< ஏசாயா 8 >

1 பின்னும் யெகோவா என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனிதன் எழுதுகிறவிதமாக அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.
וַיֹּאמֶר יְהֹוָה אֵלַי קַח־לְךָ גִּלָּיוֹן גָּדוֹל וּכְתֹב עָלָיו בְּחֶרֶט אֱנוֹשׁ לְמַהֵר שָׁלָל חָשׁ בַּֽז׃
2 அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரர்களாகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் மகனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.
וְאָעִידָה לִּי עֵדִים נֶֽאֱמָנִים אֵת אוּרִיָּה הַכֹּהֵן וְאֶת־זְכַרְיָהוּ בֶּן יְבֶרֶכְיָֽהוּ׃
3 நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள்; அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பெயரை அவனுக்குச் சூட்டு.
וָֽאֶקְרַב אֶל־הַנְּבִיאָה וַתַּהַר וַתֵּלֶד בֵּן וַיֹּאמֶר יְהֹוָה אֵלַי קְרָא שְׁמוֹ מַהֵר שָׁלָל חָשׁ בַּֽז׃
4 இந்தக் குழந்தை, அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.
כִּי בְּטֶרֶם יֵדַע הַנַּעַר קְרֹא אָבִי וְאִמִּי יִשָּׂא ׀ אֶת־חֵיל דַּמֶּשֶׂק וְאֵת שְׁלַל שֹֽׁמְרוֹן לִפְנֵי מֶלֶךְ אַשּֽׁוּר׃
5 பின்னும் யெகோவா என்னை நோக்கி:
וַיֹּסֶף יְהֹוָה דַּבֵּר אֵלַי עוֹד לֵאמֹֽר׃
6 இந்த மக்கள் மெதுவாக ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைசெய்து, ரேத்சீனையும் ரெமலியாவின் மகனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால்,
יַעַן כִּי מָאַס הָעָם הַזֶּה אֵת מֵי הַשִּׁלֹחַ הַהֹלְכִים לְאַט וּמְשׂוֹשׂ אֶת־רְצִין וּבֶן־רְמַלְיָֽהוּ׃
7 இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளச்செய்வார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,
וְלָכֵן הִנֵּה אֲדֹנָי מַעֲלֶה עֲלֵיהֶם אֶת־מֵי הַנָּהָר הָעֲצוּמִים וְהָרַבִּים אֶת־מֶלֶךְ אַשּׁוּר וְאֶת־כׇּל־כְּבוֹדוֹ וְעָלָה עַל־כׇּל־אֲפִיקָיו וְהָלַךְ עַל־כׇּל־גְּדוֹתָֽיו׃
8 யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துவரை வரும் என்றார். இம்மானுவேலே, அவன் இறக்கைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.
וְחָלַף בִּֽיהוּדָה שָׁטַף וְעָבַר עַד־צַוָּאר יַגִּיעַ וְהָיָה מֻטּוֹת כְּנָפָיו מְלֹא רֹחַב־אַרְצְךָ עִמָּנוּ אֵֽל׃
9 மக்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தார்களாகிய நீங்கள் எல்லோரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,
רֹעוּ עַמִּים וָחֹתּוּ וְהַֽאֲזִינוּ כֹּל מֶרְחַקֵּי־אָרֶץ הִתְאַזְּרוּ וָחֹתּוּ הִֽתְאַזְּרוּ וָחֹֽתּוּ׃
10 ௧0 ஆலோசனை செய்யுங்கள், அது பொய்யாகும்; வார்த்தையை சொல்லுங்கள், அது நிற்காது; தேவன் எங்களுடன் இருக்கிறார்.
עֻצוּ עֵצָה וְתֻפָר דַּבְּרוּ דָבָר וְלֹא יָקוּם כִּי עִמָּנוּ אֵֽל׃
11 ௧௧ யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடன் பேசி, நான் இந்த மக்களின் வழியிலே நடக்காமலிருக்க எனக்குச் சொன்ன புத்திமதி என்னவென்றால்:
כִּי כֹה אָמַר יְהֹוָה אֵלַי כְּחֶזְקַת הַיָּד וְיִסְּרֵנִי מִלֶּכֶת בְּדֶרֶךְ הָֽעָם־הַזֶּה לֵאמֹֽר׃
12 ௧௨ இந்த மக்கள் கட்டுப்பாடு என்று சொல்கிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
לֹֽא־תֹאמְרוּן קֶשֶׁר לְכֹל אֲשֶׁר־יֹאמַר הָעָם הַזֶּה קָשֶׁר וְאֶת־מוֹרָאוֹ לֹא־תִֽירְאוּ וְלֹא תַעֲרִֽיצוּ׃
13 ௧௩ சேனைகளின் யெகோவாவையே பரிசுத்தர் என்று எண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.
אֶת־יְהֹוָה צְבָאוֹת אֹתוֹ תַקְדִּישׁוּ וְהוּא מוֹרַאֲכֶם וְהוּא מַעֲרִֽצְכֶֽם׃
14 ௧௪ அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் யூதா, இஸ்ரவேல், இரண்டு கோத்திரத்திற்கும் தடுக்கி விழச்செய்யும் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிமக்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
וְהָיָה לְמִקְדָּשׁ וּלְאֶבֶן נֶגֶף וּלְצוּר מִכְשׁוֹל לִשְׁנֵי בָתֵּי יִשְׂרָאֵל לְפַח וּלְמוֹקֵשׁ לְיוֹשֵׁב יְרוּשָׁלָֽ͏ִם׃
15 ௧௫ அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
וְכָשְׁלוּ בָם רַבִּים וְנָפְלוּ וְנִשְׁבָּרוּ וְנוֹקְשׁוּ וְנִלְכָּֽדוּ׃
16 ௧௬ சாட்சி புத்தகத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.
צוֹר תְּעוּדָה חֲתוֹם תּוֹרָה בְּלִמֻּדָֽי׃
17 ௧௭ நானோ யாக்கோபின் குடும்பத்திற்குத் தமது முகத்தை மறைக்கிறயெகோவாவுக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
וְחִכִּיתִי לַיהֹוָה הַמַּסְתִּיר פָּנָיו מִבֵּית יַעֲקֹב וְקִוֵּיתִי־לֽוֹ׃
18 ௧௮ இதோ, நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் மலையில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
הִנֵּה אָנֹכִי וְהַיְלָדִים אֲשֶׁר נָתַן־לִי יְהֹוָה לְאֹתוֹת וּלְמוֹפְתִים בְּיִשְׂרָאֵל מֵעִם יְהֹוָה צְבָאוֹת הַשֹּׁכֵן בְּהַר צִיּֽוֹן׃
19 ௧௯ அவர்கள் உங்களை நோக்கி: ஜோதிடம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணுவென்று ஓதுகிற குறி சொல்கிறவர்களிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, மக்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
וְכִֽי־יֹאמְרוּ אֲלֵיכֶם דִּרְשׁוּ אֶל־הָֽאֹבוֹת וְאֶל־הַיִּדְּעֹנִים הַֽמְצַפְצְפִים וְהַמַּהְגִּים הֲלוֹא־עַם אֶל־אֱלֹהָיו יִדְרֹשׁ בְּעַד הַחַיִּים אֶל־הַמֵּתִֽים׃
20 ௨0 வேதத்தையும் சாட்சி புத்தகத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமிருக்காது.
לְתוֹרָה וְלִתְעוּדָה אִם־לֹא יֹֽאמְרוּ כַּדָּבָר הַזֶּה אֲשֶׁר אֵֽין־לוֹ שָֽׁחַר׃
21 ௨௧ துன்பம் அடைந்தவர்களாகவும் பட்டினியாகவும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் அவமதிப்பார்கள்.
וְעָבַר בָּהּ נִקְשֶׁה וְרָעֵב וְהָיָה כִֽי־יִרְעַב וְהִתְקַצַּף וְקִלֵּל בְּמַלְכּוֹ וּבֵאלֹהָיו וּפָנָה לְמָֽעְלָה׃
22 ௨௨ அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளாடி அலைவார்கள்.
וְאֶל־אֶרֶץ יַבִּיט וְהִנֵּה צָרָה וַחֲשֵׁכָה מְעוּף צוּקָה וַאֲפֵלָה מְנֻדָּֽח׃

< ஏசாயா 8 >