< ஏசாயா 43 >
1 ௧ இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பெயர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
Kodwa khathesi itsho njalo iNkosi eyakudalayo, wena Jakobe, leyakubumbayo, wena Israyeli: Ungesabi, ngoba ngikuhlengile, ngakubiza ngebizo lakho; ungowami.
2 ௨ நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ நெருப்பில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; நெருப்புத்தழல் உன்னை சுட்டெரிக்காது.
Lapho udabula emanzini ngizakuba lawe, lemifuleni, kayiyikukukhukhula; lapho uhamba udabula emlilweni, kawuyikutsha, lelangabi kaliyikukulumathisa.
3 ௩ நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய யெகோவா; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.
Ngoba ngiyiNkosi uNkulunkulu wakho, oNgcwele kaIsrayeli, uMsindisi wakho. Nginikele iGibhithe libe lihlawulo lokuthula lakho, iEthiyophiya leSeba esikhundleni sakho.
4 ௪ நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனிதர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக மக்களையும் கொடுப்பேன்.
Njengoba wawuligugu emehlweni ami, wawudumile, njalo mina ngikuthandile. Ngakho ngizanika abantu esikhundleni sakho, lezizwe endaweni yempilo yakho.
5 ௫ பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரச்செய்து, உன்னை மேற்கிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பேன்.
Ungesabi, ngoba ngilawe; ngizaletha inzalo yakho ivela empumalanga, ngikubuthe uvela entshonalanga;
6 ௬ நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் மகன்களையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் மகள்களையும்,
ngizakutsho kuyo inyakatho: Phana; lakuningizimu: Ungagodli; lethani amadodana ami akhatshana, lamadodakazi ami asemkhawulweni womhlaba,
7 ௭ நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் பெயர் சூட்டப்பட்ட அனைவரையும் கொண்டுவா என்பேன்.
wonke obizwa ngebizo lami; ngoba ngimdalele udumo lwami, ngimbumbile, yebo ngimenzile.
8 ௮ கண்களிருந்தும் குருடர்களாயிருக்கிற மக்களையும், காதுகளிருந்தும் செவிடர்களாயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரச்செய்யுங்கள்.
Khuphani abantu abayiziphofu abalamehlo, lezacuthe ezilendlebe.
9 ௯ சகல தேசங்களும் ஏகமாகச் சேர்ந்துகொண்டு, சகல மக்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு உண்மையென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து நேர்மையானவர்களாக விளங்கட்டும்.
Izizwe zonke kazibuthane ndawonye, labantu bahlangane. Ngubani phakathi kwabo ongamemezela lokhu, asenze sizwe izinto zamandulo? Kabalethe abafakazi babo, ukuze balungisiswe, kumbe bezwe bathi: Kuliqiniso.
10 ௧0 நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் ஊழியக்காரனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்கிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
Lingabafakazi bami, kutsho iNkosi, lenceku yami engiyikhethileyo; ukuze lazi, lingikholwe, liqedisise ukuthi nginguye; ngaphambi kwami kakubunjwanga unkulunkulu, langemva kwami kayikuba khona.
11 ௧௧ நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
Mina, mina ngiyiNkosi; langaphandle kwami kakulamsindisi.
12 ௧௨ நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கச்செய்தேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று யெகோவா சொல்கிறார்.
Ngimemezele, ngasindisa, ngazwakalisa, kungakabikho unkulunkulu wezizwe phakathi kwenu; ngakho lingabafakazi bami, kutsho iNkosi, ukuthi nginguNkulunkulu.
13 ௧௩ நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?
Yebo, kungakabi khona usuku, mina nginguye; njalo kakho ongakhulula esandleni sami; ngizasebenza, njalo ngubani ongakubuyisela emuva?
14 ௧௪ நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர்கள் படகுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா சொல்கிறார்.
Itsho njalo iNkosi, uMhlengi wenu, oNgcwele kaIsrayeli: Ngenxa yenu ngithumele eBhabhiloni, ngehlisele phansi bonke ababalekayo babo, lamaKhaladiya okukhala kwawo kusemikhunjini.
15 ௧௫ நானே உங்கள் பரிசுத்தராகிய யெகோவாவும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.
NgiyiNkosi, oNgcwele wenu, uMdali kaIsrayeli, inkosi yenu.
16 ௧௬ கடலிலே வழியையும் திரளான தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி,
Itsho njalo iNkosi, eyenza indlela olwandle, lomkhondo emanzini alamandla,
17 ௧௭ இரதங்களையும் குதிரைகளையும் படைகளையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படச்செய்து, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்செய்கிற யெகோவா சொல்கிறதாவது:
ekhupha inqola lebhiza, ibutho lamandla; kuzalala ndawonye, kakuyikuvuka; kuzaphela du, kucitshe njengentambo yesibane.
18 ௧௮ முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; முந்தினமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.
Lingakhumbuli izinto zakuqala, linganakani ngezinto zendulo.
19 ௧௯ இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
Khangelani, ngizakwenza into entsha; khathesi izahluma, kaliyikuyazi yini? Yebo, ngizakwenza indlela enkangala, imifula ogwaduleni.
20 ௨0 நான் தெரிந்துகொண்ட என் மக்களின் தாகத்திற்கு வனாந்திரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், ஆந்தைக் குஞ்சுகளும் என்னைக் கனப்படுத்தும்.
Inyamazana zeganga zizangidumisa, imigobho lamadodakazi ezintshe; ngoba nginika amanzi enkangala, imifula ogwaduleni, ukunathisa abantu bami, abakhethiweyo bami.
21 ௨௧ இந்த மக்களை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
Lababantu ngizibumbele bona; bazalandisa udumo lwami.
22 ௨௨ ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனம்சலித்துப்போனாய்.
Kanti kawungibizanga, Jakobe, kodwa udiniwe ngami, Israyeli.
23 ௨௩ உன் ஆடுகளைத் தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனப்படுத்தவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன்.
Kawulethanga kimi izimvu zomnikelo wakho wokutshiswa, kawungihloniphanga ngemihlatshelo yakho. Kangikwenzanga wakhonza ngomnikelo, kangikudinisanga ngempepha.
24 ௨௪ நீ எனக்குப் பணங்களால் சுகந்தப்பட்டையைக் கொள்ளாமலும், உன் பலிகளின் கொழுப்பினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்.
Kawungithengelanga umhlanga olephunga elimnandi ngemali, njalo kawungisuthisanga ngamahwahwa emihlatshelo yakho; kodwa ungenze ngasebenza ngezono zakho, wangidinisa ngeziphambeko zakho.
25 ௨௫ நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினைக்காமலும் இருப்பேன்.
Mina, mina nginguye owesula iziphambeko zakho ngenxa yami, kangiyikuzikhumbula izono zakho.
26 ௨௬ நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.
Ngikhumbuza; kasehlulelane; landisa wena, ukuze ulungisiswe.
27 ௨௭ உன் ஆதிதகப்பன் பாவம்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்தார்கள்.
Uyihlo wokuqala wona, labachasisi bakho baphambukile bemelene lami.
28 ௨௮ ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்திற்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
Ngakho ngingcolise iziphathamandla zendlu engcwele, nganikela uJakobe ekutshabalalisweni, loIsrayeli ekuthukweni.