< ஏசாயா 18 >
1 ௧ எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் இறக்கைகளுடையதும்,
Jaj a szárnysuhogás országának, a mely Szerecsenország folyóin túl van;
2 ௨ கடல்வழியாகத் தண்ணீர்களின்மேல் நாணல் படகுகளிலே பிரதிநிதிகளை அனுப்புகிறதுமான தேசத்திற்கு ஐயோ, வேகமான தூதர்களே, அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் உயர்ந்து இருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான மக்களிடத்திற்குப் போங்கள்.
A mely követeket küld a tengeren gyékényből csinált tutajokon, vizek színén. Menjetek el gyors hírnökök, a magas és derék néphez, a néphez, a mely rettenetes mióta van és ezután is; a hatalmas és hódító néphez, a melynek földét folyók hasítják át.
3 ௩ பூமியில் குடியிருக்கிறவர்களும், தேசத்து மக்களுமாகிய நீங்களெல்லோரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.
Föld kerekségének minden lakói és földnek lakosai meglássátok, mikor a hegyeken zászló emelkedik, és hallgassatok, ha kürt szól!
4 ௪ நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் விழும் சூடான வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து வெப்பத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் இருப்பிடத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று யெகோவா என்னுடனே சொன்னார்.
Mert ezt mondá az Úr nékem: Nyugodtan nézem sátoromból verőfényes melegnél, harmatozó felhőnél aratás hévségében.
5 ௫ திராட்சைச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றி காய்க்கிற காய்கள் பிஞ்சாக இருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே காய்ப்புக்களை அறுத்துக் கொடிகளை வெட்டி அகற்றிப்போடுவார்.
Mert aratás előtt, ha a virágzás véget ér, és a virág érő fürtté lészen, levágja a vesszőket metszőkésekkel, és a kacsokat eltávolítja és lemetszi.
6 ௬ அவைகள் ஏகமாக மலைகளின் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பறவைகள் அதின்மேல் கோடைக்காலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மழைக்காலத்திலும் தங்கும்.
Mind ott hagyatnak a hegyek madarainak és a föld állatainak, és a madarak rajtok nyaralnak, és a föld minden állatai rajtok telelnek.
7 ௭ அக்காலத்திலே அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான தேசமானது, சேனைகளின் யெகோவாவின் நாமம் தங்கும் இடமாகிய சீயோன் மலையில் சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.
Abban az időben ajándékot viszen a seregek Urának a magas és derék nép; a nép, a mely rettenetes, mióta van és ezután is, a hatalmas és hódító nép, a melynek földét folyók hasítják át; a seregek Ura nevének helyére, Sion hegyére.