< ஏசாயா 60 >

1 எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, யெகோவாவுடைய மகிமை உன்மேல் உதித்தது.
Светися, светися Иерусалиме, прииде бо твой свет, и слава Господня на тебе возсия.
2 இதோ, இருள் பூமியையும், காரிருள் மக்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் யெகோவா உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
Се, тма покрыет землю, и мрак на языки, на тебе же явится Господь, и слава Его на тебе узрится.
3 உன் வெளிச்சத்தினிடத்திற்கு தேசங்களும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.
И пойдут царие светом твоим, и языцы светлостию твоею.
4 சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லோரும் ஒன்றாகக்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் மகன்கள் தூரத்திலிருந்து வந்து, உன் மகள்கள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
Возведи окрест очи твои и виждь собраная чада твоя: се, приидоша вси сынове твои издалеча, и дщери твоя на рамех возмутся.
5 அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் பக்கமாகத் திரும்பும், தேசங்களின் பலத்த படை உன்னிடத்திற்கு வரும்.
Тогда узриши и возрадуешися, и убоишися и ужаснешися сердцем, яко преложится к тебе богатство морское и языков и людий:
6 ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான், ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் அனைவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, யெகோவாவின் துதிகளைப் பிரபலப்படுத்துவார்கள்.
и приидут к тебе стада велблюд, и покрыют тя велблюди Мадиамстии и Гефарстии: вси от Савы приидут, носяще злато, и Ливан принесут и камень честен, и спасение Господне благовозвестят:
7 கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கீகரிக்கப்பட்டதாக என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.
и вся овцы Кидарския соберутся тебе, и овни Навеофстии приидут к тебе, и вознесутся приятная на жертвенник Мой, и дом молитвы Моея прославится.
8 மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்கு வேகமாகவருகிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?
Кии суть, иже яко облацы летят, и яко голубие со птенцы ко мне?
9 தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களுடன் அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.
Мене острови ждаша, и корабли Фарсийстии во первых, привести чада твоя издалеча, и сребро и злато их с ними, имене ради Господня Святаго, и за еже Святому Израилеву славну быти.
10 ௧0 அந்நியமக்கள் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு மனமிரங்கினேன்.
И созиждут сынове инороднии стены твоя, и царие их предстояти будут тебе: за гнев бо Мой поразих тя и за милость Мою возлюбих тя.
11 ௧௧ உன்னிடத்திற்கு தேசங்களின் பலத்த படையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.
И отверзутся врата твоя присно, день и нощь не затворятся, ввести к тебе силу язык и цари их ведомыя.
12 ௧௨ உன்னைச் சேவிக்காத தேசமும் ராஜ்யமும் அழியும்; அந்த தேசங்கள் நிச்சயமாகப் பாழாகும்.
Языцы бо и царие, иже не поработают ти, погибнут, и языцы запустением запустеют.
13 ௧௩ என் பரிசுத்த ஸ்தானத்தைச் அலங்கரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு மரங்களும், பாய்மர மரங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதபீடத்தை மகிமைப்படுத்துவேன்.
И слава Ливанова к тебе приидет, кипарисом и певгом и кедром вкупе, прославити место святое Мое, и место ногу Моею прославлю.
14 ௧௪ உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைசெய்த அனைவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் யெகோவாவுடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.
И пойдут к тебе боящеся сынове смиривших тя и раздраживших тя, и поклонятся следам ногу твоею вси прогневавшии тя, и наречешися град Господень, Сион Святаго Израилева.
15 ௧௫ நீ வெறுக்கப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.
За сие, яко был еси оставлен и возненавиден и не бе помагающаго ти, положу тя в радость вечную, веселие родом родов.
16 ௧௬ நீ தேசங்களின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, யெகோவாவாகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன்னை விடுவிப்பவரென்றும் அறிந்துகொள்வாய்.
И изссеши млеко языков и богатство царей снеси, и уразумееши, яко Аз Господь Спасаяй тя и Избавляяй тя Бог Израилев.
17 ௧௭ நான் வெண்கலத்திற்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரச்செய்து, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரர்களை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.
И вместо меди принесу ти злато, и вместо железа принесу ти сребро, и вместо древес принесу ти медь, и вместо камения железо: и вдам князи твоя в мир и надзиратели твоя в правду.
18 ௧௮ இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களைப் பாதுகாப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்வாய்.
И не услышится посем неправда в земли твоей, ни сокрушение ни бедность во пределех твоих, но прозовется спасение забрала твоя и врата твоя хвала.
19 ௧௯ இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாக இராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசிக்காமலும், யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
И не будет тебе ктому солнце во свет дне, ниже восход луны просветит твою нощь, но будет тебе Господь свет вечный и Бог слава твоя.
20 ௨0 உன் சூரியன் இனி மறைவதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; யெகோவாவே உனக்கு நிலையான வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்.
Не зайдет бо солнце тебе, и луна не оскудеет тебе: будет бо Господь тебе свет вечный, и исполнятся дние рыдания твоего.
21 ௨௧ உன் மக்கள் அனைவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும் குடிமக்களும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் செயல்களுமாயிருப்பார்கள்.
И людие твои вси праведнии в век наследят землю, храняще сад дела руку Его в славу.
22 ௨௨ சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த தேசமுமாவான்; யெகோவாவாகிய நான் ஏற்றகாலத்தில் இதை வேகமாக நடப்பிப்பேன்.
Малый будет в тысящы, а малейший во язык велик: Аз Господь по времени соберу их.

< ஏசாயா 60 >