< ஏசாயா 28 >
1 ௧ எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்திற்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் பூவே!
Tragedy is coming to the city of Samaria, the crowning glory of Ephraim's drunks, to the fading flower of wonderful beauty, sitting above a fertile valley, and beloved by those hammered by wine.
2 ௨ இதோ, திறமையும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புயல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
Watch out, for the Lord has someone who is strong and powerful! He is going to smash it to the ground like a hailstorm and a tornado, like a torrential rain and an overwhelming flood.
3 ௩ எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும்.
That crowning glory of Ephraim's drunks will be trampled underfoot.
4 ௪ செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய பூ, பருவகாலத்திற்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.
That fading flower of wonderful beauty, sitting above a fertile valley, will be like figs ripe before the summer harvest—as soon as people discover them, they grab and eat them.
5 ௫ அக்காலத்திலே சேனைகளின் யெகோவா தமது மக்களில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,
At that time the Lord Almighty will be a beautiful, glorious crown that brings pride to those of his people who are left.
6 ௬ நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், போரை அதின் வாசல்வரை திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.
He will be an inspiration to the judges to do what's right, and he will encourage those who fight off the attacks on the gate.
7 ௭ ஆனாலும் இவர்களும் திராட்சைரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிவிலகிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சைரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிவிலகி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்.
But these people also drink so much wine and beer that they sway from side to side and stumble over. Even priests and prophets stagger along, their minds muddled by beer and wine. Because of the drink they are confused about visions and make mistakes when they give decisions.
8 ௮ உணவு உண்ணும் இடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
All their tables are full of vomit—filth is everywhere.
9 ௯ அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கச்செய்யப்பட்டவர்களுக்குமே.
“Just who is he trying to teach knowledge to?” they ask. “Who is he explaining his message to? To children just weaned from milk, to babies just removed from the breast?
10 ௧0 கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.
He tells us this blah and that blah, blah upon blah, and again blah and blah, and even more blah and blah! It's a bit here and a bit there.”
11 ௧௧ பரியாச உதடுகளினாலும் அந்நிய மொழியினாலும் இந்த மக்களுடன் பேசுவார்.
Fine—so now the Lord will talk to this people in foreign languages that sound strange to them!
12 ௧௨ இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறச்செய்யும் இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களிடம் அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
He had told them, “You can rest here. Let those who are tired rest. This is the place where you can safely relax.” But they refused to listen.
13 ௧௩ ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், யெகோவாவுடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
Therefore the Lord's message to them will become, “This blah and that blah, blah upon blah, and again blah and blah, and even more blah and blah, a bit here and a bit there,” so that they'll fall over backwards, and they'll be wounded, trapped, and captured.
14 ௧௪ ஆகையால் எருசலேமிலுள்ள இந்தமக்களை ஆளுகிற நிந்தனைக்காரரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
So pay attention to the Lord's message, you scornful rulers who lead these people in Jerusalem.
15 ௧௫ நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol )
You claim, “We've made an agreement with death; we've got a contract with the grave. When the terrible disaster rushes by, it won't affect us, because our lies protect us and we hide in our own deceptions.” (Sheol )
16 ௧௬ ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது சோதனை செய்யப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறமாட்டான்.
Consequently, listen to what the Lord God says, Look! I'm laying a foundation stone in Jerusalem, a strong, well-tested stone. It's a valuable cornerstone that provides a firm foundation. Anyone who trusts in it won't be shaken loose.
17 ௧௭ நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை பெருவெள்ளம் அடித்துக்கொண்டுபோகும்.
I will make justice as straight as a measuring line, and doing what's right the standard rule. Hail will destroy the protection of your lies, and water will flood the place where you're hiding.
18 ௧௮ நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol )
Your agreement with death will be canceled; your contract with the grave will be revoked. When the terrible disaster rushes by, it will trample you underfoot. (Sheol )
19 ௧௯ அது புரண்டுவந்த உடனே உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது அனுதினமும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிச் சொல்லப்படும் செய்தியைக் கேட்கும்போதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.
It will rush by time after time, dragging you away morning upon morning, day and night, rushing on and on. Once you understand this message you will be absolutely terrified.
20 ௨0 கால் நீட்டப் படுக்கையின் நீளம்போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.
The bed is too short so you can't stretch out; the blanket is too narrow so you can't cover yourself.
21 ௨௧ யெகோவா தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
The Lord will come on the attack like he did to the Philistines at Mount Perazim, like he shook them in the Valley of Gibeon, coming to do what he has to do, his strange work; coming to act as he must, his unusual action.
22 ௨௨ இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம் செய்யாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் தீர்மானிக்கப்பட்ட அழிவின் செய்தியைச் சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
So don't mock, or your imprisonment will be even worse, for the Lord, the Lord Almighty, has explained to me his decision to destroy the whole country.
23 ௨௩ செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
Listen to what I'm saying! Listen and pay attention! Hear what I have to say!
24 ௨௪ உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?
Does the farmer spend all his time ploughing? Does he spend all his time preparing the soil?
25 ௨௫ அவன் அதை மேலாக பரப்பினபின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?
Once he has everything ready doesn't he sow seeds like dill and cumin, doesn't he plant wheat and barley in rows, with spelt grain as a border?
26 ௨௬ அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துவிக்கிறார்.
His God gives him instructions and teaches him the right thing to do.
27 ௨௭ உளுந்து இரும்புக்கோலாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டியின் உருளை சுற்றவிடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.
You don't use a heavy tool to thresh dill! You don't use the wheel of a cart to thresh cumin! Instead you use a stick to beat out the dill, and a rod to beat out the cumin.
28 ௨௮ அப்பத்திற்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டியின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.
Grain used for bread is easily damaged so you don't thresh it forever. When you drive your cart wheels over it with your horses, you don't crush it.
29 ௨௯ இதுவும் சேனைகளின் யெகோவாவாலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.
This is also from the Lord Almighty who is very wise and gives great advice.