< ஏசாயா 20 >
1 ௧ சேனாதிபதி தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்திற்கு வந்து, அஸ்தோத்தின்மேல் போர்செய்து, அதைப் பிடித்த வருடத்திலே,
Године које дође Тартан на Азот, кад га посла Саргон цар асирски, те би Азот и узе га,
2 ௨ யெகோவா ஆமோத்சின் மகனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் இடுப்பிலிருக்கிற சணலாடையை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற காலணிகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடந்தான்.
У то време рече Господ преко Исаије сина Амосовог говорећи: Иди, скини кострет са себе, и изуј обућу с ногу својих. И учини тако и иђаше го и бос.
3 ௩ அப்பொழுது யெகோவா: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்று வருடத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடக்கிறதுபோல,
Тада рече Господ: Како иде слуга мој Исаија го и бос за знак и чудо шта ће бити до три године Мисиру и етиопској,
4 ௪ அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய வாலிபர்களையும் முதியோரையும், ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக எகிப்தியருக்கு வெட்கமுண்டாக, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
Тако ће одвести цар асирски у ропство Мисирце, и Етиопљане у сужањство, децу и старце, голе и босе и голих задњица, на срамоту Мисирцима.
5 ௫ அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:
И препашће се и посрамиће се од етиопске, узданице своје, и од Мисира, поноса свог.
6 ௬ இதோ, அசீரிய ராஜாவின் முகத்திற்குத் தப்புவதற்காக நாங்கள் நம்பி, உதவிக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்வார்கள் என்றார்.
И рећи ће тада који живе на овом острву: Гле, то је узданица наша, ка којој притецасмо за помоћ да се сачувамо од цара асирског; како ћемо се избавити?