< ஏசாயா 65 >

1 என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய பெயரை அறியாதிருந்த தேசத்தை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
Потражише ме који не питаху за ме; нађоше ме који ме не тражаху; рекох народу који се не зове мојим именом: Ево ме, ево ме.
2 நலமல்லாத வழியிலே தங்கள் எண்ணங்களின்படி நடக்கிற முரட்டாட்டமான மக்களைநோக்கி நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்.
Вас дан пружах руке своје народу непокорном, који иде за својим мислима путем који није добар,
3 அந்த மக்கள் என் சந்நிதியிலே எப்பொழுதும் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி,
Народу, који ме једнако гневи у очи, који приноси жртве у вртовима и кади на опекама;
4 பிரேதக்குழிகளுக்கு அருகில் உட்கார்ந்து, பாழான இடங்களில் இரவுதங்கி, பன்றியிறைச்சியை சாப்பிட்டு, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் குழம்பை வைத்திருந்து:
Који седе код гробова и ноће у пећинама, једу месо свињско и супа им је нечиста у судовима;
5 நீ அங்கேயே இரு, என் அருகில் வராதே, உன்னைகாட்டிலும் நான் பரிசுத்தன் என்று சொல்கிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற நெருப்புமாயிருப்பார்கள்.
Који говоре: Одлази, не дохватај ме се, јер сам светији од тебе, ти су дим у ноздрвама мојим, дим који гори вас дан.
6 இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் தண்டிப்பேன்.
Ето, написано је преда мном: нећу ћутати, него ћу платити, платићу им у недра.
7 உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்களுடைய முன்னோர்களுடைய அக்கிரமங்களுக்கும் ஏற்றவிதத்தில் அவர்கள் மடியிலே தண்டிப்பேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே போடுவேனென்று யெகோவா சொல்கிறார்.
За безакоња ваша и за безакоња отаца ваших, вели Господ, који кадише на горама, и на хумовима ружише ме, измерићу им у недра плату за дела која чинише од почетка.
8 யெகோவா சொல்கிறது என்னவென்றால்: ஒரு திராட்சைக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்கிறபடி, நான் என் ஊழியக்காரருக்காக அனைத்தையும் அழிக்கவிடாமல் செய்வேன்.
Овако вели Господ: Као кад ко нађе вино у грозду, па рече: Не квари га, јер је благослов у њему, тако ћу учинити ради слуга својих, нећу их потрти све,
9 யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சொந்தமாக்குபவரையும் எழும்பச்செய்வேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் ஊழியக்காரர்கள் அங்கே குடியிருப்பார்கள்.
Јер ћу извести семе из Јакова и из Јуде наследника горама својим, и наследиће их изабраници моји, и слуге моје населиће се онде.
10 ௧0 என்னைத் தேடுகிற என் மக்களுக்கு சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோர் பள்ளத்தாக்கு மாட்டுமந்தைகள் தங்குமிடமாகவும் இருக்கும்.
А Сарон ће бити тор за овце и долина ахорска почивалиште за говеда народу мом који ме тражи.
11 ௧௧ ஆனாலும் யெகோவாவை விட்டு, என் பரிசுத்த மலையை மறந்து, காத் என்னும் தெய்வத்திற்குப் பந்தியை ஆயத்தம்செய்து, மேனி என்னும் தெய்வத்திற்குப் பானபலியை நிறைய ஊற்றுகிறவர்களே,
А ви, који остављате Господа, који заборављате свету гору моју, који постављате сто Гаду и лијете налив Менију,
12 ௧௨ உங்களை நான் பட்டயத்திற்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுமொழி கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.
Вас ћу избројати под мач, и сви ћете припасти на клање, јер звах а ви се не одазивасте, говорих а ви не слушасте, него чинисте шта је зло преда мном и изабрасте шта мени није по вољи.
13 ௧௩ ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்: இதோ, என் ஊழியக்காரர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
Зато овако вели Господ Господ: Гле, слуге ће моје јести, а ви ћете гладовати; гле, слуге ће моје пити, а ви ћете бити жедни; гле, слуге ће се моје веселити, а ви ћете се стидети.
14 ௧௪ இதோ, என் ஊழியக்காரர்கள் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனவியாதியினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.
Гле, слуге ће моје певати од радости у срцу, а ви ћете викати од жалости у срцу и ридаћете од туге у духу.
15 ௧௫ நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் பெயரை சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; யெகோவாவாகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறு பெயரைச் சூட்டுவார்.
И оставићете име своје изабранима мојим за уклин; и Господ ће те Бог убити, а слуге ће своје назвати другим именом.
16 ௧௬ அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே வாக்குக்கொடுக்கிறவன் சத்திய தேவன் பெயரில் வக்குக்கொடுப்பான்; முந்தின துன்பங்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோனது.
Ко се узблагосиља на земљи, благосиљаће се Богом истинитим; а ко се ускуне на земљи, клеће се Богом истинитим; јер ће се прве невоље заборавити и сакривене ће бити од очију мојих.
17 ௧௭ இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
Јер, гле, ја ћу створити нова небеса и нову земљу, и шта је пре било неће се помињати нити ће на ум долазити.
18 ௧௮ நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன்.
Него се радујте и веселите се довека ради оног што ћу ја створити; јер гле, ја ћу створити Јерусалим да буде весеље и народ његов да буде радост.
19 ௧௯ நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் மக்களின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.
И ја ћу се веселити ради Јерусалима, и радоваћу се ради народа свог, и неће се више чути у њему плач ни јаук.
20 ௨0 அங்கே இனி குறைந்த ஆயுள் உள்ள சிறுவனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் இருக்கமாட்டார்கள்; நூறு வயதுசென்று மரணமடைகிறவனும் வாலிபனென்று கருதப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
Неће више бити онде малог детета ни старца који не би навршио дана својих; јер ће дете умирати од сто година, а грешник од сто година биће проклет.
21 ௨௧ வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
И они ће градити куће и седеће у њима; и садиће винограде и јешће род њихов.
22 ௨௨ அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் பழங்களைச் சாப்பிடுகிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் மரத்தின் நாட்களைப்போல என் மக்களின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நீண்டநாட்கள் அனுபவிப்பார்கள்.
Неће они градити а други се населити, неће садити а други јести, јер ће дани народу мом бити као дани дрвету, и изабраницима ће мојим оветшати дела руку њихових.
23 ௨௩ அவர்கள் வீணாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதுமில்லை; அவர்களும், அவர்களுடன்கூட அவர்களுடைய வாரிசும் யெகோவாவாலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
Неће радити узалуд, нити ће рађати за страх, јер ће бити семе благословених од Господа, и натражје ће њихово бити с њима.
24 ௨௪ அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுமொழி கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
И пре него повичу, ја ћу се одазвати; још ће говорити, а ја ћу услишити.
25 ௨௫ ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி பாம்பிற்கு இரையாகும்; என் பரிசுத்த மலையெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடு உண்டாக்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார்.
Вук и јагње заједно ће пасти, и лав ће јести сламу као во; а змији ће бити храна прах; неће удити ни потирати на свој светој гори мојој, вели Господ.

< ஏசாயா 65 >