< ஏசாயா 24 >
1 ௧ இதோ, யெகோவா தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிமக்களைச் சிதறடிப்பார்.
Ímé az Úr megüresíti a földet és elpusztítja azt, és elfordítja színét és elszéleszti lakóit!
2 ௨ அப்பொழுது, மக்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லோருக்கும் சரியாக நடக்கும்.
S olyan lesz a nép, mint a pap; a szolga, mint az ő ura; a szolgáló, mint asszonya; a vevő, mint az eladó; a kölcsönadó, mint a kölcsönkérő; a hitelező, mint az, a kinek hitelez;
3 ௩ தேசம் முழுவதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது யெகோவா சொன்ன வார்த்தை.
Megüresíttetvén megüresíttetik a föld, és elpusztíttatván elpusztíttatik; mert az Úr szólá e beszédet.
4 ௪ தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து மக்களிலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.
Gyászol és megromol a föld, elhervad és megromol a földnek kereksége, elhervadnak a föld népének nagyjai.
5 ௫ தேசம் தன் குடிமக்களின் மூலமாக தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்.
A föld megfertőztetett lakosai alatt, mert áthágták a törvényeket, a rendelést megszegték, megtörték az örök szövetséget.
6 ௬ இதினிமித்தம் சாபம் தேசத்தை அழித்தது, அதின் குடிமக்கள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் சுட்டெரிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.
Ezért átok emészti meg a földet, és lakolnak a rajta lakók; ezért megégnek a földnek lakói, és kevés ember marad meg.
7 ௭ திராட்சைரசம் துக்கங்கொண்டாடும், திராட்சைச்செடி வதங்கும்; மனமகிழ்ச்சியாயிருந்தவர்கள் எல்லோரும் பெருமூச்சுவிடுவார்கள்.
Gyászol a must, elhervad a szőlő, és sóhajtnak minden vidám szívűek.
8 ௮ மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் நடமாட்டம் ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோகும்.
Megszünt a dobok vidámsága, elcsöndesült az örvendők zajgása, a cziterának vídámsága megszünt.
9 ௯ பாடலோடே திராட்சைரசம் குடிக்கமாட்டார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும்.
Énekléssel nem isznak bort; keserű a részegítő ital az ívónak;
10 ௧0 வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே நுழையமுடியாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும்.
Rommá lőn az álnokság városa, bezároltatott minden ház, senki be nem mehet!
11 ௧௧ திராட்சைரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; அனைத்து சந்தோஷமும் குறைந்து, தேசத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போகும்.
Az utczákon panaszkodás hallik a bor miatt; minden öröm alkonyra szállt, a föld vígassága elköltözött.
12 ௧௨ நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும்.
A városban csak pusztaság maradt és rommá zúzatott a kapu.
13 ௧௩ ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சைப்பழங்களை அறுத்துத் முடியும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்திற்குள்ளும் இந்த மக்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும்.
Mert így lesz a föld közepette, a népek között, mint az olajfa megrázásakor, mint mezgérléskor, midőn a szüret elmult.
14 ௧௪ அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; யெகோவாவுடைய மகத்துவத்திற்காக சமுத்திரத்திலிருந்து ஆர்ப்பரிப்பார்கள்.
Ők felemelik szavokat, ujjongnak, az Úr nagyságáért rivalgnak a tenger felől.
15 ௧௫ ஆகையால் யெகோவாவை, சூரியன் உதிக்கும் திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள்.
Ezért dícsérjétek az Urat keleten, a tenger szigetein az Úrnak, Izráel Istenének nevét.
16 ௧௬ நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ, துரோகிகள் துரோகம் செய்கிறார்கள்; துரோகிகள் மிகுதியாகத் துரோகம்செய்கிறார்கள் என்கிறேன்.
A föld széléről énekeket hallánk: dicsőség az igaznak! S én mondék: végem van, végem van, jaj nékem! A hitetlenek hitetlenül cselekesznek és hitetlenséggel a hitetlenek hitetlenséget cselekesznek.
17 ௧௭ தேசத்து மக்களே, பயமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.
Rettegés, verem és tőr vár rád földnek lakója!
18 ௧௮ அப்பொழுது பயத்தின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.
És lesz, hogy a ki fut a rettegésnek szavától, verembe esik, és a ki kijő a veremből, megfogatik a tőrben, mert az egek csatornái megnyílnak, és megrendülnek a föld oszlopai.
19 ௧௯ தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.
Romlással megromol a föld, töréssel összetörik a föld, rengéssel megrendül a föld;
20 ௨0 வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிசையைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருப்பதினால், அது விழுந்துபோகும், இனி எழுந்திருக்காது.
Inogva meging a föld, miként a részeg, és meglódul, mint a kaliba, és reá nehezedik bűne és elesik; és nem kél fel többé!
21 ௨௧ அக்காலத்தில் யெகோவா உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.
És lesz ama napon: meglátogatja az Úr a magasság seregét a magasságban, és a föld királyait a földön:
22 ௨௨ அவர்கள் கெபியில் ஏகமாகக் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாட்கள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.
És összegyűjtve összegyűjtetnek gödörbe, mint a foglyok, és bezáratnak tömlöczbe, és sok napok után meglátogattatnak.
23 ௨௩ அப்பொழுது சேனைகளின் யெகோவா சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் வெட்கப்படும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக தம்முடைய மகிமை வெளிப்படுத்துவார்.
És elpirul a hold, és megszégyenül a nap, mikor a seregek Ura uralkodik Sion hegyén és Jeruzsálemben: s vénei előtt dicsőség lészen.