< ஏசாயா 50 >
1 ௧ யெகோவா சொல்கிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களின்காரணமாக நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களின்காரணமாக உங்களுடைய தாய் அனுப்பிவிடப்பட்டாள்.
Так говорить Госпо́дь: Де вашої матері лист розводо́вий, з яким Я її відпусти́в? Або хто є з Моїх боргува́льників, якому Я вас був продав? Тож за ваші прови́ни ви про́дані, і за ваші гріхи́ ваша мати відпу́щена.
2 ௨ நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுமொழி கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கமுடியாதபடிக்கு என் கரம் குறுகிவிட்டதோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கடிந்துகொள்ளுதலினாலே கடலை வற்றச்செய்து, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாற்றமெடுக்கின்றது.
Чому́ то нікого немає, коли Я прихо́джу, і не відповіда́є ніхто, коли кли́чу? Чи рука Моя справді короткою стала, щоб викупля́ти, і хіба рятувати нема в Мені сили? Таж докором Своїм Я вису́шую море, обе́ртаю рі́ки в пустиню, їхня риба гниє без води й умирає із пра́гнення!
3 ௩ நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, சணலாடையால் அவைகளின் மூடுதிரையாக்குகிறேன்.
Небеса́ зодягаю Я в те́мряву, і покриття́м їхнім вере́ту чиню́.
4 ௪ இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
Господь Бог Мені дав мову впра́вну, щоб уміти зміцни́ти словом зму́ченого, Він щоранку пробу́джує, збу́джує ву́хо Мені, щоб слухати, мов учні.
5 ௫ யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.
Господь Бог відкрив ву́хо Мені, й Я не став неслухня́ним, назад не відступи́в.
6 ௬ அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
Підставив Я спи́ну Свою тим, хто б'є, а що́ки Свої — щипача́м, обличчя Свого не сховав від га́ньби й плюва́ння.
7 ௭ யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
Але Господь Бог допоможе Мені, тому́ не соромлюся Я, тому Я зробив був обличчя Своє, немов кре́мінь, і знаю, що не буду засти́джений Я.
8 ௮ என்னை நீதிமானாக்குகிறவர் அருகிலிருக்கிறார்; என்னுடன் வழக்காடுகிறவன் யார்? ஏகமாக நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
Близько Той, Хто Мене всправедли́влює, — хто ж стане зо Мною на прю? Станьмо ра́зом, — хто Мій супроти́вник? Хай до Мене піді́йде!
9 ௯ இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லோரும் ஒரு ஆடையைப்போலப் பழையதாகிப் போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
Отож, Господь Бог допоможе Мені, — хто ж отой, що призна́є Мене винува́тим? Вони всі розпаду́ться, немов та одежа, — їх міль пожере́!
10 ௧0 உங்களில் எவன் யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் யெகோவாவுடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்வானாக.
Хто між вами лякається Господа і голос Його Слуги слухає? Хто ходить у те́мряві, світла ж немає йому́, — хай наді́ється він на Господнє Ім'я́, і хай на Бога свого опира́ється!
11 ௧௧ இதோ, நெருப்பைக் கொளுத்தி, நெருப்புப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.
Тож усі, що огонь ви запа́люєте, що огне́нними стрі́лами ви поузбро́ювані, — ходіть у жарі свого огню́ та в стрі́лах огне́нних, які розпали́ли! З Моєї руки оце станеться вам, — і ви бу́дете в муках лежати!