< ஏசாயா 36 >
1 ௧ எசேக்கியா ராஜா அரசாண்ட பதினான்காம் வருடத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.
౧హిజ్కియా రాజు పరిపాలన 14 వ సంవత్సరంలో అష్షూరురాజు సన్హెరీబు యూదా దేశంలో సరిహద్దు గోడలు ఉన్న పట్టణాలన్నిటిపై దండెత్తి వాటిని ఆక్రమించాడు.
2 ௨ அப்பொழுது அசீரியா ராஜா லாகீசிலிருந்து ரப்சாக்கே சேனாதிபதியைப் பெரிய படையுடன் எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் வாய்க்கால் அருகிலே நின்றான்.
౨తరువాత అతడు రబ్షాకేను లాకీషు పట్టణం నుండి యెరూషలేములో ఉన్న హిజ్కియా రాజు పైకి పెద్ద సైన్యాన్ని ఇచ్చి పంపాడు. అతడు చాకిరేవు దారిలో ఉన్న మెరక కొలను కాలవ దగ్గరికి వచ్చాడు.
3 ௩ அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
౩అప్పుడు హిల్కీయా కొడుకు, రాజు గృహనిర్వాహకుడు ఎల్యాకీము, శాస్త్రి షెబ్నా, రాజ్యం దస్తావేజుల అధికారి, ఆసాపు కొడుకు యోవాహు వారి దగ్గరికి వెళ్ళారు.
4 ௪ ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
౪అప్పుడు రబ్షాకే వారితో ఇలా అన్నాడు. “హిజ్కియాతో ఈ మాట చెప్పండి, మహారాజైన అష్షూరురాజు నన్నిలా చెప్పమన్నాడు, దేనిపైన నువ్వు నమ్మకం పెట్టుకున్నావు?
5 ௫ போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்கிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
౫యుద్ధం విషయంలో నీ ఆలోచన, నీ బలం వ్యర్ధం. ఎవరి భరోసాతో నా మీద తిరగబడుతున్నావు?
6 ௬ இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில்பட்டு உருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற அனைவருக்கும் அப்படியே இருப்பான்.
౬నలిగిపోయిన గడ్డిపరక లాంటి ఐగుప్తుపై ఆధారపడుతున్నావు గదా! ఎవరైనా దాని మీద ఆనుకుంటే అది అతని చేతికి గుచ్చుకుంటుంది. ఐగుప్తు రాజు ఫరో కూడా అలాంటివాడే.
7 ௭ நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
౭మా దేవుడైన యెహోవాను నమ్ముకుంటున్నాం అని అంటారా? ఆ యెహోవా ఉన్నత స్థలాలను, బలిపీఠాలనే కదా హిజ్కియా పడగొట్టి యెరూషలేములో ఉన్న ఈ బలిపీఠం దగ్గర మాత్రమే మీరు పూజలు చేయాలి అని యూదావారికి, యెరూషలేము వారికి ఆజ్ఞ ఇచ్చింది?
8 ௮ நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனுடன் சபதம்செய்.
౮కాబట్టి నా యజమాని అయిన అష్షూరు రాజుతో పందెం వెయ్యి. రెండు వేల గుర్రాలకు సరిపడిన రౌతులు నీ దగ్గర ఉంటే చెప్పు, నేను వాటిని నీకిస్తాను.
9 ௯ செய்யாமல்போனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனுடைய முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?
౯నా యజమాని సేవకుల్లో తక్కువ వాడైన ఒక్క అధిపతిని నువ్వు ఎదిరించగలవా? రథాలను, రౌతులను పంపుతాడని ఐగుప్తురాజు మీద ఆశ పెట్టుకున్నావా?
10 ௧0 இப்பொழுதும் யெகோவாவுடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னுடன் சொன்னாரே என்று சொன்னான்.
౧౦అయినా యెహోవా అనుమతి లేకుండానే ఈ దేశాన్ని నాశనం చేయడానికి నేను వచ్చాననుకున్నావా? లేదు, ఈ దేశం పైకి దండెత్తి దీన్ని నాశనం చేయమని యెహోవాయే నాకు ఆజ్ఞాపించాడు.”
11 ௧௧ அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாக்கும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியமொழியிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; மதிலிலிருக்கிற மக்களின் காதுகள் கேட்க எங்களுடன் யூதமொழியிலே பேசவேண்டாம் என்றார்கள்.
౧౧అప్పుడు ఎల్యాకీము, షెబ్నా, యోవాహులు రబ్షాకేతో “మేము నీ దాసులం. మాకు సిరియా భాష తెలుసు కాబట్టి దయచేసి ఆ భాషలో మాట్లాడు. ప్రాకారం మీద ఉన్న ప్రజలకు అర్థమయ్యేలా యూదుల భాషలో మాట్లాడవద్దు” అని అన్నారు.
12 ௧௨ அதற்கு சேனாதிபதி: உங்களோடுகூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், மதிலிலே தங்கியிருக்கிற ஆண்களிடத்திற்கே அல்லாமல், உன் எஜமானிடத்திற்கும், உன்னிடத்திற்குமா, என் எஜமான் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி;
౧౨అయితే రబ్షాకే “ఈ మాటలు చెప్పడానికేనా, నా యజమాని నన్ను నీ యజమాని దగ్గరకీ నీ దగ్గరకీ పంపింది? నీతో కలిసి తమ స్వంత మలాన్ని తిని, తమ మూత్రాన్ని తాగబోతున్న ప్రాకారం మీద ఉన్న వారి దగ్గరకి కూడా పంపాడు కదా” అన్నాడు.
13 ௧௩ ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதமொழியிலே உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.
౧౩యూదుల భాషతో అతడు బిగ్గరగా ఇలా అన్నాడు. “మహారాజైన అష్షూరు రాజు చెబుతున్న మాటలు వినండి.
14 ௧௪ எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான்.
౧౪హిజ్కియా చేతిలో మోసపోకండి. మిమ్మల్ని విడిపించడానికి అతని శక్తి సరిపోదు.
15 ௧௫ யெகோவா நம்மை நிச்சயமாகத் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் யெகோவாவை நம்பச்செய்வான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்கிறார்.
౧౫‘యెహోవా మనలను విడిపిస్తాడు, ఈ పట్టణం అష్షూరు రాజు చేతిలో చిక్కదు’ అని చెబుతూ హిజ్కియా మిమ్మల్ని నమ్మిస్తున్నాడు.
16 ௧௬ எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள். அசீரியா ராஜா சொல்கிறதாவது: நீங்கள் என்னுடன் சமாதானமாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்.
౧౬హిజ్కియా చెప్పిన ఆ మాట మీరు అంగీకరించవద్దు. అష్షూరు రాజు చెబుతున్నదేమిటంటే, మీరు బయటికి వచ్చి, నాతో సంధి చేసుకోండి. అప్పుడు మీలో ప్రతి ఒక్కరూ తన ద్రాక్ష, అంజూరు చెట్ల పండ్లు తింటూ తన బావిలో నీళ్లు తాగుతూ ఉంటారు.
17 ௧௭ நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சைத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சைரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்திற்கு ஒப்பான தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போகும்வரைக்கும், அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் பழத்தையும், தன்தன் அத்திமரத்தின் பழத்தையும் சாப்பிட்டு, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்.
౧౭ఆ తరవాత నేను వచ్చి మీ దేశంలాంటి దేశానికి, అంటే గోదుమలు, ద్రాక్షరసం దొరికే దేశానికి, ఆహారం, ద్రాక్షచెట్లు ఉన్న దేశానికి మిమ్మల్ని తీసుకుపోతాను. యెహోవా మిమ్మల్ని విడిపిస్తాడని చెప్పి హిజ్కియా మిమ్మల్ని మోసం చేస్తున్నాడు.
18 ௧௮ யெகோவா நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களுக்குப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; தேசங்களுடைய தெய்வங்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
౧౮వివిధ ప్రజల దేవుళ్ళలో ఎవరైనా తన దేశాన్ని అష్షూరు రాజు చేతిలో నుండి విడిపించాడా? హమాతు దేవుళ్ళేమయ్యారు?
19 ௧௯ ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தெய்வங்கள் எங்கே? செப்பர்வாயிமின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
౧౯అర్పాదు దేవుళ్ళేమయ్యారు? సెపర్వయీము దేవుళ్ళేమయ్యారు? షోమ్రోను దేశపు దేవుడు నా చేతిలో నుండి షోమ్రోనును విడిపించాడా?
20 ௨0 யெகோவா எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்தத் தேசங்களுடைய எல்லா தெய்வங்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்கிறார் என்றான்.
౨౦ఈ దేవుళ్ళలో ఎవరైనా తన దేశాన్ని నా చేతిలో నుండి విడిపించి ఉంటేనే కదా యెహోవా యెరూషలేమును విడిపిస్తాడు అనుకోడానికి?” అన్నాడు.
21 ௨௧ அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுமொழி சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
౨౧అయితే అతనికి జవాబు చెప్పవద్దని రాజు ఆజ్ఞాపించడం వలన వారు బదులు పలకలేదు.
22 ௨௨ அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்கனும், ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.
౨౨రాజ గృహనిర్వాహకుడు, హిల్కీయా కొడుకు అయిన ఎల్యాకీము, శాస్త్రి షెబ్నా, రాజ్యందస్తావేజుల మీద అధికారి, ఆసాపు కొడుకు యోవాహు తమ బట్టలు చింపుకుని హిజ్కియా దగ్గరికి వచ్చి రబ్షాకే పలికిన మాటలన్నిటినీ తెలియజేశారు.