< ஏசாயா 2 >
1 ௧ ஆமோத்சின் மகனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும்குறித்துக் கண்ட காட்சி.
Слово, которое было в видении к Исаии, сыну Амосову, о Иудее и Иерусалиме.
2 ௨ வரும்நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் அமைக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசத்தார்களும் அதற்கு ஓடிவருவார்கள்.
И будет в последние дни, гора дома Господня будет поставлена во главу гор и возвысится над холмами, и потекут к ней все народы.
3 ௩ திரளான மக்கள் புறப்பட்டுவந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.
И пойдут многие народы и скажут: придите, и взойдем на гору Господню, в дом Бога Иаковлева, и научит Он нас Своим путям и будем ходить по стезям Его; ибо от Сиона выйдет закон, и слово Господне - из Иерусалима.
4 ௪ அவர் தேசங்களிடையே நியாயந்தீர்த்து, திரளான மக்களின் வாக்குவாதங்களைத் தீர்த்துவைப்பார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள்; நாட்டிற்கு விரோதமாக நாடு பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் போர்ப்பயிற்சி எடுப்பதுமில்லை.
И будет Он судить народы, и обличит многие племена; и перекуют мечи свои на орала, и копья свои - на серпы: не поднимет народ на народ меча, и не будут более учиться воевать.
5 ௫ யாக்கோபின் வம்சத்தாரே, யெகோவாவின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.
О, дом Иакова! Придите, и будем ходить во свете Господнем.
6 ௬ யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய மக்களைக் கைவிட்டீர்; அவர்கள் கிழக்குத் நாடுகளின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தர்களைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய மக்கள்மேல் பிரியப்படுகிறார்களே.
Но Ты отринул народ Твой, дом Иакова, потому что они многое переняли от востока: и чародеи у них, как у Филистимлян, и с сынами чужих они в общении.
7 ௭ அவர்களுடைய தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்களுடைய தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய இரதங்களுக்கும் முடிவில்லை.
И наполнилась земля его серебром и золотом, и нет числа сокровищам его; и наполнилась земля его конями, и нет числа колесницам его;
8 ௮ அவர்களுடைய தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளாலும், தங்கள் விரல்களாலும் உருவாக்கிய சிலைகளைப் பணிந்துகொள்கிறார்கள்.
и наполнилась земля его идолами: они поклоняются делу рук своих, тому, что сделали персты их.
9 ௯ சிறியவனும், பெரியவனும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீராக.
И преклонился человек, и унизился муж, - и Ты не простишь их.
10 ௧0 யெகோவாவின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.
Иди в скалу и сокройся в землю от страха Господа и от славы величия Его.
11 ௧௧ மனிதர்களின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனிதர்களின் வீணான பிடிவாதமும் தணியும்; யெகோவா ஒருவரே நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்திருப்பார்.
Поникнут гордые взгляды человека, и высокое людское унизится; и один Господь будет высок в тот день.
12 ௧௨ அனைத்தும் தாழ்த்தப்படுவதற்காக சேனைகளுடைய யெகோவாவின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,
Ибо грядет день Господа Саваофа на все гордое и высокомерное и на все превознесенное, - и оно будет унижено,
13 ௧௩ லீபனோனிலுள்ள உயரமும் உயர்ந்ததுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும்,
и на все кедры Ливанские, высокие и превозносящиеся, и на все дубы Васанские,
14 ௧௪ உன்னதமான எல்லா மலைகளின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும்,
и на все высокие горы, и на все возвышающиеся холмы,
15 ௧௫ உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், பாதுகாப்பான எல்லா மதிலின்மேலும்,
и на всякую высокую башню, и на всякую крепкую стену,
16 ௧௬ தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், அனைத்துச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.
и на все корабли Фарсисские, и на все вожделенные украшения их.
17 ௧௭ அப்பொழுது மனிதர்களின் மேட்டிமை தாழ்ந்து, மனிதர்களின் வீறாப்புத் தணியும்; யெகோவா ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.
И падет величие человеческое, и высокое людское унизится; и один Господь будет высок в тот день,
18 ௧௮ சிலைகள் முற்றிலுமாக ஒழிந்துபோம்.
и идолы совсем исчезнут.
19 ௧௯ பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
И войдут люди в расселины скал и в пропасти земли от страха Господа и от славы величия Его, когда Он восстанет сокрушить землю.
20 ௨0 பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,
В тот день человек бросит кротам и летучим мышам серебряных своих идолов и золотых своих идолов, которых сделал себе для поклонения им,
21 ௨௧ மனிதன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி சிலைகளையும், தன் பொன் சிலைகளையும், மூஞ்சூறு எலிகளுக்கும் வெளவால்களுக்கும் எறிந்துவிடுவான்.
чтобы войти в ущелья скал и в расселины гор от страха Господа и от славы величия Его, когда Он восстанет сокрушить землю.
22 ௨௨ நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள்; மதிக்கப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
Перестаньте вы надеяться на человека, которого дыхание в ноздрях его, ибо что он значит?