< ஏசாயா 46 >
1 ௧ பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் சிலைகள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள், இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.
Паде Вил, сокрушися Дагон, быша ваяния их во звери и скоты: носите я связана яко бремя труждающемуся и разслабевшу,
2 ௨ அவைகள் ஏகமாகக் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்.
и алчущу и не могущу вкупе, иже не возмогут спастися от рати, сами же пленени приведошася.
3 ௩ யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்.
Послушайте Мене, доме Иаковль и весь останок Израилев, носимии от чрева и наказуемии от детска даже до старости:
4 ௪ உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுவரை நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
Аз есмь, и дондеже состареетеся, Аз есмь, Аз терплю вам, Аз сотворих и Аз понесу, Аз подиму и спасу вы.
5 ௫ யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படி என்னை ஒப்பிடுவீர்கள்?
Кому Мя уподобисте? Видите, ухитрите, заблуждающии,
6 ௬ பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, கொல்லனுடனே கூலி பொருத்திக்கொள்கிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.
слагающии злато из меха, и сребро весом поставляют в мериле, и наемше златаря сотвориша рукотворенная, и преклоншеся покланяются им:
7 ௭ அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் இடத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்திரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை காப்பாற்றியதுமில்லை.
воздвижут я на рамех и ходят: аще же положат я на месте своем, ту лежат, ниже подвижутся: и иже аще возопиет к ним, не услышат, от бед не спасут его.
8 ௮ இதை நினைத்து ஆண்களாயிருங்கள்; பாதகர்களே, இதை மனதில் வையுங்கள்.
Помяните сия и возстените, покайтеся, прельстившиися, обратитеся сердцем
9 ௯ முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
и помяните первая от века, яко Аз есмь Бог, и несть еще разве Мене:
10 ௧0 முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
возвещаяй первее последняя, прежде неже быти им, и абие сбышася: и рекох: весь совет Мой станет, и вся, елика совещах, сотворю.
11 ௧௧ வேகமாக பறக்கிற ஒரு பறவையைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனிதனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்செய்தேன், அதைச் செய்துமுடிப்பேன்.
Призываяй от восток птицу, и от земли издалеча, о нихже совещах: рекох и приведох, создах и сотворих, приведох и и благопоспеших путь его.
12 ௧௨ கடின இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
Послушайте Мене, погубльшии сердце, сущии далече от правды:
13 ௧௩ என் நீதியைச் சமீபிக்கச்செய்கிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கொடுப்பேன்.
приближих правду Мою, и не удалится, и спасение, еже от Мене, не умедлю: дах в Сионе спасение Израилю во прославление.