< ஏசாயா 35 >
1 ௧ வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, பாலைவனம் மகிழ்ந்து, மலரைப்போல செழிக்கும்.
Örvendenek majd puszta és sivatag, és ujjong a vadon és virul mint a nárcisz.
2 ௨ அது மிகுதியாகச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்குக் கொடுக்கப்படும்; அவர்கள் யெகோவாவுடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
Virulva virul és ujjong, bizony ujjongva és vigadva: a Libanon dicsősége adatott neki, a Karmel és Sárón dísze; ők látni fogják az Örökkévaló dicsőségét, Istenünk díszét.
3 ௩ தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
Erősítsetek lankadt kezeket és ingó térdeket szilárdítsatok meg.
4 ௪ மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள்.
Mondjátok a hamarkodó szívűeknek: erősödjetek, ne féljetek; itt az Istenetek, bosszú jő. Isten viszonzása, ő jön és megsegít benneteket.
5 ௫ அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும்.
Akkor megnyílnak a vakok szemei és a süketek fülei fölnyittatnak.
6 ௬ அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்திரத்திலே தண்ணீர்களும், பாலைவனத்திலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
Akkor ugrándozik mint az őz a sánta és ujjong a némának nyelve; mert vizek fakadnak a pusztában és patakok a vadonban.
7 ௭ வெட்டாந்தரை தண்ணீர் குளமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் இருந்த இடங்களிலே புல்லும் கோரையும் நாணலும் உண்டாகும்.
És a délibáb tóvá lesz és a szomjas föld vízforrásokká; a sakálok lakásában, heverőhelyükön tanyája van a nádnak és sásnak.
8 ௮ அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
És lesz ott ösvény meg út, szent útnak nevezik majd azt, nem járja tisztátalan, hanem az övék lesz; aki ezúton jár, még oktalanok sem tévednek el.
9 ௯ அங்கே சிங்கம் இருப்பதில்லை; கொடியமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
Nem lesz ott oroszlán, vad ragadozó nem megy rajta, nem találtatik ott; hanem járnak a megszabadultak.
10 ௧0 யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.
És az Örökkévaló megváltottjai visszatérnek és jönnek Cziónba ujjongással, örökös öröm a fejükön, vígságot és örömet érnek és elfut bú és sóhaj.