< ஏசாயா 45 >
1 ௧ யெகோவாவாகிய நான் அபிஷேகம்செய்த கோரேசுக்கு முன்பாக தேசங்களைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்கிறதாவது:
Näin sanoo Herra voidellullensa Korekselle, jonka oikiaan käteen minä rupeen: minä taivutan pakanat hänen eteensä, ja päästän kuningasten miekat heidän suoliltansa, että ovet avataan hänen eteensä, eikä uksia suljeta.
2 ௨ நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
Minä tahdon käydä sinun edelläs, ja tehdä koliat tasaisiksi; minä tahdon rikkoa vaskiovet, ja särkeä rautateljet;
3 ௩ உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா நானே என்று நீ அறியும்படிக்கு,
Ja annan sinulle salatut tavarat ja kätketyt kalliit kalut, että ymmärtäisit minun olevan Herran Israelin Jumalan, joka sinun nimeltäs kutsun,
4 ௪ வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து, இரகசிய இடங்களில் இருக்கிற பொக்கிஷங்களையும், மறைவிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு பெயர் சூட்டினேன்.
Jakobin minun palveliani tähden, ja Israelin minun valittuni tähden: minä kutsuin sinun nimeltäs, ja nimitin sinun, kuin et sinä minua vielä tuntenut.
5 ௫ நானே யெகோவா, வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
Minä olen Herra, ja ei yksikään muu; paitsi minua ei ole yhtään Jumalaa. Minä varustin sinun, kuin sinä et vielä minua tuntenut,
6 ௬ என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது மறைகிறகிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே யெகோவா, வேறொருவர் இல்லை.
Että sekä idästä ja lännestä ymmärrettäisiin, ettei ilman minua mitään ole. Minä olen Herra, ja ei kenkään muu.
7 ௭ ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; யெகோவாவாகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
Minä joka teen valkeuden ja luon pimeyden, minä joka annan rauhan ja luon pahan; minä olen Herra, joka kaikki nämät teen.
8 ௮ வானங்களே, மேலிருந்து பொழியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழிவதாக; பூமி திறந்து, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.
Te taivaat, tiukkukaat ylhäältä, ja pilvet satakoon vanhurskauden; maa avatkoon itsensä ja kantakoon autuuden, ja vanhurskaus kasvakoon myös. Minä Herra luon sen.
9 ௯ மண்ணால் செய்யப்பட்டவைகளைப்போன்ற ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ, களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லமுடியுமோ? உன்னால் உருவாக்கப்பட்டவை: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?
Voi sitä, joka riitelee Luojansa kanssa, saviastia savenvalajan kanssa. Sanoneeko savi savenvalajalle: mitäs teet? et sinä osoita kättäs sinun teossas.
10 ௧0 தகப்பனை நோக்கி: ஏன் பிறக்கச்செய்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றெடுத்தாய் என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ,
Voi sitä, joka isälle sanoo: miksis minun olet siittänyt? ja vaimolle: miksis minun synnytit?
11 ௧௧ இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்.
Näin sanoo Herra, Israelin Pyhä ja tekiä: anokaat minulta tulevaisia merkkejä, neuvokaat lapseni ja kätteni työ minun tyköni.
12 ௧௨ நான் பூமியை உண்டாக்கி, நானே அதின்மேல் இருக்கிற மனிதனைப் படைத்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.
Minä olen tehnyt maan, ja luonut ihmisen sen päälle; minä olen se, jonka kädet ovat levittäneet taivaan, ja antanut käskyn kaikelle sen joukolle.
13 ௧௩ நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களை விலையில்லாமலும் லஞ்சமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
Minä olen herättänyt hänen vanhurskaudessa, ja minä teen kaikki hänen tiensä tasaiseksi. Hänen pitää rakentaman minun kaupunkini, ja päästämän minun vankini vallallensa, ei rahan eli lahjan tähden, sanoo Hera Zebaot.
14 ௧௪ எகிப்தின் வருமானமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், உயரமான ஆட்களாகிய சபேயரின் வியாபார லாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள் என்று யெகோவா சொல்கிறார்.
Näin sanoo Herra: Egyptilästen saanto ja Etiopialaisten kauppa, ja se suuri Seban kansa pitää itsensä antaman sinun alles, ja oleman sinun omas; heidän pitää noudattaman sinua, jalkapuissa pitää heidän käymän, ja pitää lankeeman maahan sinun etees, ja rukoileman sinua, sillä Jumala on sinun tykönäs, ja ei ole yhtään muuta Jumalaa.
15 ௧௫ இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் உண்மையாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்.
Totisesti sinä olet salattu Jumala, sinä Jumala, Israelin Vapahtaja.
16 ௧௬ சிலைகளை உண்டாக்குகிற அனைவரும் வெட்கப்பட்டு அவமானமடைந்து, ஏகமாகக் கலங்கிப்போவார்கள்.
Mutta epäjumalain tekiät täytyy kaikki häpiässä ja häväistyksessä pysyä, ja yksi toisensa kanssa häväistynä mennä pois.
17 ௧௭ இஸ்ரவேலோ, யெகோவாவாலே நிலையான காப்பாற்றுதலினால் காப்பாற்றப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.
Mutta Israel lunastetaan Herran kautta ijankaikkisella lunastuksella, eikä tule häpiään eli pilkkaan koskaan ijankaikkisesti.
18 ௧௮ வானங்களைப் படைத்து பூமியையும் வெறுமையாக இருக்கும்படிப் படைக்காமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை நிலைநிறுத்தின தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: நானே யெகோவா, வேறொருவர் இல்லை.
Sillä näin sanoo Herra, joka taivaan luonut on, Jumala, joka maan on valmistanut, ja on sen tehnyt ja vahvistanut sen, ja ei niin sitä tehnyt, että se olis tyhjänä ollut, vaan valmisti sen että siinä asuttaisiin: Minä olen Herra, ja ei kenkään muu.
19 ௧௯ நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; வீணாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப் பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற யெகோவா.
En minä ole salaa puhunut, pimiässä paikassa maan päällä, enkä ole Jakobin siemenelle sanonut: etsikäät minua hukkaan; sillä minä olen Herra, joka vanhurskaudesta puhun, ja ilmoitan oikeutta.
20 ௨0 தேசங்களினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாகச் சேருங்கள்; தங்கள் மரத்தாலான சிலையைச் சுமந்து, காப்பாற்றமாட்டாத தெய்வத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள்.
Anna pakanain sankarien kokoontua ja tulla yhteen, jotka ei mitään tiedä, ja kantavat epäjumalansa kannot, ja rukoilevat sitä jumalaa, joka ei auttaa taida.
21 ௨௧ நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாக யோசனைசெய்யுங்கள்; இதை ஆரம்பகாலமுதற்கொண்டு விளங்கச்செய்து, அந்நாள் துவங்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
Ilmoittakaat ja tulkaat tänne, pitäkäät neuvoa keskenänne, kuka näitä alusta kuulutti, ja silloin on sen ilmoittanut? Enkö minä Herra? Ja ei ole ensinkään Jumalaa paitsi minua: hurskas Jumala ja Vapahtaja, ei ole yksikään paitsi minua.
22 ௨௨ பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.
Kääntykäät minun tyköni, niin te autuaaksi tulette, kaikki maailman ääret; sillä minä olen Jumala, ja ei kenkään muu.
23 ௨௩ முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே வாக்குக் கொடுத்திருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.
Minä vannon itse kauttani, ja minun suustani on vanhurskauden sana käyvä ulos, ja sen pitää vahvana pysymän: minulle pitää kaikki polvet kumartaman, ja kaikki kielet vannoman,
24 ௨௪ யெகோவாவிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாக எரிச்சல் கொண்டிருக்கிற அனைவரும் வெட்கப்படுவார்கள்.
Ja sanoman: Herrassa on minulla vanhurskaus ja väkevyys; senkaltaiset tulevat hänen tykönsä, mutta kaikki, jotka seisovat häntä vastaan, ne häpiään tulevat.
25 ௨௫ இஸ்ரவேலின் சந்ததியாகிய அனைவரும் யெகோவாவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.
Sillä Herrassa kaikki Israelin siemen vanhurskautetaan, ja saavat hänestä kerskata.