< ஏசாயா 23 >
1 ௧ தீருவைக்குறித்த செய்தி. தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
Nkɔmhyɛ a ɛfa Tiro ho: Tarsis ahyɛn, muntwa adwo! Efisɛ wɔasɛe Tiro na wɔannyaw no ofi anaa hyɛngyinabea. Wufi Kipro asase so abɛka asɛm akyerɛ wɔn.
2 ௨ தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வியாபாரிகள் கடலிலே பயணம்செய்து உன்னை நிரப்பினார்கள்.
Monyɛ komm, mo nnipa a mowɔ supɔw no so ne mo Sidon aguadifo a po so adwumayɛfo ama mo ayɛ adefo.
3 ௩ சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது தேசங்களின் சந்தையாயிருந்தது.
Nsu akɛse no so na aduan fi Sihor nam bae; Nil ho nnɔbae na ɛyɛɛ Tiro foto, na ɔbɛyɛɛ amanaman aguadibea.
4 ௪ சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெற்றெடுப்பதும் இல்லை; இளைஞர்களை வளர்க்கிறதும் இல்லை; கன்னிப்பெண்களை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்கிறது.
Animguase nka wo, Sidon, ne wo, po so abandennen, efisɛ po akasa se, “Menkyemee da, na menwoo da; mentetew mmabarima anaa mmabea da.”
5 ௫ எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.
Sɛ asɛm no du Misraim a, wobedi yaw wɔ nkra a efi Tiro no ho.
6 ௬ கடற்கரைக் குடிமக்களே, நீங்கள் தர்ஷீஸ்வரை புறப்பட்டுப்போய் அலறுங்கள்.
Muntwa nkɔ Tarsis; muntwa adwo, mo a mowɔ supɔw no so.
7 ௭ ஆரம்பநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? தூரதேசம்போய் வசிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாகக் கொண்டுபோகும்.
Eyi ne mo ahosɛpɛw kuropɔn no, teteete kuropɔn no, nea wɔatu akɔtena akyirikyiri nsase so no ana?
8 ௮ கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
Hena na ɔbɔɔ atirimpɔw yi de tiaa Tiro, nea ɔkyekyɛ ahenkyɛw, nea nʼaguadifo yɛ ahenemma, na nʼadetɔnfo agye din wɔ asase so?
9 ௯ சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் அனைவரையும் கனவீனப்படுத்தவும், சேனைகளின் யெகோவாவே இதை யோசித்துத் தீர்மானித்தார்.
Asafo Awurade na ɔbɔɔ ne tirimpɔw se, ɔbɛbrɛ anuonyam mu ahomaso ase na wabrɛ wɔn a wɔagye din wɔ asase yi so nyinaa ase.
10 ௧0 தர்ஷீஸின் மகளே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை.
Yɛ wʼasase so adwuma te sɛnea wɔyɛ wɔ Nil ho no Tarsis Babea, efisɛ wunni hyɛngyinabea bio.
11 ௧௧ யெகோவா தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, இராஜ்யங்களைக் குலுங்கச்செய்தார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாகக் கட்டளைகொடுத்து:
Awurade ama ne nsa so wɔ po no so ama ahenni ahorow a ɛwɔ hɔ no repopo. Wahyɛ Kanaan ho mmara se, wɔnsɛe nʼaban.
12 ௧௨ ஒடுக்கப்பட்ட கன்னியாகிய மகளாகிய சீதோனே, இனிக் களிகூர்ந்துகொண்டிக்கமாட்டாய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.
Ɔkae se, “Wʼahurisidi no nso ha ara, Sidon Babea Ɔbabun a wɔadwerɛw wo! “Sɔre, twa kɔ Kipro; hɔ mpo worennya ahotɔ.”
13 ௧௩ கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த மக்கள் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்திரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரண்மனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.
Monhwɛ Babiloniafo asase no saa nnipa a mprempren wɔnka hwee no! Asiriafo ayɛ no baabi a nweatam so mmoa te; wosisii wɔn anotua aban bebree, wodwiriw nʼaban gui ma ɛdan nnwiriwii.
14 ௧௪ தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.
Muntwa adwo, Tarsis ahyɛn; wɔasɛe wʼaban!
15 ௧௫ அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருடங்கள் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருடங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும்.
Saa bere no wɔrenkae Tiro mfe aduɔson a ɛyɛ ɔhene nkwanna. Nanso mfe aduɔson akyi no, nea ɛbɛto Tiro no bɛyɛ sɛnea ɛwɔ oguamanfo no dwom mu no:
16 ௧௬ மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு.
“Ma sankuten no so, pase fa kuropɔn no mu, oguamanfo a wɔnnkae wo; bɔ sankuten no yiye, to nnwom bebree, sɛnea wɔbɛkae wo.”
17 ௧௭ எழுபது வருடங்களின் முடிவிலே யெகோவா வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் லாபத்திற்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள அநேக தேசங்களுடனும் வேசித்தனம்செய்யும்.
Mfe aduɔson akyi, Awurade ne Tiro bedi. Ɔbɛsan akodi ne paa sɛ oguamanfo na ɔne ahenni a ɛwɔ asase so nyinaa adi gua.
18 ௧௮ அதின் வியாபாரமும், அதின் லாபமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாகச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; யெகோவாவுடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல உடைகளை அணியவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.
Nanso nea obenya ne ne mfaso nyinaa wɔde bɛto hɔ ama Awurade; wɔremmoaboa ano na wɔremfa nsie. Ne mfaso no bɛkɔ wɔn a wɔsom wɔ Awurade anim no nkyɛn, na wɔanya aduan bebree ne ntade pa.