< ஏசாயா 44 >

1 இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.
Agora, pois, ouve, ó Jacó, meu servo; tu, ó Israel, a quem escolhi.
2 உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.
Assim diz o SENHOR, aquele que te fez, e te formou desde o ventre, que te socorre: não temas, ó Jacó, meu servo; tu Jesurum, a quem escolhi.
3 தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
Porque derramarei água sobre o sedento, e rios sobre a terra seca; derramarei meu Espírito sobre tua semente, e minha bênção sobre teus descendentes;
4 அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள்.
E brotarão entre a erva, como salgueiros junto a ribeiros de águas.
5 ஒருவன், நான் யெகோவாவுடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பெயரை சூட்டிக்கொள்வான்; ஒருவன், தான் யெகோவாவுடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் பெயரைச் சூட்டிக்கொள்வான்.
Um dirá: Eu sou do SENHOR; e outro se chamará pelo nome de Jacó; e um [terceiro] escreverá [em] sua mão: Eu sou do SENHOR, e tomará para si o nome de Israel.
6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்கிறார்.
Assim diz o SENHOR, Rei de Israel, e seu Redentor, o SENHOR dos exércitos: Eu sou o primeiro, e sou o último; e além de mim não há Deus.
7 ஆரம்பகாலத்து மக்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.
Quem, como eu, anunciará isto? Que declare e explique para mim, visto que determinei um povo eterno! Anunciem-lhes as coisas futuras, as que estão para vir!
8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கச்செய்ததும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.
Não vos assombreis, nem temais; por acaso eu não vos contei e anunciei com antecedência? Pois vós sois minhas testemunhas. Por acaso há outro Deus além de mim? Não há outra Rocha, não que eu conheça.
9 விக்கிரகங்களை உருவாக்குகிற அனைவரும் வீணர்கள்; அவர்களால் விரும்பப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும் ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
Todos os que formam imagens de escultura são nada, e as coisas que eles se agradam são de nenhum proveito; e elas mesmas são suas testemunhas: nada veem, nem entendem; por isso serão envergonhados.
10 ௧0 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, சிலையை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
Quem é que forma um deus e funde uma imagem de escultura que não lhe tem proveito algum?
11 ௧௧ இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லோரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லோரும் கூடிவந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாகத் திகைத்து வெட்கப்படுவார்கள்.
Eis que todos os companheiros dele serão envergonhados, pois os artífices nada são além de homens. Ajuntem-se todos, [e] fiquem de pé; eles se assombrarão, e juntamente serão envergonhados.
12 ௧௨ கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடிக்காமல் களைத்துப்போகிறான்.
O ferreiro, [com] a ferramenta de corte, trabalha nas brasas, e forma [o ídolo] com martelos; e ele o faz com a força de seu braço; ele, porém, tem fome e perde as forças, e [se] não beber água, desfalece.
13 ௧௩ தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்திற்குக் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராயத்தினால் அதை வகுத்து, மனித சாயலாக மனிதரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டிவைக்கிறான்.
O carpinteiro estende a linha de medir, [e] o desenha com um marcador; ele o confecciona com formões, e o desenha com um compasso; e o faz à semelhança de um homem, conforme a beleza humana, para habitar numa casa.
14 ௧௪ அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருத மரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோக மரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
Ele corta para si cedros, e toma um cipreste ou um carvalho, e reserva para si das árvores da floresta; ele planta um pinheiro, e a chuva [o] faz crescer.
15 ௧௫ மனிதனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பை மூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டாக்கி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு சிலையையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
Então [tal madeira] servirá ao homem para queimar, e toma parte deles para se aquecer, e os acende, e aquece o pão; ele também faz um deus, e o adora; fabrica dela uma imagem de escultura, e se prostra diante dela.
16 ௧௬ அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்து சாப்பிட்டு, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
Sua metade ele queima no fogo; com a [outra] metade como carne; prepara assado, e [dele] se sacia; também se esquenta, e diz: Ah! Já me aqueci! Já vi o fogo!
17 ௧௭ அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை காப்பாற்றவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
Então do resto ele faz um deus, para imagem de escultura para si; ele se ajoelha a ela, e a adora, e ora a ela, e diz: Livra-me, pois tu és meu deus.
18 ௧௮ அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
Eles nada sabem, nem entendem; porque seus olhos foram encobertos para que não vejam; [e] seus corações, para que não entendam.
19 ௧௯ அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்து சாப்பிட்டேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
E nenhum deles pensa [sobre isso] em seu coração, e não tem conhecimento nem entendimento para dizer: A metade queimei no fogo; e aqueci pão sobre suas brasas; assei carne, e a comi; e faria eu do resto uma abominação? Prostraria eu ao que saiu de uma árvore?
20 ௨0 அவன் சாம்பலை மேய்கிறான்; ஏமாற்றப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே தவறு அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
Ele se alimenta de cinzas; [seu] coração enganado o desviou, de modo que ele já não pode livrar a sua alma, nem dizer: Por acaso não é uma mentira [o que há] na minha mão direita?
21 ௨௧ யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் ஊழியக்காரன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் ஊழியக்காரன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
Lembra-te destas coisas, ó Jacó e Israel, pois tu és meu servo; eu te formei. Meu servo és, ó Israel; eu não me esquecerei de ti.
22 ௨௨ உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
Eu elimino tuas transgressões como a névoa, e teus pecados como a nuvem; volta a mim, pois eu já te resgatei.
23 ௨௩ வானங்களே, களித்துப் பாடுங்கள்; யெகோவா இதைச் செய்தார்; பூமியின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா யாக்கோபைமீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
Cantai louvores, vós céus, porque o SENHOR [assim] fez; gritai de alegria, vós partes baixas da terra; vós montes, fazei ruídos de júbilo, [também] vós bosques, e todas as árvores neles; porque o SENHOR regatou a Jacó, e glorificou a si mesmo em Israel.
24 ௨௪ உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான யெகோவா சொல்கிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற யெகோவா; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
Assim diz o SENHOR, o teu redentor, aquele que te formou desde o ventre: Eu sou o SENHOR que tudo faço; que sozinho estico os céus, e que estendo a terra por mim mesmo;
25 ௨௫ நான் கட்டுக்கதைக்காரரின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, குறிசொல்கிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகச் செய்கிறவர்.
Que desfaço os sinais dos inventores de mentiras, e faço de todos aos adivinhos; que faço aos sábios retrocederem, e torno o conhecimento deles em loucura;
26 ௨௬ நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் பிரதிநிதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான இடங்களை எடுப்பிப்பவர்.
[Sou aquele] que confirma a palavra de seu servo, e cumpre o conselho de seus mensageiros; que diz a Jerusalém: Tu serás habitada; E às cidades de Judá: Sereis reconstruídas; e eu erguerei seus lugares arruinados.
27 ௨௭ நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்கிறவர்.
Que diz à profundeza: Seca-te; e eu secarei teus rios.
28 ௨௮ கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்கிறவர் நான்.
Que diz de Ciro: Ele é meu pastor, e cumprirá toda a minha vontade, dizendo à Jerusalém: Serás edificada; e ao Templo: Terás posto teu fundamento.

< ஏசாயா 44 >