< ஏசாயா 56 >
1 ௧ யெகோவா சொல்கிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.
Так говорить Господь: Бережіть правосу́ддя й чині́ть справедливість, незаба́ром бо при́йде спасі́ння Моє, і поя́виться пра́ведність Моя.
2 ௨ இப்படிச்செய்கிற மனிதனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி அனுசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.
Блаженна люди́на, що робить таке́, і син лю́дський, що міцно трима́ється цього, що хоро́нить субо́ту, щоб її не безче́стити, та береже́ свою ру́ку, щоб жодного зла не вчини́ти!
3 ௩ யெகோவாவைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: யெகோவா என்னைத் தம்முடைய மக்களைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லாதிருப்பானாக.
I нехай не пові́сть чужине́ць, який прилучи́вся до Господа, кажучи: „Наспра́вді мене відділи́в від народу Свого Господь“, і скопе́ць хай не скаже: „Таж я сухе дерево!“
4 ௪ என் ஓய்வு நாட்களை அனுசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் யெகோவா சொல்கிறது என்னவென்றால்:
Бо так каже Господь про скопці́в, що суботи Мої бережу́ть, і вибирають завго́дне Мені, і що трима́ються міцно Мого заповіту:
5 ௫ நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் மகன்களுக்கும் மகள்களுக்கு உரிய இடத்தையும் புகழ்ச்சியையும் விட, உத்தம இடத்தையும் புகழ்ச்சியையும் கொடுப்பேன் என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு கொடுப்பேன்.
Я їм дам у Своїм домі та в му́рах Своїх місце і йме́ння, що краще воно за синів та дочо́к, — Я дам йому вічне ім'я́, яке не пони́щиться!
6 ௬ யெகோவாவைச் சேவிக்கவும், யெகோவாவுடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி அனுசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய தேசத்தார் அனைவரையும்,
А тих чужинці́в, що пристали до Господа, щоб служити Йому та любити Господнє Ім'я́, щоб бути Йому за рабів, усіх, хто хоро́нить суботу, щоб її не збезче́стити, і тих, що тримаються міцно Мого заповіту, —
7 ௭ நான் என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழச்செய்வேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல மக்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
їх спрова́джу на го́ру святую Мою та поті́шу їх в домі молитви Моєї! Цілопа́лення їхні та їхні жертви будуть Мені до вподо́би на Моїм же́ртівнику, бо Мій дім буде на́званий домом молитви для всіх наро́дів!
8 ௮ இஸ்ரவேலில் தள்ளப்பட்டவர்களைச் சேர்க்கிற யெகோவாவாகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார்.
Слово Господа Бога, що збирає вигна́нців Ізраїля: Я ще позбира́ю до нього, до його зі́браних!
9 ௯ வெளியில் வசிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, அழிக்க வாருங்கள்.
Польова́ вся звіри́но, прибудьте спожи́ти, тако́ж лісова́ вся звіри́но!
10 ௧0 அவனுடைய காவற்காரர் எல்லோரும் ஒன்றும் அறியாத குருடர்கள்; அவர்களெல்லோரும் குரைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாகப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்கிறவர்கள், தூக்கப் பிரியர்;
Його вартівники́ всі сліпі́, не знають нічо́го, всі вони пси німі, які га́вкати не можуть, мрі́йники, ле́жні, що люблять дріма́ти!
11 ௧௧ திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.
І це пси ненаже́ри, що не знають наси́чення, і це па́стирі ті, що не вміють уважати: усі вони ходять своєю дорогою, кожен з свого кінця́ до своєї здобичі.
12 ௧௨ வாருங்கள், திராட்சைரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.
„Прийдіть но, гово́рять, візьму́ я вина, та напо́ю п'янко́го нажлу́ктимось, — і буде і цей день, і за́втрішній день дале́ко щедріший!“