟⲩⲁ ⲡⲉ ⲡⲛⲟⲙⲟⲑⲏⲧⲏⲥ ⲁⲩⲱ ⲡⲉⲕⲣⲏⲧⲏⲥ ⲡⲉⲧⲉ ⲟⲩⲛ ϭⲟⲙ ⲙⲙⲟϥ ⲉⲧⲁⲛϩⲟ ⲁⲩⲱ ⲉⲧⲁⲕⲟ ⲛⲧⲟⲕ ⲇⲉ ⲛⲧⲕ ⲛⲓⲙ ⲉⲕⲣⲓⲛⲉ ⲙⲡⲡⲉⲧϩⲓⲧⲟⲩⲱⲕ
13 ௧௩ மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள்.
ⲓ̅ⲅ̅ⲛⲧⲱⲧⲛ ϭⲉ ⲧⲉⲛⲟⲩ ⲛⲉⲧϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲙⲡⲟⲟⲩ ⲏ ⲣⲁⲥⲧⲉ ⲧⲉⲛⲛⲁⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲧⲉⲓⲡⲟⲗⲓⲥ ⲛⲧⲉⲛⲣ ⲟⲩⲣⲟⲙⲡⲉ ⲙⲙⲁⲩ ⲛⲧⲉⲛⲣ ⲉϣⲱⲧ ⲛⲧⲉⲛϯϩⲏⲩ
14 ௧௪ நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே.
ⲓ̅ⲇ̅ⲛⲧⲉⲧⲛⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲛⲁϣⲱⲡⲉ ⲙⲙⲱⲧⲛ ⲛⲣⲁⲥⲧⲉ ⲉⲣⲉⲡⲉⲧⲉⲛⲁϩⲉ ⲅⲁⲣ ⲟ ⲛⲑⲉ ⲛⲟⲩⲉⲗϩⲱⲃ ⲉϥⲟⲩⲟⲛϩ ⲉⲃⲟⲗ ⲡⲣⲟⲥ ⲟⲩⲕⲟⲩⲓ ⲙⲛⲛⲥⲱⲥ ⲇⲉ ⲁϥⲧⲁⲕⲟ
15 ௧௫ ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
ⲓ̅ⲉ̅ⲉⲡⲙⲁ ⲛⲧⲟϥ ⲛⲧⲉⲧⲛϫⲟⲟⲥ ϫⲉ ⲉⲣⲉϣⲁⲛⲡϫⲟⲉⲓⲥ ⲉⲣ ϩⲛⲁϥ ⲛⲧⲉⲛⲱⲛϩ ⲧⲉⲛⲛⲁⲣ ⲡⲁⲓ ⲏ ⲡⲉⲓⲕⲉⲟⲩⲁ
16 ௧௬ இப்பொழுது உங்களுடைய பிடிவாதங்களில் பெருமைகொள்கிறீர்கள்; இப்படிப்பட்ட பெருமையெல்லாம் தீமையாக இருக்கிறது.
ⲓ̅ⲋ̅ⲧⲉⲛⲟⲩ ⲇⲉ ⲧⲉⲧⲛϣⲟⲩϣⲟⲩ ⲙⲙⲱⲧⲛ ϩⲛ ⲛⲉⲧⲉⲛⲙⲛⲧϫⲁⲥⲓϩⲏⲧ ϣⲟⲩϣⲟⲩ ⲛⲓⲙ ⲛⲧⲉⲓⲙⲓⲛⲉ ϩⲟⲟⲩ
17 ௧௭ ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாக இருந்தும், அதைச் செய்யாமல்போனால், அது அவனுக்குப் பாவமாக இருக்கும்.
ⲓ̅ⲍ̅ⲡⲉⲧⲥⲟⲟⲩⲛ ⲇⲉ ⲛⲣ ⲡⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ⲛϥⲉⲓⲣⲉ ⲙⲙⲟϥ ⲁⲛ ⲟⲩⲛⲟⲃⲉ ⲛⲁϥ ⲡⲉ