< ஏசாயா 57 >
1 ௧ நீதிமான் இறந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
Người công bình chết, chẳng ai để ý đến; người nhân đức bị cất đi, chẳng ai suy nghĩ rằng người công bình bị cất đi khỏi tai vạ hầu đến.
2 ௨ நேர்மையாக நடந்தவர்கள் சமாதானத்திற்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
Người vào trong sự bình an. Mỗi người đi trong đường ngay thẳng, thì được an nghỉ nơi giường mình.
3 ௩ நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் விபச்சாரிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே நெருங்கிவாருங்கள்.
Nhưng các ngươi, là con trai của bà bóng, dòng dõi của kẻ gian dâm và người đĩ thõa kia, hãy lại gần đây!
4 ௪ நீங்கள் யாரைப் பரியாசம்செய்கிறீர்கள்? யாருக்கு விரோதமாக வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்செய்கிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?
Các ngươi nhạo cười ai? Các ngươi há miệng rộng và le lưỡi nghịch cùng ai? Các ngươi há chẳng phải con cái bội nghịch, dòng dõi nói dối sao?
5 ௫ நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், தெய்வச்சிலைகளுடன் மோக அக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள்.
Các ngươi hành dâm với nhau trong cây dẽ, dưới cây rậm, giết con cái nơi trũng, dưới lỗ nẻ vầng đá!
6 ௬ பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை ஊற்றி, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ?
Những đá bóng láng nơi khe suối, tức là phần riêng ngươi; thật, đó là phần ngươi; nên ngươi làm lễ quán và dâng của lễ chay cho những đá đó! Ta há chẳng giận về những sự đó sao?
7 ௭ நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் படுக்கையை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.
Ngươi đặt giường trên núi rất cao, và lên đó đặng dâng của lễ.
8 ௮ கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் படுக்கையை அகலமாக்கி, அவர்களுடன் உடன்படிக்கைசெய்தாய்; அவர்களுடைய படுக்கையைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்.
Ngươi đặt dấu ghi đằng sau cửa và sau các trụ cửa; vì ngươi đã trần mình cho kẻ khác và leo lên; ngươi đã làm rộng giường mình và lập giao ước với chúng nó. Ngươi lại ngó xem giường chúng nó và ưa thích!
9 ௯ நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol )
Ngươi đã đem dầu và gia thêm hương liệu dân cho vua kia; đã sai sứ giả mình đi phương xa; đã hạ mình xuống đến âm phủ! (Sheol )
10 ௧0 வழிதூரமானதால் சோர்ந்துபோகிறாய்; அது வீணென்று நீ சொல்கிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ பெலவீனமடையவில்லை.
Ngươi đã mệt nhọc vì đường dài; mà chưa từng nói rằng: Aáy là vô ích! Ngươi đã thấy sức lực mình được phấn chấn, cho nên ngươi chẳng mòn mỏi.
11 ௧௧ நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்கிறாயே; நீ என்னை நினைக்காமலும், உன் மனதிலே வைக்காமலும்போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.
Vậy thì ngươi kiêng ai? ngươi sợ ai, nên mới nói dối, nên nới không nhớ đến ta, và không lo đến sự đó? Có phải tại lâu nay ta làm thinh mãi, nên ngươi không kính sợ ta chăng?
12 ௧௨ உன் நீதியையும் உன் செயல்களையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது.
Nầy, chính ta sẽ rao sự công bình ngươi, mọi việc ngươi làm đều là không ích cho ngươi.
13 ௧௩ நீ கூப்பிடும்போது, உன் தெய்வச்சிலைகளின் கூட்டம் உன்னைக் காப்பாற்றட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோகும்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் பரிசுத்த மலையிலே என்னை ஆராதிக்கிறவனாயிருப்பான்.
Khi ngươi sẽ kêu, hết thảy các thần mà ngươi đã nhóm họp hãy giải cứu ngươi! Gió sẽ đùa các thần ấy đi, một cái thở là làm mất hết thảy. Nhưng kẻ nào ẩn náu nơi ta, sẽ hưởng đất nầy, và được hòn núi thánh của ta làm cơ nghiệp.
14 ௧௪ வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, தடைகளை என் மக்களின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.
Người sẽ nói rằng: Hãy đắp đường, hãy đắp đường! hãy ban cho bằng! hãy cất lấy sự ngăn trở khỏi đường dân ta!
15 ௧௫ நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.
Đấng cao cả, ở nơi đời đời vô cùng, danh Ngài là Thánh, có phán như vầy: Ta ngự trong nơi cao và thánh, với người có lòng ăn năn đau đớn và khiêm nhường, đặng làm tươi tỉnh thần linh của những kẻ khiêm nhường, và làm tươi tỉnh lòng người ăn năn đau đớn.
16 ௧௬ நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
Ta chẳng muốn cãi lẽ đời đời, cũng chẳng tức giận mãi mãi; vì thần linh sẽ mòn mỏi trước mặt ta, và các linh hồn mà ta đã dựng nên cũng vậy.
17 ௧௭ நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தின்காரணமாக கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாக நடந்தார்களே.
Aáy là vì tội tham lam của nó mà ta giận, và đánh nó. Trong cơn giận, ta đã ẩn mặt ta với nó; nhưng nó cứ trở lui đi, theo con đường của lòng mình.
18 ௧௮ அவர்களுடைய வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் கொடுப்பேன்.
Ta đã xem thấy đường lối nó, ta sẽ chữa lành cho; sẽ dắt đưa và thưởng cho nó sự yên ủi, cùng cho những kẻ lo buồn với nó.
19 ௧௯ தூரமாயிருக்கிறவர்களுக்கும் அருகில் இருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனை படைக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று யெகோவா சொல்கிறார்.
Đức Giê-hô-va phán rằng: Ta dựng nên trái của môi miếng: bình an, bình an cho kẻ ở xa cùng cho kẻ ở gần; ta sẽ chữa lành kẻ ấy.
20 ௨0 துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமைதலாயிருக்கமுடியாமல், அதின் தண்ணீர் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.
Song những kẻ ác giống như biển đang động, không yên lặng được, thì nước nó chảy ra bùn lầy.
21 ௨௧ துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்கிறார்.
Đức Chúa Trời ta đã phán: Những kẻ gian ác chẳng hưởng sự bình an.