< ஏசாயா 48 >
1 ௧ இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், யெகோவாவுடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.
౧యూదా సంతానమా! యాకోబు వంశమా! ఈ మాట విను. నిన్ను ఇశ్రాయేలు అనే పేరుతో పిలుస్తున్నారు. నువ్వు యెహోవా నామం తోడని ప్రమాణం చేస్తావు. ఇశ్రాయేలు దేవుని పేరు స్మరిస్తావు. అయితే యథార్థంగా నిజాయితీతో అలా చేయవు.
2 ௨ அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் யெகோவா என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாக இருக்கிறார்கள்.
౨మేము పరిశుద్ధ పట్టణవాసులం అనే పేరు పెట్టుకుని, వాళ్ళు ఇశ్రాయేలు దేవుని ఆశ్రయిస్తారు. ఆయన పేరు సేనల ప్రభువైన యెహోవా.
3 ௩ ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை ஆரம்பம்முதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளை உடனடியாகச் செய்தேன், அவைகள் நடந்தன.
౩ఈ విషయాలు ఇలా జరుగుతాయని ఎప్పుడో చెప్పాను. అవి నా నోట్లో నుండే వచ్చాయి. నేనే వాటిని తెలియచేశాను. అకస్మాత్తుగా జరిగేలా వాటిని చేశాను.
4 ௪ நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன்.
౪నువ్వు మూర్ఖుడవనీ నీ మెడ నరాలు ఇనుములాంటివనీ నీ నొసలు కంచులాంటిదనీ నాకు తెలుసు.
5 ௫ ஆகையால்: என் சிலை அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த உருவமும், நான் வார்ப்பித்த சிலையும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்கு முன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.
౫అందుకే ఈ విషయాలు ఎప్పుడో చెప్పాను. అవి జరక్కముందే నేను నీకు చెప్పాను. “నా విగ్రహమే వీటిని చేసింది.” లేకపోతే “నేను చెక్కిన బొమ్మ, లేదా నేను పోతపోసిన బొమ్మ దీన్ని నియమించింది” అని నువ్విక చెప్పలేవు.
6 ௬ அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.
౬నువ్వు ఈ విషయాలు విన్నావు. ఈ వాస్తవమంతా చూడు. నేను చెప్పింది నిజమేనని మీరు ఒప్పుకోరా? ఇక నుంచి కొత్త సంగతులు, నీకు తెలియని గూఢమైన సంగతులు నేను చెబుతాను.
7 ௭ அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை.
౭అవి చాలా కాలం క్రితం కలిగినవి కావు. “అవి ఇప్పుడే కలిగాయి. అవి నాకు తెలిసినవే” అని నువ్వు చెప్పకుండేలా ఇంతకుముందు నువ్వు వాటిని వినలేదు.
8 ௮ நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம் செய்வாய் என்பதையும், தாயின் கர்ப்பத்திலிருந்தே நீ மீறுகிறவனென்று பெயர் பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.
౮నువ్వెన్నడూ వాటిని వినలేదు. నీకు తెలియదు. ముందే ఈ విషయాలు నీకు చెప్పలేదు. పుట్టినప్పటినుంచి నువ్వు తిరుగుబోతుగా ఉన్నావనీ పెద్ద మోసగాడిగా ఉన్నావనీ నాకు తెలుసు.
9 ௯ என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னை அழிக்காதபடி நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாக இருப்பேன்.
౯నా నామం కోసం నేను నిన్ను నిర్మూలం చేయను. నా కోపం చూపించను. నా కీర్తి కోసం మిమ్మల్ని నాశనం చేయకుండా నీ విషయంలో నన్ను నేను తమాయించుకుంటాను.
10 ௧0 இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போல் அல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.
౧౦నేను నిన్ను పుటం వేశాను. అయితే వెండిలా కాదు. బాధల కొలిమిలో నిన్ను పరీక్షించాను.
11 ௧௧ என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.
౧౧నా కోసం, నా కోసమే ఆలా చేస్తాను. ఎందుకంటే నా పేరు అవమానానికి ఎందుకు గురి కావాలి? నా ఘనత మరెవరికీ ఇవ్వను.
12 ௧௨ யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.
౧౨యాకోబూ, నేను పిలిచిన ఇశ్రాయేలూ, నా మాట విను. నేనే ఆయన్ని. నేను మొదటివాణ్ణి, చివరివాణ్ణి.
13 ௧௩ என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
౧౩నా చెయ్యి భూమికి పునాదివేసింది. నా కుడిచెయ్యి ఆకాశాన్ని పరచింది. నేను వాటిని పిలిస్తే అవన్నీ కలిసి నిలుస్తాయి.
14 ௧௪ நீங்களெல்லோரும் கூடிவந்து கேளுங்கள்; யெகோவாவுக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?
౧౪మీరంతా ఒక చోటికి వచ్చి నా మాట వినండి. మీలో ఎవరు ఈ విషయాలు తెలియచేశారు? యెహోవా మిత్రుడు బబులోనుకు విరోధంగా తన ఉద్దేశాన్ని నేరవేరుస్తాడు. అతడు యెహోవా ఇష్టాన్ని కల్దీయులకు విరోధంగా జరిగిస్తాడు.
15 ௧௫ நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரச்செய்தேன்; அவன் வழி வாய்க்கும்.
౧౫ఔను. నేనే ఇలా చెప్పాను. నేనే అతణ్ణి పిలిచాను. నేనే అతణ్ణి రప్పించాను. అతడు చక్కగా చేస్తాడు.
16 ௧௬ நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு இரகசியமாகப் பேசவில்லை; அது உண்டான காலத்திலிருந்தே அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ யெகோவாவாகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
౧౬నా దగ్గరికి రండి. ఈ విషయం వినండి. మొదటినుంచి నేను రహస్యంగా మాట్లాడలేదు. అది జరిగేటప్పుడు నేనక్కడే ఉన్నాను. ఇప్పుడు యెహోవా ప్రభువు తన ఆత్మతో నన్ను పంపాడు.
17 ௧௭ இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான யெகோவா சொல்கிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே.
౧౭నీ విమోచకుడు, ఇశ్రాయేలు పరిశుద్ధ దేవుడు యెహోవా ఇలా చెబుతున్నాడు. “నేను నీ దేవుణ్ణి. యెహోవాను. నువ్వెలా సాధించగలవో నీకు బోధిస్తాను. నువ్వు వెళ్ళాల్సిన దారిలో నిన్ను నడిపిస్తాను.
18 ௧௮ ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி கடலின் அலைகளைப்போலும் இருக்கும்.
౧౮నువ్వు నా ఆజ్ఞలను పాటిస్తే ఎంత బాగుంటుంది! అప్పుడు నీ శాంతి, సౌభాగ్యం నదిలా పారేవి. నీ విడుదల సముద్రపు అలల్లా ఉండేది.
19 ௧௯ அப்பொழுது உன் சந்ததி மணலைப் போலவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் துகள்களைப் போலவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும்.
౧౯నీ సంతానం ఇసుకంత విస్తారంగా నీ గర్భఫలం దాని రేణువుల్లాగా విస్తరించేవారు. వారి పేరు నా దగ్గర నుంచి కొట్టివేయడం జరిగేది కాదు.
20 ௨0 பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; யெகோவா தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாகக் கூறிப் பிரபலப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரவரை வெளிப்படுத்துங்கள் என்கிறார்.
౨౦బబులోను నుంచి బయటికి రండి! కల్దీయుల దేశంలో నుంచి పారిపొండి! యెహోవా తన సేవకుడైన యాకోబును విమోచించాడు” అనే విషయం ఉత్సాహంగా ప్రకటించండి! అందరికీ తెలిసేలా చేయండి! ప్రపంచమంతా చాటించండి!
21 ௨௧ அவர் அவர்களை வனாந்திரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகம் இருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கச்செய்தார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.
౨౧ఎడారుల్లో ఆయన వారిని నడిపించినప్పుడు వారికి దాహం వేయలేదు. వారి కోసం బండలోనుంచి నీళ్లు ఉబికేలా చేశాడు. ఆయన ఆ బండ చీల్చాడు. నీళ్లు పెల్లుబికాయి.
22 ௨௨ துன்மார்க்கர்களுக்குச் சமாதானம் இல்லையென்று யெகோவா சொல்கிறார்.
౨౨“దుష్టులకు నెమ్మది ఉండదు” అని యెహోవా చెబుతున్నాడు.